...பல்சுவை பக்கம்!

.

Thursday, September 17, 2009

"வாரும், வாரும், உள்ளே வாரும்!"

"வாரும், வாரும், உள்ளே வாரும்!"
=================================
நற்குணன் ஐயா அவர்கள் எங்களது
தமிழாசிரியர்.

வாரத்தில் ஒருநாள் செவ்வாய்க் கிழமை
மட்டும் முதல் பாடவேளை, தமிழ்
வகுப்பு.

ஒரு செவ்வாய்க் கிழமையில் காலை
10 மணிக்கு பள்ளியின் பாட ஆரம்ப
மணியோசை ஒலித்து விட்டது.
ஆசிரியரும் வந்து விட்டார்.
வருகைப் பதிவேடு எடுத்து விட்டார்.
பாடத்தையும் நடத்த ஆரம்பித்து
விட்டார்.

சுமார் 10 நிமிடங்கள் சென்றிருக்கும்.
ஒரு மாணவன் வகுப்பறை வாயிலருகே
வந்து நின்று, "உள்ளே வரலாமா?"
என்று கேட்டான்.

பாடம் நடத்துவதை நிறுத்திவிட்டு
அவனைப் பார்த்தார், தமிழாசிரியர்.

அப்போது வாசல் கதவின் ஓரமாக
குப்பைகள் குமித்து வைக்கப் பட்டிருப்பதைப்
பார்த்தார் அவர். பிறகு அந்த மாணவனைப்
பார்த்தார்.

மறுபடியும் குப்பையை, மறுபடியும்
மாணவனை மாறி, மாறிப் பார்த்து
விட்டு, அந்தக் குப்பையை நோக்கி
கை காட்டிவிட்டு, பின் அந்த மாணவனை
நோக்கி கையைக் காட்டிவிட்டு, இறுதியாக
வகுப்பறையின் உள்ளேயும் கையைக்
காட்டிக் கொண்டே, "வாரும், வாரும்,
அப்படியே வாரும்" என்றார்.

மாணவர்கள் அனைவருமே சிரித்து விட்டோம்.

ஆனால், அந்த மாணவனோ,'ஆசிரியர்
நம்மை உள்ளே வரச் சொல்கிறாரா,
அல்லது குப்பையை வாரச் சொல்கிறாரா'
என்று குழம்பி அங்கேயே நின்று கொண்டே
இருந்தான்.

மாணவர்கள் அனைவரும் சிரித்து ஓய்ந்தபின்
ஒருவழியாய் அவனை 'உள்ளே வாப்பா'
என்று உள் வருவதற்கு அனுமதி அளித்தார்.

இந்த நகைச்சுவை சம்பவம் இன்னும்
மனதில் அடிக்கடி நிழலாடிக் கொண்டே
இருக்கின்றது.

(தமிழாசிரியர் பற்றிய குறிப்பு என்பதால்
முடிந்தவரை தமிழிலேயே எழுதியுள்ளேன்.)

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


தங்கள் மேலான வாக்குகளை
இங்கே பதியுங்கள்==========>

4 comments:

krishna said...

simply superb(tamil)

இராகவன் நைஜிரியா said...

அருமையான தமிழ் ஆசிரியர் உங்களுக்கு...

படிக்கும் போதே சிரிப்பு வருகின்றதே... நேரில் இருந்த உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்..

NIZAMUDEEN said...

//simply superb(tamil)//

thank you for your comment in english,
krishna!

NIZAMUDEEN said...

//அருமையான தமிழ் ஆசிரியர் உங்களுக்கு...
படிக்கும் போதே சிரிப்பு வருகின்றதே... நேரில் இருந்த உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்..//

-அதையேன் கேட்குறீங்க!
சார் நல்லா வாரி விட்டாரு
அந்தப் பையனை (மாணவனை).
அதிலருந்து அவன் லேட்டாவே
வரவில்லை செவ்வாய்க் கிழமை
ஃப்ர்ஸ்ட் ப்பீரியட்-க்கு மட்டும்.

நன்றி இராகவன் சார்.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...