...பல்சுவை பக்கம்!

.

Monday, September 7, 2009

கலாட்டா காலேஜி; கலாட்டா பாலாஜி!

நானும் நண்பன் பாலாஜியும் பஸ்ஸில்
காலேஜுக்குச் சென்று கொண்டிருந்தோம்.
காலேஜ், மயிலாடுதுறையிலிருந்து 22 கி.மீ.
தூரத்தில், பூம்புகாருக்கு 3 கி.மீ. முன்பாக
உள்ள மேலையூரில் அமைந்துள்ள
'பூம்புகார் பேரவைக் கல்லூரி'. சுருக்கமாக ப்பீ.ப்பீ.கே.
(இப்போது அதன் பெயர் 'இந்து சமய அறநிலை ஆட்சித்
துறையின் பூம்புகார் கல்லூரி')

அன்று திங்கள் காலை நேரம்.

பஸ்ஸில் நிறைவான கூட்டம். மாணவர்கள் அனைவரும்
அரட்டைப் பேச்சுடன் சென்று கொண்டிருக்கிறோம்.
எங்கள் இருவருக்கும் உட்கார இருக்கைகள் கிடைத்து விட்டன.

நான் பேசிக் கொண்டேயிருக்க, 'உம்' போட்டு, கேட்டு
வந்த பாலாஜி இடையிடையே கண் சொக்கி தூங்க ஆரம்பித்தான்.

நான் அவனிடம், "என்னப்பா தூங்கி விழறயே, ஏன்?" என்று
கேட்டேன்.

"சென்னை போய்விட்டு நேற்று நைட்தான் பஸ்ஸில ஊர் வந்தேன்"
என்றான் பாலாஜி.

"அட அப்படின்னா வீட்டிலயே தூங்கி ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதானே?"
என்று நான் கேட்டேன்.

"அதுக்குத்தானே காலேஜுக்கு வரேன்" என்று பட்டென்று பதில் சொன்னான் பாலாஜி.

'தூங்கினாலும் காலேஜ் போகணும் என்று காலேஜ் வருகிறானே என்று
பாராட்டுவதா; காலேஜுக்கு வந்தும் தூங்கப் போறானே என்று
திட்டுவதா' என்று நான் திகைத்து விட்டேன்.

வேடிக்கையை வாடிக்கையாய் கொண்ட கலகல நண்பன் பாலாஜி
இப்போது நம்மிடையே இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக
நோய் தாக்கி அகால மரணமடைந்தா(ன்)ர்.

அவருக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்!

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

4 comments:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

இரசிக்க வருகைதரும்
கீதா ஆச்சல் அவர்களே, வருக!

அபி அப்பா said...

நிஜாம் நல்லா எழுதுறப்பா! ஆனா இந்த பதிவுக்கு நகைச்சுவைன்னு லேபிள் கொடுத்திருக்க வேண்டாமோன்னு தோனுது. நகைச்சுவையா வந்ந்து கடைசியா மனதை கலங்க அடிச்சிடுச்சு. அந்த சோகம் முழு பதிவின் நகைச்சுவையையும் முழுங்கிடுச்சுப்பா. எனக்கு நல்லா தெரியும் நண்பன் இழப்பு எத்தனை சோகம் என்று!!!

அபி அப்பா said...

பின்னே நான் மாயவரம் தான்! நீ வடகரையாப்பா??? நான் ஏ. வி. சி.

ஆஜ நம்ம ஊர்ல இருந்து அடுத்த பதிவர். வாழ்த்துக்கள்.

முடிஞ்சா மெயில் பண்ணுப்பா எனக்கு

kummarv@gmail.com

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அபி அப்பா!

என் வலைப்பூவைத் தொடர்ந்து இரசிக்க இணைந்துள்ள
தங்களை வரவேற்கிறேன்.

//நிஜாம் நல்லா எழுதுறப்பா!//

ஓ... நன்றி அபி அப்பா! இதில் நகைச்சுவை
சம்பவத்தை மட்டும்தான் எழுத முனைந்தேன்.
ஆனால், முடிக்கும்போது நல்ல நண்பனை இழந்த
சோகத்தை இதில் குறிப்பிட வேண்டும் என்று என்
மனதிற்குப் பட்டது. அதனால்தான், அதையும்
சேர்த்தேன்.

அப்புறம் தனியே தங்களுக்கு மெயில் அனுப்புகிறேன்.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...