...பல்சுவை பக்கம்!
.
Friday, October 16, 2009
தீபாவளியும் பாதுகாப்பும்!
தீபாவளியும் பாதுகாப்பும்!
பட்டாசுக்கள் கொளுத்தும்போது காயம்
ஏற்பட்டு அதனால் தீபாவளியின் மகிழ்ச்சியை
இழக்கச் செய்யலாமா?
தீபாவளி அன்று பட்டாசு கொளுத்தும்போது
கடை பிடித்திட வேண்டிய சில பாதுகாப்பு
முறைகள் பற்றி 'நம்ம ஊரு செய்தி'
நவம்பர் 2002 இதழில் சில குறிப்புக்கள்
படித்தேன். இந்தி ஆசிரியர் திரு.ஆர்.
சுவாமிநாதன் தொகுத்தவை. அவை:
*பட்டாசுக்களை ஒரே இடத்தில் அதிகமாக
குவித்து வைக்கக்கூடாது.
*குழந்தைகள் எடுக்கும் வகையில்
பட்டாசுக்களை வைக்ககூடாது.
*உற்பத்தியாளர் பெயர் அச்சிடப்படாத
பட்டாசுக்கள் உள்ள பெட்டியை
வாங்கக்கூடாது.
*பட்டாசுக்கள் வெடிக்கும்போது தொளதொள
மற்றும் எளிதில் தீப்பற்றும் உடைகள்
அணியக்கூடாது.
*சரவெடியை நெருக்கமான தெருக்களிலோ,
மாடி குடியிருப்புக்களின் மத்தியிலோ
வெடிக்கக்கூடாது.
*கைக்குழந்தைகள், கர்ப்பிணிகள்,
முதியவர்கள், நோயாளிகளுக்கு இடையூறு
செய்யாமல் பட்டாசுக்கள் வெடிக்க
வேண்டும்.
*கொளுத்திய பட்டாசுக்களை ஒருவரை
நோக்கிக் காட்டுவதோ, தெருவில்
எறிவதோ கூடாது.
*தீக்குச்சிகள் மூலம் வெடிகள்
கொளுத்தக் கூடாது.
*பட்டாசு கொளுத்தும்போது கவனத்தை
வேறு விஷயங்களில் செலுத்தாதீர்கள்.
தீக்காயம் ஏற்பட்டால் குளிர்ந்த நீரையோ
அல்லது ஐஸ் கட்டிகளையோ வைத்து
முதல் உதவி செய்யவேண்டும்.
இந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை
கவனத்தில் கொண்டு சிறப்புடன் தீபாவளி
கொண்டாடுங்கள். குழந்தைகள் பட்டாசு
கொளுத்தும்போது பெரியவர்கள்
மேற்பார்வை செய்துகொள்ளுங்கள்.
அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
நன்றி பாஸ்
நன்றி.
இனிய உளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்.
கும்ப வெடிகளை கைகளில் வைத்துப் பத்தவைக்கக் கூடாது என்பதையும் சேர்த்துக்கொள்ளுங்கள். அது எதிர்பாராமல் வெடிக்கும். மற்றபடி நேரத்திற்கேற்ற அறிவுறைகள் அருமை.
தீபாவளி ஸ்பெஷன் பதிவா? ரொம்ப முன்னேறிட்டீங்க!
//பிரியமுடன்...வசந்த் said...
நன்றி பாஸ்//
நன்றி வசந்த்!
//இராகவன் நைஜிரியா said...
நன்றி.
இனிய உளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்//
நன்றி ராகவன்!
//இப்படிக்கு நிஜாம்.., said...
கும்ப வெடிகளை கைகளில் வைத்துப் பத்தவைக்கக் கூடாது என்பதையும் சேர்த்துக்கொள்ளுங்கள். அது எதிர்பாராமல் வெடிக்கும். மற்றபடி நேரத்திற்கேற்ற அறிவுறைகள் அருமை.//
நன்றி நிஜாம்!
//SUMAZLA/சுமஜ்லா said...
தீபாவளி ஸ்பெஷன் பதிவா? ரொம்ப முன்னேறிட்டீங்க!//
நன்றி சுமஜ்லா!
டிப்ஸெல்லாம் சூப்பர் அண்ணா,
வெடின்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்
ஆனா அது திடீரென்று வெடிக்கும்
அதுதான் பயந்துவரும்,
//டிப்ஸெல்லாம் சூப்பர் அண்ணா,
வெடின்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்
ஆனா அது திடீரென்று வெடிக்கும்
அதுதான் பயந்துவரும்,//
என்னமோ சொன்னது, பாதியிலயே நிக்குது.
இருப்பினும் நன்றி கவிஞர் மலிக்கா!
Nice post, timely :-)
amas32
Post a Comment