நகைச்சுவை; இரசித்தவை 13
கணவன்: "என்னடி சாம்பார்ல ஒரே சில்லறைக்
காசா கிடக்குது?"
மனைவி: "நீங்கதானே சாம்பார்ல கொஞ்சம்
சேஞ்ச் வேணும்னு சொன்னீங்க!"
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
திருடன் 1: "ஒரு வீட்டுல திருடும்போது தூங்கிட்டு
இருந்தவர் காலை தெரியாமல் மிதிச்சிட்டேன்"
திருடன் 2: ''திருடன்-னு அலறியிருப்பாரே?''
திருடன் 1: " 'கால் வலிக்கு இதமா இருக்கு; ஒரு
அரை மணி நேரம் மிதிச்சிட்டு அப்புறம் திருடு'ன்னு
சொல்லிட்டார்"
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஒருவர் : "உங்க மனைவி எடுத்தெறிஞ்சி பேசுவாங்கன்னு
சொல்றீங்களே... அந்த சமயத்தில நீங்க என்ன பண்ணுவீங்க?"
மற்றவர்: "எரிகிற பாத்திரங்களை கேட்ச பிடித்து அவளை
வெறுப்பேத்துவேன்."
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பூக்கும் 2011 புத்தாண்டில் அனைவரும் மகிழ்ச்சியோடு,
வளமோடு, நலமோடு வாழ இறைவன் அருள் புரியட்டும்
என்று பிரார்த்திக்கிறேன். அனைவருக்கும் இனிய
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!
(படத்தில்: பேபி அனௌஸ்கா அஜித்குமார்)
...பல்சுவை பக்கம்!
.
Thursday, December 30, 2010
நகைச்சுவை; இரசித்தவை 13
Sunday, December 5, 2010
ஜிகினா 3 : குஷ்புவுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?
விகடன் வலையோசையில் வந்த இந்தப் பதிவை
இங்கே கிளிக் செய்து படிக்கலாம்.
ஜிகினா 3 : குஷ்புவுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?
சாவி அவர்களின் 'சாவி' வார இதழை 'அஷோக்
உமா பப்ளிகேஷன்' வெளியிட்டுவந்தது. இன்னும்
திசைகள் (ஆசிரியர் மாலன்), மோனா (மாத நாவல்),
பூவாளி (மாத டைஜஸ்ட்) மற்றும் 'சுஜாதா' எனும்
மகளிர் இதழ் ஆகியனவற்றையும் இந்த பப்ளிகேஷன்
வெளியிட்டது.
பின்னாட்களில் இந்தப் பத்திரிகைகள் நிறுத்தப்பட்டாலும்
'பார்வதி பப்ளிகேஷன்ஸ்' நிறுவனத்தினர் 'சுஜாதா'
என்ற பெயரில் மாத நாவல் பத்திரிகையை ஆரம்பித்தனர்.
('பூந்தளிர்' சிறுவர் இதழை தமிழில் வெளியிட்டவர்களும்
இவர்களே!)
இந்த சுஜாதா இதழில் கேள்வி பதில் பகுதியும் உண்டு.
சிறப்பான ஒரு கேள்விக்கு பரிசும் உண்டு.
ஒரு முறை நான் எழுதிய கேள்வியையும் அதன்
பதிலையும் பிரசுரித்து, சிறந்த கேள்வி என்று எனது
கேள்விக்கு பரிசும் அறிவித்து கேள்வியின்மேலேயே
எனது பெயர், ஊரை முழு முகவரியுடன் பிரசுரித்திருந்தார்கள்
இந்த மாத நாவல் இதழ் வெளியாகி சுமார் நான்கு
அல்லது ஐந்து நாட்களுக்குப்பின் எனக்கு ஒரு
'இன்லான்ட் லெட்டர்' வந்தது. திருப்பத்தூரிலிருந்து
குணசேகரன் அனுப்பியிருந்தார் என்று ஃபிரம் அட்ரஸ்
பார்த்து தெரிந்துகொண்டேன். அப்படி ஒரு
ந(ண்)பரை எனக்குத் தெரியாதே என்ற யோசனையுடனே
கடிதத்தைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தேன்.
