...பல்சுவை பக்கம்!

.

Wednesday, October 20, 2010

நகைச்சுவை; இரசித்தவை 12

நகைச்சுவை; இரசித்தவை 12
========================"தலைவரோட வெளிநாட்டுக் காருல என்ன எழுதியிருக்கு?"

" 'BE INDIAN; BUY INDIAN'-னு எழுதியிருக்கு!"

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

"டாக்டர்! எனக்கு உடம்பு குண்டாயிட்டே போகுது.
உடம்பு குறையறதுக்கு என்ன செய்யணும்னு
சொல்லுங்க, டாக்டர்!"

"ஒரு மாதத்துக்கு தினமும் காலை, மதியம், இரவு
மூணு வேளையும் மூணு பிரட் ஸ்லைஸ் சாப்பிடுங்க.
ஒரு மாதம் கழித்து மறுபடியும் வாங்க!"

"சரி டாக்டர். மூணு துண்டு பிரட் சாப்பிடச்
சொன்னீங்களே, அது எப்ப சாப்பிடணும்
சாப்பாட்டுக்கு முந்தியா, சாப்பாட்டுக்கு பிந்தியா?"

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

"ராஜு, இந்தக் காலண்டர் எங்க மாட்டலாம் சொல்லு?"


"அப்பாதான் டெய்லி காலண்டர்லருந்து தாள்
கிழிச்சி, கிழிச்சி போடுவாரு. அவருக்கு எட்டாத
உயரத்தில காலண்டர மாட்டும்மா!"

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அன்பன்,

அ.முஹம்மது நிஜாமுத்தீன்.படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Sunday, October 10, 2010

பதிவுலகில் நிஜாம் பக்கம்!

'குட் பிளாக்ஸ்' பகுதியில் இந்த இடுகையை இணைத்துள்ள 'யூத்ஃபுல் விகடனு'க்கு நன்றி!!


1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

NIZAMUDEEN (அ. முஹம்மது நிஜாமுத்தீன். )

2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

ஆமாம், எனது உண்மையான பெயர்தான்.

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி....

காலடி எடுத்து வைத்ததா...?
முதல்ல 'தமிழ்குடும்பத்'தில் எழுதிக் கொண்டிருந்தேன்.
அப்புறம் வலைப்பூக்களில் பின்னூட்டங்கள். தொடர்ந்து
வலைப்பூ...

4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

முதலில் அன்பர்களின் வலைப்பூக்களில் கமெண்ட்
போட்டுக் கொண்டிருந்தேன். அடுத்ததா திரட்டிகளில்
கொண்டு இணைத்தேன். இப்போ நம்மையும் நம்பி ஒரு
நட்புவட்டம் வந்து அன்போடு ஆதரவு தர்றாங்களே...

5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

இந்த வலைப்பதிவில் எனது சொந்த அனுபவங்களை,
நிறையவே பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அதை
சுவாரஸ்யமாய் படித்து பல பதிவர்கள் 'இப்படியெல்லாம்
நடக்குதா?" என்று வியப்போடு கேட்டுமிருக்கிறார்கள். இதுதான் விளைவு.

6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

நண்பர்களை சம்பாதிப்பதற்காகவும் அவர்களுக்கு நன்றாக பொழுது போவதற்காகவும் இந்தப் பதிவுகளை எழுதுகிறேன்.

7. நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

ஒன்னு போதுமே!!!

8. மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

மற்றவர்களின் மனம் வேதனைப்படும்படி எழுதுபவர்களின்மேல் கோபம் ஏற்பட்டதுண்டு. ஆனால், சிலரிடத்தில் பொறாமை ஏற்பட்டதில்லை; வியப்புதான் ஏற்பட்டிருக்கிறது. தினம் பதிவுகள் தரும்
வேலன் சார், 500 ௦௦பதிவுகளுக்குமேலும் அசராமல்
எழுதிக்கொண்டிருக்கும் மாயவரத்தான், பன்முகக்
கலைஞர் சுமஜ்லா -- என்று வியப்புக்கள் ஏற்படுத்தும் பல பதிவர்கள் உண்டு.

