...பல்சுவை பக்கம்!

.

Sunday, December 17, 2023

நகைச்சுவை; இரசித்தவை! #22 (184)

நகைச்சுவை; இரசித்தவை! #22 (184)























நன்றி:
அனைத்து பத்திரிகைகள் மற்றும் எழுத்தாள நண்பர்கள்!
. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Saturday, November 25, 2023

நகைச்சுவை! இரசித்தவை! (21) #183!

நகைச்சுவை! இரசித்தவை!! #183






















. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!


Tuesday, September 26, 2023

தினந்தோறும் இலவச நாளிதழ்! #182

தினந்தோறும் இலவச நாளிதழ்! #182




ஹாங்காங்-கில் தினசரி காலையில் நடைபாதையில் செல்லும்போது இலவச நாளிதழ்களை வழங்குவார்கள்.
[ஆங்கிலத்தில் 2 மற்றும் சைனீஸ் 2.]

சென்ற வாரம் எனக்குக் கிடைத்தவை:
20/09ஆம் தேதி 32 பக்கங்கள்,
21/09ஆம் தேதி 36 பக்கங்கள்!

ஞாயிறு அன்று வெளிவரும் இந்து தமிழ் திசையின் 'பெண் இன்று' இணைப்புப் பத்திரிகையின் அந்த அளவு! Tabloid.

நடுவிலே திடமான ஸ்டாப்ளர் ப்பின்.

வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் அதிகப் பக்கங்கள்.

22/09/2023 வெள்ளிக்கிழமை 88 பக்கங்கள்.

விளம்பரங்களும் உண்டு. 
தகவல்களும் உண்டு.
ஓவியர் வரையும் விஐபிகளின் ஓவியங்களும் உண்டு.

நமது ஊரில் இப்படியான பத்திரிகைகள் வார இதழாக வந்தால், ரூபாய் 25க்கு விற்கலாம்.

தினசரி நாளிதழாக வெளியிட்டால் 
5 ரூபாய் அல்லது 
6 ரூபாய் என்று விலை இருக்கலாம்.

அந்த நாட்டில் தினமும் முற்றிலும் இலவசம்!!!

-அ.முஹம்மது நிஜாமுத்தீன் 
*

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Thursday, April 27, 2023

புத்தக விமர்சனம் - 'இன்னுமென்ன உறக்கம்! Book review #181

புத்தக விமர்சனம் - 'இன்னுமென்ன உறக்கம்! - கவிஞர் எல்.இரவி #181



நண்பர், ஓய்வு பெற்ற தமிழாசிரியர், கவிஞர் எல். இரவி அவர்கள் எழுதிய 'இன்னுமென்ன உறக்கம்!' கவிதைத் தொகுப்பு நூலை வாசித்தேன்.

மிகவும் குட்டி குட்டியான கவிதைகள்.
70 பக்கங்களில் சுமார் 95 கவிதைகள்.

அனைத்துமே கடுகு போல அளவில் சிறுசு; ஆனால் அவை தரும் பொருள் காரம் பெரிசு!

ஜாதிய வன்முறைகள், மதக்கலவரங்கள், அரசியல் தந்திரங்கள், வறுமை, காதல், தன்னம்பிக்கை, 
பாசம், உழைப்பு, தத்துவம்
என அனைத்து பொருள்கள் பற்றியும்  அர்த்தத்துடன் பொருள் செறிவுடன்  கவிதைகள் புனைந்துள்ளார்.

அரசாங்கத்தின் திட்டங்கள் சாமானியன் வரைக்கும் சென்று சேர்வதில்லை என்பதை 'எங்கள் நம்பிக்கை!' என்ற தலைப்பின் கீழ்,

'எங்களுக்காக இயற்றப்படும் திட்டங்கள் எல்லாம்  எங்களைப் போலவே 
திசைமாறிப் போய்விடுகின்றன'
என்று கவிதையாய் பாடுகிறார்.

தொலைக்காட்சித் தொடர்களில் அடிமையாகிக் கிடக்கும் பெண்களைப் பற்றி,

'கணவனின் வருகைக்குக்  காத்திருப்பதை விட  தொலைக்காட்சித்  தொடர்களுக்காக  காத்திருக்கும் குடும்ப குத்துவிளக்குகள்' 
- எனக் குறிப்பிட்டு சாடியுள்ளார்.