"அன்புள்ள குஷ்பு அவர்களுக்கு" என்று ஆரம்பமாக
எழுதியிருந்ததும் அதிர்ச்சியாகி மீண்டும் 'டூ அட்ரஸ்'
பார்த்தேன். சரியாக என் முகவரிதான் எழுதப்பட்டிருந்தது.
'சரிதான்' என்று மேற்கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.
அன்புள்ள குஷ்பு அவர்களுக்கு,
எனது பெயர் பி.குணசேகரன்.
நான் உங்களது ரசிகன். உங்களது எல்லாப் படத்தையும்
பார்த்து விடுவேன். எந்தப் புதுப்படம் நீங்கள் நடித்து
வந்தாலும் பார்த்துவிடுவேன். முதல் நாளே
பார்த்துவிடுவேன். திரும்பத் திரும்பப் பார்ப்பேன்.
நீங்கள் அழகாயிருக்கிறீர்கள். நன்றாக நடிக்கிறீர்கள்.
உங்கள் பாட்டு கேசட் வாங்கி அடிக்கடி பாட்டு
கேட்பேன்.
நான் சிவகங்கை பக்கத்தில் திருப்பத்தூர் என்ற ஊரில்
இருக்கிறேன். எட்டாம் வகுப்பு படிக்கிறேன். என் தம்பி
ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவனுக்கும் உங்க
படம்லாம் பிடிக்கும். எங்க அப்பா ரைஸ் மில்
வச்சிருக்காரு. அவருக்கும் உங்க படம்லாம்
பிடிக்கும். அதனால், உங்க ஃபோட்டோ ஒன்னு
கண்டிப்பா எனக்கு அனுப்பி வைக்கவும்.
இப்படிக்கு,
பி.குணசேகரன்.
இன்ட்லாந்து லெட்டர் உள்ளே உள்ள செய்தி எல்லாம்
குஷ்புவுக்கு. மேலே அட்ரஸ் மட்டும் எனது பெயரும்
எனது முகவரியும். சிறிது யோசனை செய்த நான்
மறுபடியும் சுஜாதா இதழைத் தேடி எடுத்துப் பார்த்தேன்.
அட, முதல் கேள்வி நடிகை குஷ்பு பற்றி ஒரு வாசகர்
எழுப்பிய கேள்வியும் அதற்கான பதிலும் முடிந்து
அதைத் தொடர்ந்து எனது முழு முகவரி மற்றும்
கேள்வியும் பிரசுரமாகியிருந்தது. ஆக, என்
முகவரியைத்தான் குஷ்பு முகவரி என்று நினைத்து,
அந்தப் பையன் லெட்டரை எனக்கு அனுப்பிவிட்டான்
என்று புரிந்து கொண்டேன். எனவே, அவனுக்கு பதில் எழுதினேன்.
" தம்பி, அது குஷ்பு முகவரியில்லை;
என்னுடைய முகவரி. அதனால், நீ
வேறு கடிதம் எழுதி குஷ்புவின் முகவரிக்கு
அனுப்பு. 'நடிகை குஷ்பு, சென்னை ' என்று போட்டு அனுப்பு.
அல்லது நானே விசாரித்து குஷ்புவின் முகவரி அடுத்த
கடிதத்தில் எழுதி அனுப்புகிறேன். குஷ்பு ஃபோட்டோ
என்னிடம் இல்லை; வேண்டுமெனில் என்னுடைய
ஃபோட்டோவை உனக்கு அனுப்பி வைக்கிறேன்."
-என்று பதில் எழுதி 'நன்றாகப் படிக்கணும்' என
அறிவுரைகள் எழுதி, (மாட்டினாண்டா ஓர் அடிமை!)