9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி...

அவுங்கதான் எனக்கு வலைப்பூ ஆரம்பிங்கன்னு ஐடியா
கொடுத்தாங்க; முதலாவது கமெண்ட்டும் போட்டாங்க. அந்தப் பாராட்டு எனக்கு
அடுத்தடுத்து எழுத உதவியாயிருந்தது. நன்றி சகோதரி சுமஜ்லா.

10.கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

என்னைப் பற்றியா...? எனது சிறு வயது முதலே பத்திரிகைகளில் நிறைய எழுதியும்
பரிசுகள் பெற்றும் இருக்கிறேன். இப்போ உங்கள் ஆதரவோடு வலைப்பூ. வேற ஏதாவது கேள்விகள் இருக்கா?

(டிஸ்கி: தொடர் பதிவிற்கு எனக்கு அழைப்பு விடுத்த சகோதரி அன்னுவிற்கு நன்றி!)

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Friday, October 1, 2010

குண்டப்பா & மண்டப்பா (4)

குண்டப்பா & மண்டப்பா (4)
குண்டப்பா & மண்டப்பா (3) இங்கே!

மண்டப்பாவை, குடும்பத்தோடு விருந்துக்கு வருமாறு
அழைத்திருந்தார் குண்டப்பா. சம்மதித்த மண்டப்பா,
விருந்து நாளன்று தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன்
வந்திருந்தார்.

விருந்து கோலாகலமாக ஆரம்பமாகியது. தடபுடலான
சாப்பாடு. மட்டன் பிரியாணி, சிக்கன் ரோஸ்ட், தாளிச்சா,
கறி குழம்பு, பொறியல், வதக்கல், துவையல், பச்சடி,
பாயசம், பழம் என்று அமோகமாயிருந்தது சாப்பாடு.

"நல்லா சாப்பிடு; நல்லா சாப்பிடுங்க!" என்று
மண்டப்பாவையும் அவர் மனைவி, பிள்ளைகளையும்
கவனித்துக் கொண்டிருந்தார் குண்டப்பா.

சாப்பிட்டுக் கொண்டே, "சாப்பாடு எல்லா ஐட்டமும்
வெகு பிரமாதம்; நல்லா டேஸ்ட்டா இருக்கு!
உன் மனைவி சுவையாய் சமைத்திருக்கிறாங்க!" என்று
கூறிக் கொண்டே சாப்பிட்டார், மண்டப்பா.

அப்போது, "என் மனைவி எல்லா சாப்பாடும் ரொம்ப
சுவையாய் சமைப்பாள். அதிலும் ஊறுகாய்
ரொம்ப அருமையாய் செய்வாள். மாவடு ஊறுகாய்
என் மனைவி செய்தது, அஞ்சு வருஷமாய் எங்களிடம்
இருக்கு!" என்று மனைவியைப் பற்றி பெருமையாய்
மண்டப்பாவிடம் சொன்னார் குண்டப்பா.

"அப்படியா, அதை எடுத்துவரச் சொல்லு; சாப்பிட்டுப்
பார்ப்போம்" என்றார் மண்டப்பா.

"என்னது, சாப்பிட்டுப் பார்க்கணுமா!? அப்படி சாப்பிட்டு
பார்த்திருந்தால், இப்படி அஞ்சு வருஷம் வைத்திருக்க
முடியுமா???" என்று பதறினார் குண்டப்பா.

அதைக் கேட்ட மண்டப்பா விருந்து சாப்பிடுவதை
மறந்து திகைத்துவிட்டார். குண்டப்பா யாரு? அறிவுக் கொழுந்து அல்லவா!


அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!
Related Posts Plugin for WordPress, Blogger...