...பல்சுவை பக்கம்!

.

Monday, October 12, 2009

ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர் (நகைச்சுவை)ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர்
================================
ஜெர்மனி நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவர் ஹிட்லர்.
'யூதர்கள்தான் தம் நாட்டைச் சுரண்டியவர்கள்; அவர்களால்தான்
ஜெர்மானியர்கள் வறுமையில் வாடுகின்றனர்' என்ற எண்ணம்
கொண்டிருந்தார் அவர். ஆயிரக்கணக்கான யூத இன
மக்களை விஷவாயு அறைகளில் அடைத்து மிகக்
கோரமாகக் கொன்றவர்.

அவருக்கு ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை உண்டு. ஒரு
சமயம் பெரிய ஜோதிட வல்லுனர் ஒருவரை
அழைத்து வரச் சொன்னார் ஹிட்லர்.
அவரிடம், "என் ஆயுட்காலம் எப்போது முடிகிறது? நான்
எப்போது சாவேன்?" எனக் கேட்டார். ஹிட்லரின்
ஜாதகத்தை மிகத் தீவிரமாக ஆராய்ந்த ஜோதிடர்,
"யூதர்களின் பண்டிகையன்று நீங்கள் இறப்பீர்கள்.."
என்று சொன்னார்.

ஜோதிடரின் பதிலைக் கேட்ட ஹிட்லர்,
"யூதர்களுக்குத்தான் வருடம் முழுதும் பல
பண்டிகைகள் வருகின்றனவே... எந்தப்
பண்டிகையின்போது நான் இறப்பேன் என்பதைச்
சரியாகச் சொல்லுங்கள்" என்றார்.

"நீங்கள் என்றைக்கு இறக்கிறீர்களோ, அந்த நாள்
யூதர்களின் பண்டிகை நாளாக நிச்சயம்
கொண்டாடப்படும்..." என்றார் ஜோதிடர்.

அதன் பிறகு, அந்த ஜோதிடரின் கதி என்னவாயிற்றோ???

நன்றி: திரு.அந்துமணி - வாரமலர்.
மூலம் ஆங்கில நூல்.

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

12 comments:

ஸ்ரீ.கிருஷ்ணா said...

nice

NIZAMUDEEN said...

//ஸ்ரீ.கிருஷ்ணா said...
nice//

நான் படித்த சம்பவத்தைப்
இடுகை இட்டேன்.
நன்றி ஸ்ரீ.கிருஷ்ணா!

பிரியமுடன்...வசந்த் said...

good one to read...

NIZAMUDEEN said...

//பிரியமுடன்...வசந்த் said...
good one to read...//

THANKS VASANTH!

இராகவன் நைஜிரியா said...

மவனே என்ன சொன்னாலும் உசுரு போகப் போகுதுன்னு, அந்த ஜோசியர் வீட்டிலேயே தனக்கு ஜோசியம் பார்த்துகிட்டு வந்திருப்பாருங்களா?

பின்னோக்கி said...

வித்தியாசமான செய்தி. பகிர்தலுக்கு நன்றி

S.A. நவாஸுதீன் said...

அமைதிப்படை படத்தில் வரும் இதுபோன்று ஒரு காட்சி தான் ஞாபகத்திற்கு வருகிறது

NIZAMUDEEN said...

//இராகவன் நைஜிரியா said...
மவனே என்ன சொன்னாலும் உசுரு போகப் போகுதுன்னு, அந்த ஜோசியர் வீட்டிலேயே தனக்கு ஜோசியம் பார்த்துகிட்டு வந்திருப்பாருங்களா?//

ஆஹா... மெய் சொன்னீங்க இராகவன்!

NIZAMUDEEN said...

//பின்னோக்கி said...
வித்தியாசமான செய்தி. பகிர்தலுக்கு நன்றி//

தங்கள் கருத்திற்கு நன்றி பின்னோக்கி!

NIZAMUDEEN said...

//S.A. நவாஸுதீன் said...
அமைதிப்படை படத்தில் வரும் இதுபோன்று ஒரு காட்சி தான் ஞாபகத்திற்கு வருகிறது//

நன்றி S.A. நவாஸ்தீன்!

SUMAZLA/சுமஜ்லா said...

அட! போட வைக்கும் பதிவு! புதிய தகவல்!

NIZAMUDEEN said...

நன்றிங்க சுமஜ்லா!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...