போஸ்ட் செய்துவிட்டு அதை மறந்தும்விட்டேன்.
அடுத்த ஐந்தாறு தினங்களில் அந்தப் பையனிடமிருந்து
பதில் கடிதம் வந்தது.
"அன்பிற்கும் பரியாதைக்குமுரிய அண்ணாவிற்கு,
(நல்ல பாசக்காரப் பையனாயிருக்கானே!)
வணக்கம். உங்க கடிதம் கிடைத்தது.
நடிகை குஷ்பு என்று நினைத்து உங்க முகவரிக்கு
கடிதம் அனுப்பிவிட்டேன். மன்னிக்கவும்.
(நல்ல பண்புள்ளவனாயிருக்கானே!)
குஷ்புவோட அட்ரஸ் அனுப்புறதா எழுதியிருந்தீங்க.
அப்படி குஷ்பு அட்ரஸ் அனுப்பாட்டியும் பரவாயில்லை.
உங்க ஃபோட்டோவை தயவு செய்து அனுப்பிடாதீங்க.
இப்படிக்கு,
பி.குணசேகரன்."
(அடேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் ....!.)
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

Friday, November 26, 2010
ஜிகினா 2: பத்து புரோட்டா பார்சல்!
பத்து புரோட்டா பார்சல்!
பஸ் ஸ்டாண்ட் புத்தகக் கடையில் புத்தகங்கள்
புரட்டிக் கொண்டிருந்தேன். அப்பொழுது ஒருவர்
வந்தார்.
"ரமேஷு! அரை கிலோ ஆட்டா மாவு பாக்கெட்
ஒன்னு கொடுங்க" என்று கேட்டார்.
கடைக்காரர் ரமேஷ் (விழித்துவிட்டு) : " ரமேஷு என்
பேருதான். ஆனால், ஆட்டா மாவு, அது அடுத்த மளிகைக் கடை"
அந்த வாடிக்கையாளர் : "ஓ... ஆட்டா மாவு வாங்கினால்
ஒரு குங்குமம் பத்திரிகை ஃப்ரீன்னாங்களே, ரேடியோவிலே! "
ரமேஷ்: "தம்பி! சாருக்கு ஒரு குங்குமமும் ஒரு
ஆட்டா பாக்கெட்டும் குடுப்பா. சார், ஆட்டா மாவு
கேட்டிங்க, கொடுத்திட்டேன். அடுத்த வாரம் வந்து,
'10 புரோட்டா பார்சல்; அப்படியே சட்னி-சாம்பார்'
அப்படினுலாம் ஆர்டர் பண்ணாதீங்க. அப்புறம்,
மளிகைக் கடையை சொன்னமாதிரி காளியாக்குடி,
ஆரியபவன்லாம் என்னாலக் காட்டிக்கிட்டிருக்க முடியாது.
ஆட்டா பாக்கெட்ட எடுத்து , குடுத்து கையெல்லாம்
பிசுபிசுன்னு மாவு. அதுக்கு பதிலா தண்ணி பாக்கெட்டாவது
ஃப்ரியா கொடுத்திருக்கலாம்"
அதே வாடிக்கையாளர்: "அட தண்ணி பாக்கெட் ஃப்ரியா?"
ரமேஷ்: "சார் அது அடுத்த வாரம், இப்ப நீங்க போங்க சார்!"
நண்பர் சின்னஞ்சிறு கோபு சார் வருகிறார்.
சி.சி.கோபு: "என்ன என்னமோ தண்ணி பாக்கெட், அப்படின்னு
பேசினாமாதிரி இருந்ததே?"
நான்: "ஏன் சார், ஆட்டா மாவுலாம் ஃபிரியா
கொடுக்கறாங்களே, புக்கு வாங்கும்போது நோட் கொடுக்கலாமே?"
