...பல்சுவை பக்கம்!

.

Tuesday, October 27, 2009

சில சிந்தனைகள் (பகுதி - 1)1. கொஞ்சம் பசி இருக்கும்போதே சாப்பிடுவதை நிறுத்தி விடுங்கள்.


2. பெரும் பலமுடையவன் அதை மெதுவாக உபயோகித்து வெற்றி பெற வேண்டும்.


3. மூட நம்பிக்கை மனதை விஷமாக்குகிறது.


4. சோம்பேறி மூச்சு விடுகிறான்; ஆனால், வாழவில்லை.


5. சிக்கனம் இருந்தால் மற்ற பண்புகள் அனைத்தும் எளிதில் வந்து விடும்.


6. சீக்கிரமாய் கொடுப்பவன் இரட்டிப்பாய் கொடுத்தவனாகிறான்.


7. உறுதியின்மையால் நல்ல வாய்ப்புகள் பல நழுவி விடுகின்றன. எப்போதும் மன உறுதியுடன் இருங்கள்.


8. முயற்சி செய்கிற வரையில் எவருக்கும் தம் திறமை பற்றி ஒன்றும் தெரியாது.


9. நீங்கள் அமைதியாய் வாழ விரும்பினால் கேளுங்கள்; பாருங்கள்; மௌனமாயிருங்கள்.


10. உங்களுக்குத் தேவையானவற்றை எல்லாம் வாங்க
வேண்டாம். எது இல்லாமல் வாழ முடியாதோ,
அதை மட்டும் வாங்கினால் போதும்.


11. பொய் எப்போதும் எச்சரிக்கையாய் ஆயுதங்களுடன் இருந்தாலும், முடிவில் தோல்வி அதற்குத்தான்.


12. எது நன்மை என்பதை அதை இழந்தால்தான் தெரியும்.


13. அறிவுள்ளவன் மூடனுக்கும் காளை மாட்டுக்கும் வழி விட்டு ஒதுங்கிச் செல்வான்.


14. சில நிமிடங்கள் மௌனமாயிருங்கள்; கோபம் தணிந்து விடும்.


15. கண்ணியமானவன் என்றால், அவன் யாருக்கும் துன்பம் ஏற்படுத்தாதவன் என்று பொருள்.


**நன்றி: 'சத்தான வாழ்வுக்கு முத்தான சிந்தனைகள்' - முனைவர் அ.அய்யூப்.


**அன்பன்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

6 comments:

Geetha Achal said...

நல்ல கருத்துகள்...அனைவருக்கும் பயனுள்ளவை...பின்பற்ற வேண்டியவை.

NIZAMUDEEN said...

கருத்திற்கு நன்றி கீதா ஆச்சல்!

kggouthaman said...

Good. Continue the good job.

தேவன் மாயம் said...

பசியிருக்குபோதே நிறுத்தலாம். வீட்டில் திட்ட ஆரம்பிப்பார்கள்!

முனைவர்.இரா.குணசீலன் said...

பொன்னான கருத்துக்கள்....

NIZAMUDEEN said...

கருத்துக்கள் தந்த...

kggouthaman... நன்றி,

தேவன் மாயம்... நன்றி,

முனைவர்.இரா.குண்சீலன்... நன்றி!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...