மீனவர்கள் என்ற தலைப்பில் எழுதிய கவிதையில்,

'இவர்கள் - கடல் மூழ்கி 
முத்து எடுப்பார்கள் சொத்து சேர்க்க அல்ல!
வயிற்று சோத்துக்காக...' என வரும் வரிகள் - 
'ஆடி முடித்து இறங்கி வந்தா அப்புறம்தான்டா சோறு' என்ற பாடல் வரிகளை ஞாபகப்படுத்துகின்றன.

அதே கவிதையின்
அடுத்த பத்தியில்,

'அசைக்க முடியாத  நம்பிக்கையில்  இவர்களின் பயணம்  தொடர்ந்து கொண்டே இருக்கும்  
கடல் அலை மேல்'  என்று குறிப்பிடுகிறார்.
கடலில் மூழ்கி முத்தெடுப்பதையும் அதேபோல் 'கடல் அலை மேலே' பயணம் போவதையும் இங்கு குறிப்பிடுகிறார்.
அந்த கடைசி வரியை, 
'கடல் அலை போல்' என்று முடித்திருக்கலாம்.

'இழந்ததை நினைத்து  கன்னத்தில் 
கை வைக்கும் இளைஞனே!  இருப்பதை வைத்து - உன்  எண்ணத்தில் நம்பிக்கை வை வானம் உன் வசமாகும்!' 
- இது மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் தன்னம்பிக்கை ஊட்டும் கவிதை 'நம்பிக்கை' என்ற தலைப்பில்.

இப்படியாக  படிக்க, 
படித்து ரசிக்க, ரசித்து படித்த  கவிதையைப் பற்றி யோசிக்க என பரவசம் உண்டாக்குகின்ற கவிதைகளைத்   தொகுப்பாகக் கொண்டுள்ளது  இந்நூல்!

படிக்கலாம்! ரசிக்கலாம்!!




விவரக் குறிப்புகள்:  

நூலின் பெயர்: 
'இன்னும் என்ன உறக்கம்!' (கவிதைகள்)

ஆசிரியர்:          
கவிஞர் எல். இரவி 

பக்கங்கள்: 71

விலை: 
ரூபாய் 80

வெளியீடு:
'தமிழகம்', 
1/84, தெற்குத் தெரு,
செ. புதூர் அஞ்சல்,
திருவிடைமருதூர் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம்.
அலைபேசி எண்: 
99521 13194

அன்பன்,
அ. முஹம்மது நிஜாமுத்தீன்.

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Sunday, April 23, 2023

'கல்கண்டு' நினைவுகள்! #180

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னால் கல்கண்டு வார இதழில், ரவீந்தர் அவர்கள் நிறைய தொடர்கதைகள் எழுதி வந்தார்.




அப்போது கல்கண்டு இதழில் தொடர்கதைகள் எழுதியவர்கள்:

ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, ஆர்னிகா நாசர்,
ஜேடிஆர் போன்றவர்கள்.

தொடர் கதைகள் பொங்கல் சிறப்பிதழில் ஆரம்பமானால், சித்திரை சிறப்பிதழ் முதல் வாரம்  முடிந்து விடும். 

சித்திரை சிறப்பிதழில் ஆரம்பமாகும் தொடர்கதை,
சுதந்திர தின சிறப்பிதழுக்கு முன் வாரம் முடிந்து விடும்.

சுதந்திர தின சிறப்பிதழில் ஆரம்பம் ஆகும் தொடர்கதைகள், சில வாரங்களிலேயே தீபாவளிக்கு முந்தின வாரம் முடிந்துவிடும்.

தீபாவளிச் சிறப்பிதழில் ஆரம்பமாகும் தொடர் கதைகள், பொங்கல் சிறப்பிதழுக்கு முந்தின வாரம் முடிந்து விடும்.

ஜே டி ஆர் மற்றும் ரவீந்தர்  ஆகியோர் இப்போது எழுத காணோம்.

கல்கண்டில் மருத்துவ கட்டுரைகளை அன்புதாசன் எழுதி வந்தார். நாட்டு நடப்புகளை நா. தேவாம்சம் எழுதி வந்தார்.
வாசகர்களும் இரு பக்க துணுக்குத் தொகுப்புகளை எழுதி வந்தனர். 




