...பல்சுவை பக்கம்!

.

Wednesday, September 9, 2009

பஸ்ஸை ஓட்டிப் பார்க்கலாமா?

சோழன் போக்குவரத்துக் கழகத்தின் டிரைவர்
சீனு எனக்கு நண்பர். நான் எங்களூரில்
எப்போதாவது பஜாரில் நண்பர்களோடு
நின்று பேசிக் கொண்டிருந்தால், என்னை
பார்த்து கையாட்டிவிட்டுச் செல்வார்.

அதுபோல் ஒரு நாள் காலையில் சீனு
பஸ்ஸை ஓட்டிக் கொண்டே என்னைக்
கடைத்தெருவில் பார்த்து கையாட்டிவிட்டுச்
சென்றார்.

பஸ்ஸுக்கள் மதியம் சுமார் 12-லிருந்து
1 மணிக்குள் பணிமனை சென்று டூட்டி
மாற்றி வருவார்கள்.

ஆனால், அன்று மாலையே நான் மயிலாடுதுறை
செல்ல வேண்டியிருந்ததால், கடைத்தெருவில்
பஸ்ஸுக்காகக் காத்திருந்தால், வந்த பஸ்ஸை
காலையில் ஓட்டிய ஓட்டுனர் சீனுவே ஓட்டிக்
கொண்டிருந்தார்.

பஸ்ஸில் ஏறியதும் நான் அவர் அருகில் சென்று,
"என்ன சீனு, காலையிலும் ஓட்டினீங்க; இப்பவும்
ஓட்டிக்கிட்டு இருக்கீங்களே,ஏன்?" என்று கேட்டேன்.

அதற்கு, "அதுவா நிஜாம்? ஓட்டிப் பார்த்துக்கிட்டு
இருக்கேன்" என்றார் சீனு.

நான் பதறிப் போய், "என்ன ஓட்டிப் பார்த்துக்கிட்டு
இருக்கீங்களா? லைசென்ஸ் எப்ப எடுப்பீங்க? நாங்க
50, 60 பேர் உங்களை நம்பி, உங்கப் பின்னால
இருக்கோம்,நீங்கதான் பொறுப்பு" என்றேன்.

"அட நீ வேற பீதியக் கிளப்பாதப்பா. நான் சொன்னது
'ஓட்டி' இல்ல! அதாவது 'ஓ.ட்டீ'. ஓவர் டைம்
டூட்டி பார்க்கிறேன்னு சொன்னேன்" என்று நண்பர்
சீனு சொன்னதும் பஸ்ஸில் அருகிலிருந்த
சக பயணிகளிடையே கல... கல... கல...

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


தங்கள் மேலான வாக்குகளை
இங்கே பதியுங்கள்==========>

9 comments:

SUMAZLA/சுமஜ்லா said...

ஹா...ஹா...இது தாங்க ஒரிஜினல் சிலேடை!

பின்னோக்கி said...

அருமையான இயல்பான நகைச்சுவை

krishna said...

avlothaana

NIZAMUDEEN said...

//ஒரிஜினல் சிலேடை!//

ஒரிஜினல் அக்மார்க் முத்திரை கொடுத்த
சுமஜ்லா... நன்றி!

NIZAMUDEEN said...

//இயல்பான நகைச்சுவை//

இதை இயல்பாய் சொன்ன
பின்னோக்கி! உங்களுக்கு
எனது இயல்பான நன்றி!

NIZAMUDEEN said...

//avlothaana//


அவ்வளோவ்தான்னு எப்படி விட முடியும்?
அடுத்த பதிவுகளும் பாருங்க... கிருஷ்ணா!

THAMIZH said...

ithupola innum pala iyalpana nakaisuvai karuthukala engaloda pakirunthukkunga nandri thamizharasan

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
http://www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

NIZAMUDEEN said...

//ithupola innum pala iyalpana nakaisuvai karuthukala engaloda pakirunthukkunga//

-தொடர்ந்து த(வ)ருவேன்...
தாங்களும் தொடர்ந்து தரவேண்டுகிறேன்.
நன்றி தமிழரசன்!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...