குண்டப்பா & மண்டப்பா!
=======================
குண்டப்பா தனது கிராமத்திலிருந்து,
டவுனுக்கு ஓர் அரசாங்க அலுவலகத்திற்கு
ஒரு காரியமாக வந்தார்.
வேலை முடிய மதியம் ஒரு மணியாகிவிட்டது.
மதியம் 1.15 பஸ்ஸில் புறப்பட்டால் அவரது
கிராமத்திற்குப் போய் சேர ஒரு மணி நேரமாகும்.
பசி அவரது வயிற்றைக் கிள்ளி, வயிறே புண்ணாகி
விட்டது. ஹோட்டலுக்குப் போய் சாப்பிடலாம்
என்று நினைக்கும்போது, 'சாப்பாடு என்றால்
50 ரூபாய் செலவாகி விடுமே, என்ன செய்யலாம்'
என்று யோசித்தார்.
அப்போதுதான் அதே டவுனில் நான்கு தெருக்கள்
தள்ளிதான் அவரது நண்பர் மண்டப்பாவின்
வீடு இருப்பது நினைவுக்கு வர, 'சாப்பாட்டுச்
செலவை மிச்சம் பண்ணிடுவோம்' என்று
எண்ணியபடி ஐந்து நிமிடங்கள் நடந்து,
மண்டப்பாவின் வீட்டிற்குச் சென்றார்.
குண்டப்பாவைப் பார்த்த அவரது நண்பர்
மண்டப்பா, அவரிடம் பேச ஆரம்பித்தார்.
பேச ஆரம்பித்தவர்தான், பேசிக் கொண்டே
இருந்தாரே அன்றி, சாப்பிடக் கூப்பிடவே
இல்லை. குண்டப்பாவும் ஒரு மணி
நேரமாகப் பொறுத்துப் பார்த்து விட்டார்.
மணியும் இரண்டைத் தாண்டி விட்டது.
குண்டப்பா எழுந்து கொண்டார்.
"அப்ப நான் ஊருக்குப் புறப்படுகிறேன்"
என்றார்.
அதற்கு, "எங்க வீட்டில சாப்பிடச்
சொன்னா சாப்பிடவாப் போறீங்க?"
என்று கேட்டார் மண்டப்பா.
"மாட்டேன்னா நீங்க விடவாப் போறீங்க?"
என்று திருப்பிக் கேட்டுக் கொண்டு
அங்கேயே நின்று கொண்டிருந்தார் குண்டப்பா.
'ஆஹா... இவுரு நம்ம வீட்டுல சாப்பிடாமப்
போக மாட்டாரு போலருக்கே, எப்படி இவர
துரத்தலாம்' என்று யோசித்த மண்டப்பா,
சமாளிப்பாக, "அப்படி நீங்க நம்ம
வீட்டுல சாப்பிட்டாலும் என் ரெண்டு
பிள்ளைங்களுக்கும் ஐம்பது, ஐம்பது
ரூபாய் அன்பளிப்பு கொடுக்காமயா
போயிடப் போறீங்க?" என்று கோர்த்து
வாங்கினார்.
'ஹோட்டல்ல சாப்பிட்டா ஐம்பது ரூபாய்தானே,
இந்த ஆளு நூறு ரூபாய்க்கு அடி போடுறானே'
என்று பயந்தாலும் குண்டப்பா, "என்னங்க
இப்படிச் சொல்லிட்டீங்க? உங்க பிள்ளைங்க
தங்கம்ல? உங்க பிள்ளைங்களும் உங்க மாதிரியில?
நான் பணம் கொடுத்தாலும் அவங்க
வாங்கவாப் போறாங்க? நீங்க
அப்படியா பிள்ளைங்கள வளர்த்திருக்கீங்க?"
என்று மடக்கினார்.
இவ்வளவு பேச்சு நடந்த பிறகும் குண்டப்பா
அந்த வீட்டில் சாப்பிட்டிருப்பாரா, மாட்டாரா?
அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
குண்டப்பா & மண்டப்பா (2) இங்கே!
17 comments:
:-))
வாங்க... பின்னோக்கி!
வந்ததற்கு, கருத்து
தந்ததற்கு நன்றி!
N.ADAM MOHIDEEN!
என்வலைப்பூவுடன் இணைந்த
தங்களை வரவேற்கிறேன்.
அந்த குண்டப்பா யாருன்னு சொல்லவே இல்லையே?!
சாப்பிட்டு இருப்பார் என்று நினைக்கிறேன்...தெரியவில்லையே...
சீக்கிரம் சொல்லிடுங்கண்ணா ப்லீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
nallaa irukku!
-yasar.
//மாயவரத்தான்.... said...
அந்த குண்டப்பா யாருன்னு சொல்லவே இல்லையே?! //
மாயவரத்தான்!
முதல் வருகைக்கும்
முதல் கேள்விக்கும்
முதலில் நன்றி!
"குண்டப்பா யாருன்னு சொல்லவே இல்லையே?"
இதுதானே உங்க கேள்வி!
மண்டப்பாங்கிற நகரவாசியின்
கிராமவாசி நண்பர்தான் குண்டப்பா!
சந்தேகம் தீர்ந்ததா?
//Geetha Achal said...
சாப்பிட்டு இருப்பார் என்று நினைக்கிறேன்...தெரியவில்லையே...//
அப்படியா நினைக்கிறீங்க கீதா ஆச்சல்?
இருக்கலாம் என நானும் நினைக்கிறேன்.
//அன்புடன் மலிக்கா said...
சீக்கிரம் சொல்லிடுங்கண்ணா ப்லீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்//
1...2...3...7!
மொத்தம் 7 'ஸ்'-ஆ?
மலிக்கா! எனக்கு ரொம்ப பசித்ததால்
நானும் அப்பவே வந்திட்டேன்; எனக்கும்
தெரியலீங்க. சாரிரிரிரிரிரிரி!
//nallaa irukku!
-yasar.//
வருகைக்கும்
கருத்திற்கும்
நன்றி யாசர்!
விடாக்கொண்டன் மடாக்கொண்டன்னு சொல்வாங்களே அந்த மாதிரி. கலகலப்பா இருக்கு நிஜாம் பாய்
//விடாக்கொண்டன் மடாக்கொண்டன்னு சொல்வாங்களே அந்த மாதிரி. கலகலப்பா இருக்கு நிஜாம் பாய்//
விடாக்கண்டன், கொடாக்கண்டன்
என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
நன்றி நவாஸ் பாய்!
இவ்வளவு பேச்சு நடந்த பிறகும் குண்டப்பா
அந்த வீட்டில் சாப்பிட்டிருப்பாரா, மாட்டாரா?
சாப்பிட்டு இருக்கமாட்டார் என்று நினைக்கிறேன்
//சாப்பிட்டு இருக்கமாட்டார் என்று நினைக்கிறேன்//
நமது பழைய விருந்தோம்பல்
பண்பாடுகளை சிலர் மறந்து
போயினர் என்பதுதான்
இதுபோன்ற நிகழ்வுகளுக்குக்
காரணம்.
கருத்திற்கு நன்றி ஜலீலா!
குண்டப்பாவோ மண்டப்பாவோ இந்த காலத்தில் விருந்தோன்ம்பல் என்பது மறந்து விட்டது .அன்புடன் சுகர்னோ .
// arsugarno said...
குண்டப்பாவோ மண்டப்பாவோ இந்த காலத்தில் விருந்தோன்ம்பல் என்பது மறந்து விட்டது .அன்புடன் சுகர்னோ . //
ஆர்வத்தோடு படித்து, அன்போடு கருத்து தந்தமை, அளவிலா ஆனந்தம் எனக்கு. அனைத்து பதிவுகளையும் படித்து தங்கள்
ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் சுகர்னோ பாய்!
Post a Comment