சி.சி.கோபு: " நோட்? கரன்சி நோட்? அப்படின்னா
புக்கு அசசடிக்கிறவங்களே நோட்டும் அச்சடிச்சா
அந்த மாதிரி பத்து ரூபாய்க்கு புக்கு வாங்கும்போது
இருபது ருபாய் நோட்டு இலவசமாய் கொடுக்கலாம்.
இல்லேன்னா அவிங்க நோட்டு எல்லாம் வேட்டுத்தான்.
அப்புறம் நடு ரோட்டுக்குத்தான் வரணும். நல்ல
ஐடியாக் கொடுக்கறிங்களே,!!!"
நான்: "ரமேஷ்! எனக்கு ஒரு ஆட்டா மாவு பாக்கெட்
குடுங்க!"
ரமேஷ்: " 'அதிரடி' பத்திரிகை வாங்கினால்
உருட்டுக்கட்டையால ஒரு அடி ஃப்ரியாம்; வேணுமா சார்?"
நான்: " அதிரடி' பத்திரிகை மட்டும் கொடுங்க; ஃப்ரி
நீங்களே வெச்சிக்குங்க..."
வாடிக்கையாளர்: " ரமேஷ், அந்த ஃப்ரி தண்ணி பாட்டிலு..."
ரமேஷ்: "அடுத்த வாரம் நானே எடுத்து வைக்கிறேன் சார்,
நீங்க இன்னும் கிளம்பலையா ?
(எங்களிடம் திரும்பி) சார், அப்பா வர்றாங்க..."
சி.சி.கோபு & நான்: " சரி அப்ப வர்றோம் நாங்க "
அரட்டை தொடர(முடிய)வில்லையே என்று வருத்ததோடு
புறப்பட்டோம் அங்கிருந்து.
டிஸ்கி: பெயர் குறிப்பிடப்பட்ட பத்திரிகை தவிர ,
மற்ற உரையாடல்கள் யாவும் இடுகையின் சுவை
கூட்டலுககான உண்மையற்ற உவமைகள்தான் அன்றி,
யாரையும் சம்பந்தப்படுத்தவில்லை.
ஜிகினா - 3-ல் : குஷ்புவுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?

Tuesday, November 16, 2010
75. ஜில்ஜில் ஜிகிர்தண்டா!
ஜில்ஜில் ஜிகிர்தண்டா!
இந்த இடுகையில் இரு இனிப்பான சங்கதிகள்!
இனிப்பு 1 :
இதை 75 -ஆவது இடுகையாய் இடுகிறேன். ஆதரவுகரம் நீட்டிவரும் அனைவருக்கும் எனது மனங்கனிந்த நன்றிகள். உங்கள் ஊக்கம், உற்சாகம் இவையே காரணங்கள்!
இனிப்பு 2 :
இன்சுவை குளிர்பானம் 'ஜிகிர்தண்டா'. இதன் செய்முறை இங்கே பதிவிடுகிறேன்.
இந்தக் குறிப்பை வெளியிட்ட குங்குமம் (11.01.2010)
இதழுக்கும் வழங்கிய திருமதி ரேவதி சண்முகம்
அவர்களுக்கும் நன்றிகள்.
மதுரையின் புகழ்பெற்ற 'ஜிகிர்தண்டா'வை நமது வீடுகளில்
தயார் செய்ய முடியும்? அதில் என்ன ஸ்பெஷல்?
பதில் சொல்கிறார் சமையல் கலை நிபுணர் ரேவதி சண்முகம்:
நிறைய பொறுமையும் ஆர்வமும் இருந்தால்
ஜிகிர்தண்டாவை வீட்டிலேயே செய்யலாம். அதே
ஒரிஜினல் சுவையுடன் வேண்டுமானால், பாசந்தியும்
குல்ஃபியும் கடல்பாசியும் முக்கியம்.
