...பல்சுவை பக்கம்!

.

Thursday, December 31, 2015

வாடிக்கை மறந்ததும் ஏனோ? பதிவு #126

2015 நிறைவுப் பதிவு!

வாடிக்கை மறந்ததும் ஏனோ? பதிவு - 126


எனக்குத் தெரிந்த ஒரு  நபர், தனது வாடிக்கையாளருக்கு பொருள்களை கடனில் விற்பனை செய்திருந்தார். வாடிக்கையாளர் அத்தொகையை ஒரு மாதத்தில் தருவதாகச் சொன்னவர், சொன்னபடி தரவில்லை. 


இந்த நபர், வாடிக்கையாளரிடம் பல முறை கேட்டுவிட்டார். வாடிக்கையாளர் 'அடுத்த மாதம் தருகிறேன், அடுத்த மாதம் தருகிறேன்' என்று கால நீட்டிப்பு செய்துவந்தார். மாதங்கள் 6 கடந்தபின்னும் பணம் வசூலாகவில்லை. 
இந்த நபர், வாடிக்கையாளரின் வீட்டிற்கே சென்று சப்தம் போட்டுக் கேட்டும் வாடிக்கையாளர் அசரவில்லை. அதே "அடுத்த மாதம் தருகிறேன்" பதிலைத்தான் சொன்னார்.


இந்த நபருக்கு கோபம் அதிகமாகிவிடவே, "இந்தப் பாரு, அடுத்த வாரம் வருவேன்... பணம் தரலைன்னு வச்சிக்க; துப்பாக்கி எடுத்து சுட்ருவேன், ஜாக்கிரதை" என்று கத்திவிட்டார். 


வாடிக்கையாளரோ, "அண்ணே, சுடுங்க! நல்லா சுடுங்க!! ஆனால், நெஞ்சில சுடுங்க! அப்பத்தான் பொட்டுனு உயிர் போகும்! ஆனால், உங்களுக்கு சல்லி வரவே வராது! அதனால, நெஞ்சில சுடுங்க!" என்று கூலாக பதில் சொன்னாராம். 
இந்த நபர் மிரண்டு போய் திரும்பி வந்து, எல்லோரிடமும் புலம்பிக் கொண்டிருக்கிறார். 


மீதியை அடுத்த வாரம் சொல்றேன். (இன்ஷா அல்லாஹ்!)
குறிப்பு: இந்த சம்பவம், நமது தாய் நாட்டில் நடக்கவில்லை!
'சல்லி' என்பது 'காசு' அல்லது 'பணம்' ஆகும்.  

-அ. முஹம்மது நிஜாமுத்தீன்.
. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

மூக்குடைப்பு போட்டி - பதிவு #125

மூக்குடைப்பு போட்டி - பதிவு #125

சூப்பர் நாவல் 1986 இதழ் 'மூக்குடைப்பு போட்டி அல்லது கால் வாரல் போட்டி'யில் பரிசு பெற்று பிரசுரமானது.


Click for Options

நயாஸ். எங்க ஊரு நண்பன். [பெயர் மாற்றப்பட்டுள்ளது.]  எனது க்ளாஸ்மேட்கூட. சில விஷயங்களைக் கூறிவிட்டு 
அறிவுஜீவி மாதிரி 'That is Nayas' என்று தன்னை, 
தன் தலையை தட்டிக் கொள்வான். 


ஒருமுறை அப்ளிகேஷன் ஒன்றை அனுப்புகையில் Post Office-ல் என்னிடம்  'அதை அப்படி எழுது, இதை இப்படி வை, இந்த மாதிரி ஒட்டு' என்று சொல்லிக் கொண்டே அவனது application-ஐயும் ஒட்டி முடித்தான். அவன் application form  தவிர மற்றதெல்லாம் உள்ளே வைத்து கவரை ஒட்டிவிட்டான். Application Form  மட்டும் வெளியில். அவனிடம் அதை எடுத்துக் காட்டினேன். 


"ச்சே, நான் ஒரு மடையன்" என்று தலையில் தட்டிக் கொண்டான். நான் உடனே, "அதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஏன்னா, That is Nayas" என்றேன். அவன் முகம் போன போக்கு...

 இதே இதழில் 'சுபா பதில்கள்' பகுதியில் வந்த எனது கேள்வி + சுபா பதில்:

Click for Options

கேள்வி: தமிழ் - மகளா? அன்னையா?

சுபா பதில்: பயிலும்வரை, நிலா சோறூட்டும் அன்னை!
கைவந்த பின், அடங்கி நடக்கும் மகள்!!


இதே இதழில் பிரசுரமான பரிசுபெற்ற எனது கவிதை:

இங்கு சுட்டுங்கள்: "இன்று - நண்பா!"அந்த இதழ் அட்டைப்படம்:

Click for Options
-அ. முஹம்மது நிஜாமுத்தீன்.
. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!
Related Posts Plugin for WordPress, Blogger...