முல்லா ஏன் அழுதார்?
முல்லா ஒரு நாள் அழுதுகொண்டிருந்தார்.
அவரது நண்பர் கேட்டார்: "முல்லா, ஏன் அழுகிறாய்?"
முல்லா சொன்னார்: "சென்ற மாதம் எனது பாட்டி ஐந்து இலட்ச ரூபாய் சொத்தை எனக்கு எழுதிவைத்துவிட்டு இறந்துவிட்டார்."
நண்பர் கேட்டார்: "அட மகிழ்ச்சியான செய்திதானே, ஏன் அழுகிறாய்?"
முல்லா சொன்னார்: " பதினைந்து நாட்களுக்குமுன் எனது பெரியப்பா இருபது இலட்ச ரூபாய் சொத்தை எனக்கு எழுதிவைத்துவிட்டு இறந்துவிட்டார்."
நண்பர் கேட்டார்: "மகிழ்ச்சியான செய்தி! அதற்காக ஏன் அழுகிறாய்?"
முல்லா சொன்னார்: "சென்ற வாரம் எனக்கு 30 இலட்ச ரூபாய் சொத்தை எனக்கு எழுதிவத்துவிட்டு எனது அத்தை இறந்துவிட்டார்."
நண்பர் கேட்டார்: "சந்தோஷப்படுவதைவிட்டு ஏன் அழுகிறாய்?"
முல்லா சொன்னார்: "மூன்று நாட்களுக்குமுன் எனது தாத்தா இறக்கும்முன் 50 இலட்ச ரூபாயை எனக்கு எழுதிவைத்துவிட்டார்."
நண்பர் கேட்டார்: "கொண்டாடாமல் ஏனப்பா அழுகிறாய்?"
முல்லா சொன்னார்: "இனிமேல் சொத்தை எழுதிவைத்துவிட்டு இறந்துபோறதுக்கு எனக்கு பணக்கார சொந்தக்காரர்கள் இல்லையே, அதனாலதான் அழுதுகிட்டு இருக்கிறேன்"
கேட்ட நண்பர் மயக்கம்போட்டு கீழே விழுந்துவிட்டார்.
-சிரி(ப்புக் கலை)ஞர் மதன்பாபு சிரித்துக்கொண்டே ஆதித்யா ட்டீ.வி.யில் சொல்லிய கதை. (நன்றி)
:- அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
4 comments:
ஹா ஹா ஹா. நல்ல பகிர்வு நிஜாம்.
கருத்துக்கிற்கு...
... நன்றி S.A. நவாஸ்தீன்!
சூப்பர்
நன்றி 'ஸ்டார்'ஜன்!
Post a Comment