பாசந்திக்கு:
ஒரு லிட்டர் ஃபுல் க்ரீம் பாலைக் காய்ச்சவும். குறைந்த தணலில் கொதிக்கவிட்டு, மேலே படிகிற ஆடையைத் தனியே ஒரு கிண்ணத்தில் சேகர்க்கவும். பால் நன்கு இறுகியதும், அதில் அரை ஆழாக்கு சர்க்கரை சேர்க்கவும். பால் மீண்டும் நீர்த்துக் கொள்ளும்.
மறுபடி அது கெட்டியாகிற வரை காய்ச்சி, இறுகி வரும்போது, சேகரித்து வைத்துள்ள ஆடையைச் சேர்த்து, ஆற வைக்கவும். சீவிய பாதாம் தூவி, பாசந்தியாக இதை அப்படியேவும் பரிமாறலாம்.
குல் ஃபி ஐஸ்கிரீமுக்கு:
ஒரு லிட்டர் பாலைக் காய்ச்சவும். கெட்டியானதும், முக்கால் ஆழாக்கு சர்க்கரை சேர்த்து மீண்டும் காய்ச்சவும். குழம்பு பதத்திற்கு வரும்போது இறக்கி, ஓரங்கள் நீக்கி, மிக்சியில் உதிர்த்த பிரெட் தூவிக் கலக்கவும். அதன்மேல் ஏலக்காய் தூள், பாதாம் சேர்த்து நன்கு அடித்துக் கலக்கி, ஆற வைக்கவும். குல்ஃபி மோல்டு அல்லது சின்ன கிண்ணத்தில் ஊற்றி, செட் ஆகிற வரை வரை ஃப்ரீசரில் வைக்கவும்.
*25 கிராம் கடல் பாசியை 10 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு வெந்நீரில் அதைக் கொட்டினால் கரைந்து விடும். அதை ஒரு தட்டில் ஊற்றி ஆற வைத்தால் செட் ஆகி விடும். பிறகு அதை சிறிய துண்டுகளாக வெட்டி தனியே வைக்கவும்.
உயரமான ஒரு டம்ளரில் முதலில் பாசந்தி விடவும்.
அதன் மேல் பொடியாக நறுக்கிய கடல் பாசி போடவும்.
அதன் மேல் குல்ஃபி ஐஸ் கிரீம் போடவும்.
அதன் மேல் நன்னாரி சிரப் சிறிது ஊற்றவும்.
இதே மாதிரி இரண்டு லேயர்கள் ஒவ்வொன்றையும்
சேர்க்கவும். கடைசியாக பொடியாக நறுக்கி வறுத்த
பாதாம், முந்திரி சேர்த்து அப்படியே சுவைக்கலாம்.
ரொம்பவும் குளிர்ச்சியான பானம் ஜிகிர்தண்டா. காரணம்
அதில் சேர்க்கிற கடல் பாசி. வயிற்றுப் புண்களை ஆற்றும்
குணமும் அதற்கு உண்டு. வெயில் காலத்தில் சாப்பிட ஏற்றது.

Monday, November 1, 2010
ஜிகினா 1: விவ(கா)ரமான வியாபாரிகள்!
ஜிகினா 1: விவ(கா)ரமான வியாபாரிகள்!
குமுதம் விலை 3 ரூபாய்! அடுத்தடுத்து 7 அல்லது 8
கடைகளில் விசாரித்துவிட்டேன். ஆனால் குமுதம்
கிடைக்கவில்லை. "வித்துப்போச்சு", "சரியாப்போச்சு" ,
தீர்ந்துப்போச்சு" என்றுதான் எல்லாக் கடைகளிலும்
சொன்னார்களே அன்றி, புத்தகம் எங்குமே கிடைக்கவில்லை.
