...பல்சுவை பக்கம்!

.

Friday, October 30, 2009

சில சிந்தனைகள் (பகுதி - 2)
16. அதிகமாய்ச் சாப்பிட்டால் உணவும் வெறுத்துப் போய்விடும்.


17. பணக்காரனாய் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டியதில்லை; தேவைகளைக்
குறைத்தாலே போதும்.


18. இன்று நாம் செய்த நன்மை, நாளை நமக்குக் கிடைக்கப் போகும் இன்பமாகும்.


19. அதிகம் பேசினால் அதிகத் தவறு செய்ய நேரிடும்.


20. ஒவ்வொரு சாலைக்கும் இரு திசைகள் உண்டு.
கவனம் இருந்தால், வெற்றி தரும்
சாலையில் தொடர்ந்து பயணம் செய்ய முடியும்.


21. உண்மையான உழைப்பில்தான் வாழ்க்கை இருக்கிறது.


22. தானத்தை நிதானமாய் வழங்கிக் கொண்டே இருக்கும் கைக்குச் சலிப்பே இராது.


23. பறவைகளுக்குப் பயந்து விதைக்காமல் இருக்க வேண்டாம்.


24. எப்போதும் சலிப்பில்லாமல் செயல்படுபவன் வெற்றி அடைவான்.


25. கெட்ட பழக்கம் முதலில் வழிப்போக்கனைப் போல வரும்; பிறகு விருந்தாளியாய் மாறி,
முடிவில் முதலாளியாகி விடும்.


26. மறந்து விடாதீர்கள், உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் உங்கள் சரித்திரத்தின் ஒரு பக்கமாகும்.


27. அடகு வைப்பதை விட விற்று விடுவதே மேல்.


28. அதிக நேரம் தூங்கும் சோம்பேறியை எழுப்ப சூரியன் இரு முறை உதிப்பதில்லை.


29. ஓர் ஆற்றைப் படகில் கடப்பதை விட நீந்திக் கடப்பது நல்லது. படகோட்டியைத்
தேட வேண்டியிருக்காது.


30. குதூகலமாக ஒரு வேலையைச் செய்யும் போது, வெற்றி கிடைக்காமல் போவதற்கு
வாய்ப்பே இல்லை.


**நன்றி: 'சத்தான வாழ்வுக்கு முத்தான சிந்தனைகள்' - முனைவர் அ.அய்யூப்.


அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

2 comments:

S.A. நவாஸுதீன் said...

நல்ல சிந்தனைகள். பகிர்வுக்கு நன்றி நிஜாம்.

NIZAMUDEEN said...

S.A.நவாஸ்தீன், நன்றிங்க...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...