...பல்சுவை பக்கம்!

.

Thursday, September 10, 2009

அன்பாக... ஆதரவாக...

அன்பாக... ஆதரவாக...

அன்பருக்கு நலமில்லை ஆஸ்பத்திரிக்குப் போனார்.
டாக்டர் பார்த்தார் செக் பண்ணார்.

இரத்தப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை,
ஸ்கேன், எக்ஸ்ரே, ஈசிஜி எடுத்தார்.

"ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் தங்குங்கள்,
மாத்திரை, மருந்துகள் சாப்பிடுங்கள்"

சொன்ன மருத்துவர் கொழிக்கின்றார்;
நோயாளி பணத்தை செலவழிக்கின்றார்.

"இந்த சாப்பாடாடெல்லாம் மருந்துங்க;
மத்த எல்லாத்தையும் மறந்துடுங்க;

தினமும் கொஞ்ச தூரம் நடந்திடுங்க;
உடல் பழையநிலை அடைந்திடுங்க"

சொன்னார் டாக்டரும் நன்றே!
அன்பரும் தங்கினார் அன்றே!

நண்பர்கள், உறவினர்கள் வந்தனரே!
நன்றாய் அறிவுரை தந்தனரே!

'மதுவும் சிகரெட்டும் வேண்டாமே!
மாதுவால் எய்ட்ஸ் வந்திடுமே!'

வந்தவர்கள் சும்மாவா இருந்தார்கள்?
சூழ்நிலை தன்னை மறந்தார்கள்.

"மனோகர் அப்படித்தான் நலமில்லை;
மறுநாள் அந்த ஆளே இல்லை"

"பொன்னுசாமி மாமாவுக்கு வயித்துப்போக்கு;
போயிட்டாரு மறுநாளு சுடுகாட்டுக்கு"

"ஆறுமுகம் அத்தானுக்கு ஹார்ட் அட்டாக்கு;
அய்யய்யோ அப்பவே அங்கேயே போயிட்டாரு"

மற்றும் பற்பல உரைத்தார்கள்.
வயிற்றில் புளியைக் கரைத்தார்கள்.

நோயாளிக்கு கிலியைக் கிண்டலாமா?
இருக்கின்ற பயத்தைத் தூண்டலாமா?

யாருக்குமே உள்ளபடி சாதகமா?
நோயாளிக்குமே உள்ளத்திற்கு பாதகமே!

நல்லதை ஆறுதல் சொல்லலாமே?
உள்ளத்தை தேறுதல் செய்யலாமே?

நோயாளிக்கு ஊட்டணும் தெம்பு!
நமக்கேனுங்க ஊர்வழக்கு வம்பு?

வந்தாலும் வாய்ப்பேச்சு, வெட்டிப்பேச்சு.
வராங்காட்டி ரொம்பவே நல்லதாச்சு.

உறவையும் நட்பையும் மறந்திடுங்கள்.
ஊட்டுக்குள்ளே கம்முனு இருந்திடுங்க.

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


தங்கள் மேலான வாக்குகளை
இங்கே பதியுங்கள்==========>

8 comments:

உலவு.காம் ( புதிய தமிழ் திரட்டி ulavu.com) said...

ரசித்தேன் .................
வாழ்த்துக்கள் நிஜாமுத்தீன்

NIZAMUDEEN said...

அன்பு உலவு.காம்!

இரசித்து, பின்னூட்டமிட்டதற்கு மிக்க நன்றி!

இராஜ்குமார் said...

"பொன்னுசாமி மாமாவுக்கு வயித்துப்போக்கு;
போயிட்டாரு மறுநாளு சுடுகாட்டுக்கு"

இந்த வரிகள் நகைச்சுவையாக உள்ளன .

ஆனால் , பாதியில் இருந்து தான் சந்தம் தொடங்குவதாக உள்ளது .

krishna said...

நிஜாம் அழகா எளிமையா எழுதுறீங்க . சூப்பெர்
------------------------------------------------
பதிவு திருடர்கள் விருது பற்றிய அறிவிப்பு
http://saidapet2009.blogspot.com/2009/09/blog-post_7175.html

அன்புடன் மலிக்கா said...

சகோதரர் அவர்களுக்கு முதற்கன் பாராட்டுக்கள்
தாங்களின் இப்பணி சிறப்புடன் செயல்பட வாழ்த்துக்கள்,

நல்ல கருத்து
எளிமையான எழுத்து

NIZAMUDEEN said...

//இந்த வரிகள் நகைச்சுவையாக உள்ளன .

ஆனால் , பாதியில் இருந்து தான் சந்தம் தொடங்குவதாக உள்ளது .//

-நகைச்சுவை என்றதற்காக நன்றி இராஜ்குமார் அவர்களே!
அப்புறம்... இது கவிதை இல்லை; கவிதை மாதிரி!

NIZAMUDEEN said...

//நிஜாம் அழகா எளிமையா எழுதுறீங்க . சூப்பெர்//

-இக்கவிதையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோல
நண்பரைப் பார்க்கச் சென்றபோது கண்டவற்றையே
இதில் எழுதினேன்.
நன்றி கிருஷ்ணா!

NIZAMUDEEN said...

//நல்ல கருத்து
எளிமையான எழுத்து//

-கவிஞரே பாராட்டிட்டீங்க!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...