அடுத்ததாய் ஒரு கடையில் விசாரித்துவிட்டு, கிடைக்காமல்
யோசனையாய் நின்று கொண்டிருந்தபோது, அந்த வழியே
வந்துகொண்டிருந்த நண்பன், "என்ன நிஜாம் இங்கே
யோசனையா நிக்கிறமாதிரி தெரியுதே" என்று கேட்டான்.
அவனிடம் விவரத்தை சொன்னேன். அந்தக் கடையைத்
திரும்பி ஒரு முறை பார்த்துவிட்டு, "கடைக்காரர்கிட்டப்
போயி 'குமுதம் மட்டும் தாங்க' என்று கேள்" என்றான்.
நான் அவனை ஙே என்று விழித்துப் பார்த்தேன்.
"போ! மறுபடியும் போய் நான் சொன்னமாதிரி கேள்" என்றான்.
நான் தயக்கமாய் கடைக்காரரிடம் சென்று, "குமுதம்
மட்டும் கொடுங்க" என்று கேட்டேன். அலமாரி
உள்ளிருந்து அடுக்கியிருந்த குமுதத்தில் ஒன்று
எடுத்து என்னிடம் கொடுத்தார்.
அட! வாங்கிப் பார்த்தேன். 'இந்த இதழுடன் விக்ஸ்
வேபோரப் ஒன்று இலவசம்' என்று அட்டையில்
போட்டிருந்ததைப் பார்த்து கடைக்காரரிடம், 'அண்ணே..."
என்று ஆரம்பித்தேன். "தம்பி, குமுதம் மட்டும் கேட்டிங்க.
வாங்கிட்டிங்கள்ல? போய்ட்டேயிருங்க!" என்று விரட்டினார்
அவர்.
நண்பன் விளக்கம் சொன்னான்.
"குமுதம் 3 ரூபாய். விக்ஸ் வேபோரப்பும் 3 ரூபாய்! குமுதம்
வித்தா 30 பைசா கிடைக்கும். விக்ஸ் டப்பா ஃப்ரியாக்
கொடுக்கணும். அதனால் குமுதத்தை உள்ள்ள்ளே
எடுத்து ஒளிச்சிட்டு, விக்ஸை எடுத்து ஷோகேஸ்ல
வரிசையா அடுக்கிட்டாங்க. குமுதம்
வித்துப்போயிடுச்சின்னு சொல்லிடுறாங்க. சிலபேரு
குமுதம் மட்டும் கொடுன்னு கேக்குறவங்களுக்கு அதை
மட்டும் கொடுத்திடறாங்க. விக்ஸ் வேபோரப்பை ஸ்டாக்
பண்ணிட்டு, அதை 3 ரூபாய்க்கு வித்திடுவாங்க. 2 ரூபாய்
70 பைசா அடக்கவிலை குமுதத்தவச்சி 6 ரூபாய்
சம்பாதிக்கிறாங்க. இதுதான் விஷயம்." இப்படி நண்பன்
சொன்னதைக் கேட்டு அசந்துபோனேன். (122% இலாபம்.)
அடுத்த முறை இலவசத்தைக் கொடுக்கும்போது,
பொருளைத் தனியாகக் கொடுக்காமல்,
பாலித்தீன் கவரில் குமுததையும் இலவசப்
பொருளையும் போட்டு பேக் செய்து கொடுத்து
விட்டது குமுதம். இப்போது வியாபாரிகள்
பாலித்தீன் கவரிலிருந்து எடுத்து குமுததை
ஒளித்து வைக்கவுமில்லை; இலவசப்
பொருளை ஷோகேசில் அடுக்கவுமில்லை.
காரணங்கள்:
1. குமுதத்தின் விலையோடு ஒப்பிடுகையில்
இலவசப் பொருளின் விலை மிகவும் மலிவு.
2. முன் நடந்த சம்பவத்தின்போதே கடைக்காரர்களை
குமுதம் ஏஜெண்ட் , இனி இதுபோல்
செய்யக்கூடாதென எச்சரிக்கை செய்துவிட்டார்.
