...பல்சுவை பக்கம்!

.

Thursday, September 3, 2009

சர்க்கஸா? சினிமாவா? ஸ்கூலா?சர்க்கஸா? சினிமாவா? ஸ்கூலா?

ஒரே வகுப்பில் படிக்கும் மூன்று மாணவர்கள் நண்பர்களாய் இருந்தார்கள்.
எப்போதும் எங்கே போனாலும் வந்தாலும் ஒன்றாகவே போவார்கள்,
ஒன்றாகவே வருவார்கள்.

ஒரு நாள். மூவரும் பள்ளிக்குச் சென்றுகொண்டிருக்கும்போது, முதல்
நண்பன், "நம்ம ராஜன் தோட்டம் மைதானத்துல மெஜினி சர்க்கஸ்
வந்துருக்கு. அதுக்குப் போவோமாடா?" என்று கேட்டான்.

அதற்கு இரண்டாம் நண்பன், "நம்ம வானதி தியேட்டர்ல கூர்யா
நடிச்ச படம் வந்திருக்கு. அதுக்குப் போவோம்டா" என்று சொன்னான்.

முன்றாவது நண்பன், "மெஜினி சர்க்கஸும் வேணாம், கூர்யா
படமும் வேண்டாம். நம்ம ஸ்கூலிலேயே அடுத்த மாதம் எக்ஸாம்
வருதுடா. அதனால கிளாஸுக்கே போலாம்டா" என்றான்.

அப்பொழுது முதல் நண்பன், "ஒரு ஐடியா. ஒரு ரூபா காயின்
எடுத்து பூவா, தலையா போட்டுப் பார்ப்போம். பூ விழுந்தால்,
மெஜினி சர்க்கஸ் போவோம்; தலை விழுந்தால், கூர்யா
படத்துக்குப் போவோம்" என்று யோசனை கொடுத்தான்.

கிளாஸுக்குப் போகவேண்டுமென்று சொன்ன அந்த மூன்றாவது
நண்பன், "என்னங்கடா, காயின்ல ரெண்டு சைடுதானடா
இருக்கு? நான் கிளாஸுக்குப் போகணுமின்னு சொல்றேனே,
அதுக்கு எப்படிடா சாய்ஸ் பார்க்குறது?" என்று கேட்டான்,
பரிதாபமாக.

உடனே, "சுண்டி போடுற காயின் நட்டுக் குத்தலா
நின்னுச்சுன்னால், நிச்சயமா ஸ்கூலுக்குப் போகலாம்டா"
என்றான் இரண்டாவது நண்பன், கூலாக.

ஆகவே,
நல்லவர் எனில் பழகு;
இல்லை எனில் விலகு.

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்

3 comments:

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்

SUMAZLA/சுமஜ்லா said...

நல்ல அருமையான கருத்து உள்ள பதிவு!

திரட்டிகளில் இணைக்காமல், இந்த பதிவெல்லாம் உள்ளே போய் விட்டால், பிறகு இணைக்கும் போது யாரும் திறந்து படிக்க மாட்டார்கள். இது என் அனுபவம்.

NIZAMUDEEN said...

//திரட்டிகளில் இணைக்காமல், இந்த பதிவெல்லாம் உள்ளே போய் விட்டால், பிறகு இணைக்கும் போது யாரும் திறந்து படிக்க மாட்டார்கள்//

தங்களின் கருத்திற்கு நன்றி!

மேலும் தாங்கள் கூறியதுபோல்
திரட்டியில் இணைத்தால்...
நமது கருத்துக்கள் பிறரைச்
சென்றடையும் என்பது மிகச் சரி.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...