...பல்சுவை பக்கம்!

.

Wednesday, September 2, 2009

என்ன வரம் வேண்டும்?'சிரிண்டா'! வீட்டிலிருந்தாலும் ஆஃபிஸிலிருந்தாலும் பெட்டிக்கடைக்குப் போனாலும் ரெஸ்டாரெண்டுக்குப் போனாலும் எங்கேயும் எப்போதும் சிரிண்டாவைத்தான் வாங்கிக் குடிப்பார் அந்த ந(ண்)பர்.

ஒரு நாள்.

ரெஸ்டாரெண்டில் அமர்ந்து சிரிண்டாவை துளி, துளியாக உறிஞ்சிக்
கொண்டே, "பாட்டிலில் சிரின்டா குறையக் குறைய தீர்ந்துபோகாமல்
மறுபடியும் மறுபடியும் வந்துகொண்டே இருந்தால், நன்றாக
இருக்குமே" என்று யோசித்துக்கொண்டு இருக்கிறார் அந்த நபர்.

அடுத்த நொடி.
படக் என்று சத்தம்.
பளிச் என்று வெளிச்சம்.
கடவுளே அந்த நபரின்முன்னே தோன்றிவிட்டார்.

"ஓ மனிதா... நீ நினைத்ததுபோலவே உனக்கு பாட்டிலில் சிரிண்டா வந்து
கொண்டேயிருக்க அருள் புரிந்தோம். உனக்கு மூன்று வரங்கள் தருகிறேன்.  இன்னும் இரண்டு வரங்கள் என்ன வேண்டும்? கேள்" என்றார் கடவுள்.

"கடவுளே, சற்று பொறு" என்று கூறிவிட்டு, சிரிண்டாவை முழுவதும்
காலி செய்துவிட்டு பாட்டிலை மேஜையில் வைத்தார் அந்த நபர்.
திரும்பவும் பாட்டிலில் சிரிண்டா முழுமையாக நிரம்பிவிட்டது.

"ஓ சூப்பர் தலைவா, சூப்பர், சூப்பர்" என்று கடவுளைப் பாராட்டிவிட்டு,
'இன்னும் இரண்டு வரங்கள் இருக்கின்றன' என்று மனதில் யோசித்த
அந்த நபர் உடனே வாயைத் திறந்து கேட்டார், "இதுபோலவே இன்னும்
இரண்டு சிரிண்டா பாட்டில் வேண்டும்" என்று.

கடவுள் அப்ப ஷாக்க்க்க்கானவர்தான், இன்னமும் அங்கேயேதான்
அசந்துபோயி நிக்கிறாராம்.

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

9 comments:

SUMAZLA/சுமஜ்லா said...

இப்படித்தான் நாமும் முட்டாள்கள் போல பல நேரங்களில் கிடைத்த வாய்ப்பை கிறுக்குத்தனமாக பயன்படுத்துகிறோம்!

NIZAMUDEEN said...

சில நேரங்களில் மட்டும் ஏமாறலாம்;
ஆனால், எப்போதும் விழிப்புடன் இருந்தால்
தான் நாம் நல்வாய்ப்புக்களைச் சிறப்புற
பயன்படுத்திட இயலும்.

கருத்திற்கு நன்றி.

பிரியமுடன்...வசந்த் said...

அட இது நீங்க எழுதியதா?

நவாஸ் கூட அவர்ரொட இடுகையில் அறிமுகப்படுத்தியிருக்கார்.....

NIZAMUDEEN said...

எனது பிரியமுடன் நன்றி வசந்த்.
S.A. நவாஸ்தீன் அவர்களின்
பதிவின் பின்னூட்டமாக நான்
பின்வரும் குறிப்பைப் பதிந்து
உள்ளேன்:

//அன்பு எஸ்.ஏ.நவாஸ்தீன்,
இந்தப் பதிவில் உங்களின்
உயர்ந்த உள்ளத்தை அறிய
முடிகிறது.
நேரடியாக என் பெயரைக்
குறிப்பிடாமல் விட்டு விட்டீர்கள்.
இந்தக் கதையை தற்போது
எனது 'நிஜாம் பக்கம்'
வலைப்பூவிலும் வெளியிட்டு
உள்ளேன்.
http://nizampakkam.blogspot.com/2009/09/blog-post_02.html //

S.A. நவாஸுதீன் said...

அட உங்க ப்ளாக்லையும் (ப்ளாக் இருப்பது முன்னர் எனக்குத் தெரியாது) போட்டாச்சா. ரொம்ப நல்லது. மற்றவர்களுக்கு விஷயம் தெரிந்து உங்கள் பெயர் தெரிந்தால் படிப்பவர்கள் மனதில் நிற்கும் என்பதற்காகத்தான் நேரடியாகப் பெயர் குறிப்பிடாமல் லின்க் கொடுத்தேன்.

NIZAMUDEEN said...

//ப்ளாக் இருப்பது முன்னர் எனக்குத் தெரியாது) போட்டாச்சா. ரொம்ப நல்லது. //

-தங்களின் விளக்கத்திற்கு மிக்க
நன்றி,நவாஸ்தீன்!

எனது வலைப்பூவைத் தொடர்ந்து
இரசிக்க வருகைதரும் தங்களை
வரவேற்கிறேன்.

NIZAMUDEEN said...

இராகவன், நைஜீரியா!

வசந்த்!

மற்றும் தமிழினி!

எனது வலைப்பூவைத் தொடர்ந்து
இரசிக்க வருகைதரும் தங்களை
வரவேற்கிறேன்.

தமிழ் மீரான் said...

அற்புதத்தை விடுத்து அற்பத்தை நோக்கியே பயணிக்கிறது பலரது வாழ்க்கை.
நன்றி கருத்துப் பதிவுக்கு!

yathavan nambi said...

அன்புடையீர்! வணக்கம்!
அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (21/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
இணைப்பு: http://gopu1949.blogspot.in/

நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...