பரிதாப வியாபாரிகள்!!!
ஜிகினா 2 -ல் '10 புரோட்டா பார்சல்!'
அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

Wednesday, October 20, 2010
நகைச்சுவை; இரசித்தவை 12
நகைச்சுவை; இரசித்தவை 12
========================
"தலைவரோட வெளிநாட்டுக் காருல என்ன எழுதியிருக்கு?"
" 'BE INDIAN; BUY INDIAN'-னு எழுதியிருக்கு!"
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
"டாக்டர்! எனக்கு உடம்பு குண்டாயிட்டே போகுது.
உடம்பு குறையறதுக்கு என்ன செய்யணும்னு
சொல்லுங்க, டாக்டர்!"
"ஒரு மாதத்துக்கு தினமும் காலை, மதியம், இரவு
மூணு வேளையும் மூணு பிரட் ஸ்லைஸ் சாப்பிடுங்க.
ஒரு மாதம் கழித்து மறுபடியும் வாங்க!"
"சரி டாக்டர். மூணு துண்டு பிரட் சாப்பிடச்
சொன்னீங்களே, அது எப்ப சாப்பிடணும்
சாப்பாட்டுக்கு முந்தியா, சாப்பாட்டுக்கு பிந்தியா?"

"ராஜு, இந்தக் காலண்டர் எங்க மாட்டலாம் சொல்லு?"
"அப்பாதான் டெய்லி காலண்டர்லருந்து தாள்
கிழிச்சி, கிழிச்சி போடுவாரு. அவருக்கு எட்டாத
உயரத்தில காலண்டர மாட்டும்மா!"

Sunday, October 10, 2010
பதிவுலகில் நிஜாம் பக்கம்!
'குட் பிளாக்ஸ்' பகுதியில் இந்த இடுகையை இணைத்துள்ள 'யூத்ஃபுல் விகடனு'க்கு நன்றி!!
1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
NIZAMUDEEN (அ. முஹம்மது நிஜாமுத்தீன். )
2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
ஆமாம், எனது உண்மையான பெயர்தான்.
3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி....
காலடி எடுத்து வைத்ததா...?
முதல்ல 'தமிழ்குடும்பத்'தில் எழுதிக் கொண்டிருந்தேன்.
அப்புறம் வலைப்பூக்களில் பின்னூட்டங்கள். தொடர்ந்து
வலைப்பூ...
4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
முதலில் அன்பர்களின் வலைப்பூக்களில் கமெண்ட்
போட்டுக் கொண்டிருந்தேன். அடுத்ததா திரட்டிகளில்
கொண்டு இணைத்தேன். இப்போ நம்மையும் நம்பி ஒரு
நட்புவட்டம் வந்து அன்போடு ஆதரவு தர்றாங்களே...
5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
இந்த வலைப்பதிவில் எனது சொந்த அனுபவங்களை,
நிறையவே பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அதை
சுவாரஸ்யமாய் படித்து பல பதிவர்கள் 'இப்படியெல்லாம்
நடக்குதா?" என்று வியப்போடு கேட்டுமிருக்கிறார்கள். இதுதான் விளைவு.
6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
நண்பர்களை சம்பாதிப்பதற்காகவும் அவர்களுக்கு நன்றாக பொழுது போவதற்காகவும் இந்தப் பதிவுகளை எழுதுகிறேன்.
7. நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
ஒன்னு போதுமே!!!
8. மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
மற்றவர்களின் மனம் வேதனைப்படும்படி எழுதுபவர்களின்மேல் கோபம் ஏற்பட்டதுண்டு. ஆனால், சிலரிடத்தில் பொறாமை ஏற்பட்டதில்லை; வியப்புதான் ஏற்பட்டிருக்கிறது. தினம் பதிவுகள் தரும்
வேலன் சார், 500 ௦௦பதிவுகளுக்குமேலும் அசராமல்
எழுதிக்கொண்டிருக்கும் மாயவரத்தான், பன்முகக்
கலைஞர் சுமஜ்லா -- என்று வியப்புக்கள் ஏற்படுத்தும் பல பதிவர்கள் உண்டு.
