நகைச்சுவைப் பேரரசர், எழுத்தாளர் திரு. கீழை அ. கதிர்வேல் அண்ணன் அவர்கள் பல்லாண்டு காலமாக
பத்திரிகைகளில் எழுதிய ஜோக்குளிலிருந்து 400
ஜோக்குகளைத் தொகுத்து 'நகைச்சுவை நானூறு'
என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டிருக்கிறார்கள்.
இந்த நகைச்சுவைகளைப் படிக்கப் படிக்க மனபாரமெல்லாம்
குறையும். டென்ஷன் விலகும். மனம் இலேசாகும்.
நோய்கள் ஓடி ஒளி(ழி)யும். மீண்டும் மீண்டும் படிக்கலாம்.
இந் நூலில் அனைத்துத் துறைகளிலும் பொதிந்துள்ள
நகைச்சுவையை வெளிக் கொண்டு வந்து தருகிறார்
அண்ணன் கீழையார்.
நூலுக்கு பாக்கியம் ராமசாமி, லேனா தமிழ்வாணன், பிச்சினிக்காடு இளங்கோ ஆகியோர் அணிந்துரை தந்துள்ளார்கள்.
நூல் : நகைச்சுவை நானூறு
ஆசிரியர் : கீழை அ. கதிர்வேல்
வெளியீடு: சிரிப்பரங்கம்,
அம்பத்தூர்,
சென்னை.
நாள் : 12/01/2014
கீழை அ. கதிர்வேல் அண்ணன் அவர்கள் எனக்கு அனுப்பித் தந்த அவரது புகைப்படம்:
***** ***** ***** ***** ***** ***** ***** *****
'இளமை எழுதும் கவிதை நீ' புதினம்!
நண்பர் குடந்தையூர் ஆர். வி. சரவணன் அவர்கள் எழுதிய 'இளமை எழுதும் கவிதை நீ' தொடர்கதையை புத்தகமாக வெளியிடுகிறார்.
நாள் : 05/01/2014
இடம்: டிஸ்கவரி புக் பேலஸ்.
இந்தக் கதை காதல், கல்லூரி, கலாட்டா, கலகலா என்று கலந்து கட்டி இருக்கின்றது.
இந்நூலுக்கு எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களும் பதிவர் முனைவர் எஸ். சங்கர் அவர்களும் பதிவர் அரசன் அவர்களும் மதிப்புரைகள் வழங்கியுள்ளனர்.
இரு நூல்களையும் படித்துப் பாருங்கள் நண்பர்களே!
-அ. முஹம்மது நிஜாமுத்தீன்.
.
படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!





