...பல்சுவை பக்கம்!

.

Saturday, September 19, 2009

இன்பப் பெருநாள் ஈகைத் திருநாள்!இன்பப் பெருநாள் ஈகைத் திருநாள்!
=============================


*உள்ளம் இனித்திடவே உவகைப் பெருநாள் வந்ததுவே!
இல்லம் மகிழ்ந்திடவே ஈகைத் திருநாள் வந்ததுவே!
ரமலான் முழுதும் தினமும் நோன்பினை நோற்றனரே!
எமதிறை அல்லாஹ் பேரருள் ரஹ்மத் பெற்றனரே!

*ஐம்பெரும் கடமை ரமலான் அதில் ஒன்று.
ஐயம் இல்லை நன்மைகள் பற்பலவே உண்டு.
உறுப்புகள் உழைக்குது தினமும் இரவுபகல் நேரம்.
ஓய்வு கொடுப்போம் பகலில் சிலமணி நேரம்.

*புசிப்பவர் அறியார் ஏழைபடும் பசியின் துயரம்.
பசியின் கொடுமை நோன்பாளிகள் உணரவே முடியும்
நோன்பு என்பது பலமுள்ளோர் மீதுதான் கடமை
மாண்பு கண்டு ஏற்பதும் நம்மீது உடமை!

*இல்லாதார்க்கு உள்ளோர் கொடுத்தால் அதுதான் ஈகை
வல்லோன் தருவான் மறுமைதனிலே மாபெரும் வாகை
மகிழ்ச்சியுடன் உவந்திடுவோம்.....
......பெருநாள் இன்றைய தினம்
நெகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறது எனதினிய அன்பு மனம்!

அனைவருக்கும் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!!

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


தங்கள் மேலான வாக்குகளை
இங்கே பதியுங்கள்==========>

12 comments:

krishna said...

இனிய ரம்ஜான் திருநாள் வாழ்த்துக்கள்

Geetha Achal said...

உங்களுடைய குடும்பத்தினர் அனைவருக்கும், எங்களுடைய இனிய ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகள்.

NIZAMUDEEN said...

இனிய ரம்ஜான் திருநாள் வாழ்த்துக்கள் தெரிவித்ததற்கு மிக்க நன்றி கிருஷ்ணா.

NIZAMUDEEN said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்ததற்கு மிக்க நன்றி கீதா ஆச்சல்.

நிஜாம் said...

அருமையான பதிவு நிஜாம். உங்களுக்கும் என் இனிய பெரு நாள் நல்வாழ்த்துக்கள்.

NIZAMUDEEN said...

நன்றிகள் நிஜாம் (ஒரே பேரு; ஆனால் இரண்டு பேரு)
1. //அருமையான பதிவு// என்று சொன்னதற்கு!
2. //இனிய பெரு நாள் நல்வாழ்த்துக்கள்// தெரிவித்ததற்கு!
3. வலைப் பூவை இரசிக்க இணைந்ததற்கு!
4. தங்கள் முதல் வருகை+பின்னூட்டத்திற்கு!

shabi said...

EID MUBARAK/கப்பலுக்கு போன மச்சான் பாட்டு mp3 எனக்கு email பண்ண முடியுமா shafiullah76@gmail.com

கிளியனூர் இஸ்மத் said...

இனிய ஈத்பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

கிளியனூர் இஸ்மத் said...

இனிய ஈத்பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

NIZAMUDEEN said...

//கிளியனூர் இஸ்மத் said...
இனிய ஈத்பெருநாள் நல்வாழ்த்துக்கள்.//

நன்றி அண்ணன்!
தங்களுக்கும் ஈத் முபாரக்!

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துகள்.

NIZAMUDEEN said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துகள். //

நன்றி ஸ்டார்ஜன்!
தங்களுக்கும் ஈத் முபாரக் நல்வாழ்த்துக்கள்!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...