9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி...
அவுங்கதான் எனக்கு வலைப்பூ ஆரம்பிங்கன்னு ஐடியா
கொடுத்தாங்க; முதலாவது கமெண்ட்டும் போட்டாங்க. அந்தப் பாராட்டு எனக்கு
அடுத்தடுத்து எழுத உதவியாயிருந்தது. நன்றி சகோதரி சுமஜ்லா.
10.கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
என்னைப் பற்றியா...? எனது சிறு வயது முதலே பத்திரிகைகளில் நிறைய எழுதியும்
பரிசுகள் பெற்றும் இருக்கிறேன். இப்போ உங்கள் ஆதரவோடு வலைப்பூ. வேற ஏதாவது கேள்விகள் இருக்கா?
(டிஸ்கி: தொடர் பதிவிற்கு எனக்கு அழைப்பு விடுத்த சகோதரி அன்னுவிற்கு நன்றி!)
அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
Friday, October 1, 2010
குண்டப்பா & மண்டப்பா (4)
குண்டப்பா & மண்டப்பா (4)
குண்டப்பா & மண்டப்பா (3) இங்கே!
மண்டப்பாவை, குடும்பத்தோடு விருந்துக்கு வருமாறு
அழைத்திருந்தார் குண்டப்பா. சம்மதித்த மண்டப்பா,
விருந்து நாளன்று தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன்
வந்திருந்தார்.
விருந்து கோலாகலமாக ஆரம்பமாகியது. தடபுடலான
சாப்பாடு. மட்டன் பிரியாணி, சிக்கன் ரோஸ்ட், தாளிச்சா,
கறி குழம்பு, பொறியல், வதக்கல், துவையல், பச்சடி,
பாயசம், பழம் என்று அமோகமாயிருந்தது சாப்பாடு.
"நல்லா சாப்பிடு; நல்லா சாப்பிடுங்க!" என்று
மண்டப்பாவையும் அவர் மனைவி, பிள்ளைகளையும்
கவனித்துக் கொண்டிருந்தார் குண்டப்பா.
சாப்பிட்டுக் கொண்டே, "சாப்பாடு எல்லா ஐட்டமும்
வெகு பிரமாதம்; நல்லா டேஸ்ட்டா இருக்கு!
உன் மனைவி சுவையாய் சமைத்திருக்கிறாங்க!" என்று
கூறிக் கொண்டே சாப்பிட்டார், மண்டப்பா.
அப்போது, "என் மனைவி எல்லா சாப்பாடும் ரொம்ப
சுவையாய் சமைப்பாள். அதிலும் ஊறுகாய்
ரொம்ப அருமையாய் செய்வாள். மாவடு ஊறுகாய்
என் மனைவி செய்தது, அஞ்சு வருஷமாய் எங்களிடம்
இருக்கு!" என்று மனைவியைப் பற்றி பெருமையாய்
மண்டப்பாவிடம் சொன்னார் குண்டப்பா.
"அப்படியா, அதை எடுத்துவரச் சொல்லு; சாப்பிட்டுப்
பார்ப்போம்" என்றார் மண்டப்பா.
"என்னது, சாப்பிட்டுப் பார்க்கணுமா!? அப்படி சாப்பிட்டு
பார்த்திருந்தால், இப்படி அஞ்சு வருஷம் வைத்திருக்க
முடியுமா???" என்று பதறினார் குண்டப்பா.
அதைக் கேட்ட மண்டப்பா விருந்து சாப்பிடுவதை
மறந்து திகைத்துவிட்டார். குண்டப்பா யாரு? அறிவுக் கொழுந்து அல்லவா!

Subscribe to:
Posts (Atom)