...பல்சுவை பக்கம்!

.

Sunday, October 4, 2009

சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா (பாடல்)
சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா!

இந்த பாடல் திருமதி.ப்பீ.சுசீலா அவர்கள் பாடியது.
இடம் பெற்ற படம்: வண்ணக்கிளி.
என்னைக் கவர்ந்த பாடல் இது.

சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா
சொன்ன பேச்சக் கேட்டாத்தான் நல்ல பாப்பா
சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா

தின்ன உனக்கு சீனி மிட்டாய் வாங்கித் தரட்டுமா
சிலுக்குச் சட்டை சீனா பொம்மை பலூன் வேணுமா
தின்ன உனக்கு சீனி மிட்டாய் வாங்கித் தரட்டுமா
சிலுக்குச் சட்டை சீனா பொம்மை பலூன் வேணுமா
கண்ணாமூச்சு ஆட்டம் உனக்கு சொல்லித் தரட்டுமா
கண்ணாமூச்சு ஆட்டம் உனக்கு சொல்லித் தரட்டுமா - இப்ப
கலகலன்னு சிரிச்சிக்கிட்டு என்னப் பாரம்மா
(சின்ன...)

கோபம் தீர்ந்து அப்பா உன்னைக் கூப்பிடுவாரு - நீ
கொஞ்சி கொஞ்சி பேசினாத்தான் சாப்பிடுவாரு
கோபம் தீர்ந்து அப்பா உன்னைக் கூப்பிடுவாரு - நீ
கொஞ்சி கொஞ்சி பேசினாத்தான் சாப்பிடுவாரு
கோழி மிதிச்சி குஞ்சு முடம் ஆகிவிடாது - குங்குமம்
கோழி மிதிச்சி குஞ்சு முடம் ஆகிவிடாது - உனக்கு
கொய்யாப்பழம் பறிச்சு தாரேன் அழுகை கூடாது
(சின்ன...)

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

2 comments:

Jaleela said...

பீ.சுசீலா பாடல்கள் என்றால் கேட்கவா வேண்டும், அழகான மழலை போல்
அதே மெட்டில் பாடி பார்த்தாச்சு,,

NIZAMUDEEN said...

ப்பீ.சுசீலா பாடலை இரசித்தமைக்கும்
கருத்து தந்தமைக்கும் நன்றி ஜலீலா!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...