...பல்சுவை பக்கம்!

.

Saturday, May 29, 2010

சர்வதேச புகையிலை எதிர்ப்பு நாள்!

சர்வதேச புகையிலை எதிர்ப்பு நாள்!சர்வதேச புகையிலை எதிர்ப்பு நாள் [World No Tobacco

Day], ஓவ்வோர் ஆண்டும் மே 31ஆம் நாள் உலகம்

முழுவதும் கடைபிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.புகையிலையை உள்ளடக்கமாகக் கொண்ட சிகரெட்,

சுருட்டு மற்றும் வெற்றிலைப் பாக்குப் புகையிலை

போன்றவற்றை நுகர்வதால், அதைப் பயன்படுத்துவோர்

மற்றும் சுற்றிலும் உள்ளோர் தாக்குதலுக்குள்ளாகி

அடைகின்ற பாதிப்புக்களை அறிந்தும் நாம் அவற்றில்

நம்மை இழந்து, மீள முடியாமல் தவித்து வருகிறோம்..நாமும் நமது சக உறவினர்களும் சுற்றத்தார்களும்

சுகமான நலவாழ்வு வாழ, புகையிலையை தவிர்த்து,

புத்துணர்ச்சிப் பெறுவோம்!!!அன்பன்,

அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
 
 
[படம் நன்றி: தினமலர்]


ஒரே ஒரு வாக்கு! ஓஹோன்னு வாழ்த்து!!

Sunday, May 16, 2010

தினமும் தொழிலாளியைப் போற்றுவோம்!!!

தினமும் தொழிலாளியைப் போற்றுவோம்!!!கட்டடம் கட்டும் கொத்தனார்
தோட்டம் பயிரிடும் தோட்டக்காரர்

துணிகள் நெய்யும் நெசவாளர்
வீட்டில் உதவும் வேலையாளர்

சமையல் செய்யும் சமையல்காரர்
சலவை செய்யும் சலவைக்காரர்

வாகனம் ஓட்டும் ஓட்டுனர்
சீட்டு கொடுக்கும் நடத்துனர்

தலைமுடி திருத்தும் நிபுணர்
துப்புறவு செய்யும் பணியாளர்

சேவை செய்யும் செவிலியர்
காவல் செய்யும் காவலாளி

கவிதை எழுதும் கவிஞன்
கதைகள் சொல்லும் கதைஞன்

துணிகள் தைக்கும் தையல்காரர்
அஞ்சல் தரும் அஞ்சல்காரர்

பத்திரிகை போடும் சிறுபையன்
பால்தனை ஊற்றும் பால்காரர்

தானியம் தருவான் விவசாயி
பொருட்கள் விற்கும் வியாபாரி

மூட்டை தூக்கும் சுமைகூலி
ஆடுகள் மேய்க்கும் இடையர்

கணக்குப் போடும் கணக்காளர்
கணிணியில் கலக்கும் பொறியாளர்

சட்டம் காக்கும் காவலர்
மருத்துவம் பார்க்கும் மருத்துவர்

நீதியை நா(ட்)டும் வழக்கறிஞர்
மக்களை ஆளுகின்ற அதிகாரி

இவர்கள் அனைவரும் உழைப்பாளி
இப்படியும் அழைக்கலாம் 'தொழிலாளி'

திகட்டாத வளங்கள்பெற வாழ்த்துவோம்!
தினமும் தொழிலாளியைப் போற்றுவோம்!!

உலகத் தொழிலாளர் அனைவருக்கும்
தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்!!!

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

29-04-2009 அன்று தமிழ்குடும்பத்தில் இது வெளியானது.


வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!
Related Posts Plugin for WordPress, Blogger...