...பல்சுவை பக்கம்!

.

Friday, September 18, 2009

திருடர்கள் ஜாக்கிரதை!

திருடர்கள் ஜாக்கிரதை!


தமிழ் வலைப்பூக்களில் தொழில்நுட்பம்
சார்ந்த பதிவுகளை மிக எளிய முறையில்
தரக்கூடியவர் எழுத்தாளர் சுமஜ்லா அவர்கள்.

இவ்வாறே பல விந்தைகளை தனது
வலைப்பூவில் தரும் மற்றொமொருவர்
ஸ்ரீ.கிருஷ்ணா அவர்கள்.

தொழில்நுட்பப் பதிவுகளை தெரியாதவர்களும்
இவற்றின்மூலம் அவற்றை அறிந்து கொள்ளலாம்.

ஆனால், சமீபத்தில் ஸ்ரீ.கிருஷ்ணா ஒரு
மேட்டர் பதிந்திருந்தார். அது, வேறொருவரால்
திருடப் பட்டது. அதில் வரிக்கு வரி
அப்படியே காப்பி செய்து பேஸ்ட்
செய்யப்பட்டதுதான் மிகக் கொடுமை.

சிலர் தெரிந்தே இவ்விதம் திருவதால்
அந்தப் பதிவை முதலில் வெளியிட்ட
பதிவரின் திறமை மறைக்கப்படுகிறது.
இதுகுறித்தும் ஸ்ரீ.கிருஷ்ணா ஒரு பதிவு
தந்திருக்கிறார்.

இனி இவ்வாறு திருட்டுச் செயல்
தொடர்ந்தால் அவர்களுக்கு
விருது வழங்கப்படும் என்றும்
அதை எங்கள் வலைப்பூவில்
வெளியிடுவோம் என்று எச்சரிப்பதோடு
பதிவுத் திருடர்(கள்) அதையும்
திருடுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்
என்றும் இதன்மூலம் அறிவிக்கிறோம்.

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

2 comments:

krishna said...

நிஜாம் ஒரு நல்ல விஷயத்தை நகைச்சுவை நடையில் சொல்லி அசத்தி இருக்கிறீர்கள் ,

புதுவை.காம் நண்பர் சொல்லி இருப்பதை பாருங்கள் .

//என்னுடைய www.pudhuvai.com இல் நான் வெளியிடும் பதிவுகளையும் அப்படியே வாந்தி எடுத்ததுபோல சிலர் அவர்களது பதிவில் போட்டு விடுகிறார்கள்..அவர்களிடம் கேட்டால் உங்களாலும் பதிவு மக்களை சென்றடைகிறது...என்னாலும் பதிவு ம‌க்களிடம் சென்றடைகிறது என தத்துவம் பேசுகிறார்கள்.. பணிச்சுமை+குடும்ப‌சுமை இரண்டிற்க்கும் நடுவில் படைப்பை படைத்தால் கொஞ்சம் கூட கூசாமல் அப்படியே போட்டு தள்ளி அதற்கு ஓட்டு வேறு வாங்கிக்கொள்கிறார்கள் என்ன செய்வது எல்லாம் தலை எழுத்து!!!//

இந்த நிலை தான் நம்மில் பல பதிவர்களுக்கு மற்றவர்களுக்கு வரும்போது தான் அவர்கள் உணருவார்கள் அப்போது நல்ல முடிவு கிடைக்கும் காத்திருப்போம் .

NIZAMUDEEN said...

நன்றி கிருஷ்ணா.
இதற்கு ஒரு முடிவு செய்வோம்,
விரைவில்.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...