ஒருபக்கக் கட்டுரைகளை லேனா தமிழ்வாணன் எழுதி வந்தார். இரு தொடர்கதைகளும் எழுதினார்.
வெளிநாட்டு பயண கட்டுரைகளும் எழுதினார்.

-அ.முஹம்மது நிஜாமுதீன்.

#கல்கண்டு நினைவுகள்!
#உலக புத்தக தினம்

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Sunday, March 26, 2023

புத்தக விமர்சனம்: 'தாய்ப்பால் உறவு!'#179

புத்தக விமர்சனம்: 'தாய்ப்பால் உறவு!'#179



மயிலாடுதுறை க.ராஜசேகரன் அவர்கள் எழுதிய 'தாய்ப்பால் உறவு' சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் 15 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. அனைத்து சிறுகதைகளும் பத்திரிகைகளில் பிரசுரமானவை மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்றவை.

இதில் இடம் பெற்றுள்ள அனைத்து கதைகளுமே வேறு வேறு கதைக்களங்களில் பயணப்பட்டாலும் அடிப்படையாக 'விவசாயம்' என்ற ஒற்றைக் கோட்டில் செல்கின்றன.

ஒவ்வொரு கதையும் ஆரம்பம் முதல் அதன் இறுதிவரை அல்லது அதன் தீர்வு வரை செல்லும் வழியில் பயணப்படும் பாதை முழுவதும் காணப்படும் வர்ணனை நடை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தொய்வின்றி செல்வதால் விறுவிறுப்பை அதிகம் கூட்டுகிறது.

உதாரணமாக 'எல்லாமே இலவசம்' என்கிற கதையில் புத்தம் புதிதாக 'நேர வங்கி' என்ற ஓர் அழகிய கான்செப்ட் கையாளப்பட்டிருக்கிறது. இது பல வெளிநாடுகளில் நடைமுறைகளில் இருந்து வந்தாலும் இந்தியாவுக்கு இது புதிய விஷயம். இதை பலர் ஏற்றுக்கொள்வதில்லை அல்லது நிறைய பேர் வரவேற்கிறார்கள். ஆனால் அதே சமயத்தில் தன் வீட்டிலேயே இதற்கு எதிர்ப்பு இருக்கும்பொழுது தனது மனைவி சாவித்திரியையே அதை சுப்ரமணியன் உணர வைப்பதாக கதை முடிவது அழகிய ஒரு நிறைவைத் தருகிறது.


அதேபோல் குட்ட குட்ட குனியும் ஒரு விவசாயி அவன் முட்டு சந்தில் முட்டும் போது எப்படி உயிர் கொண்டு எழுவான், எப்படி தனி மனிதனாவான், எப்படி தனி ஒரு முதலாளியாக மாறுவான்,
தானே தன் பொருளுக்கு விலை வைப்பான் என்பதை 'வெவசாயி' கதை மூலமாக
அழகான ஐடியா உடன் முடிவை தந்த விதம் விதம்
பாராட்டிற்குரியது.


வெயிலில் வியர்வை வழிய கஷ்டப்பட்டு, பாடுபட்டு, பொருள்களை விற்கும் சிறு வியாபாரிகளிடம் அடாவடியாக அடிமாட்டு விலைக்கு பொருள்களை விலை கேட்கும் அடாவடி அமுதா போன்றவர்களுக்கு ஓர் அழகிய அறிவுரையாகவும் எந்த நேரத்திலும் திடீரென்று ஏற்படக்கூடிய எதிர்பாராத விபத்துகளை எப்படி சாதுரியமாக சமாளிப்பது என்ற கருத்தையும் இணைத்து அழகான கதையாக தந்திருந்தார் கதாசிரியர் தனது 'கத்தி' என்ற கதையின் மூலம்.
 இந்த சிறுகதை 'தினமலர் வாரமலர்' இதழில் 2019 ஆம் ஆண்டில் வெளியான சிறுகதை என்பது சிறப்பு!

வங்கி ஊழியரின் தரக்குறைவான பேச்சினால் ஒருவர் எப்படி வாழ்க்கையின் உயர்ந்த நிலைக்கு செல்கிறார் என்கிற சம்பவத்தைக் கூறும், மூன்று பக்கக் கதையாக  சாவி வார இதழில் வெளிவந்த 'அந்த வார்த்தைகளுக்கு நன்றி' என்கிற கதை இப்பொழுது வந்தால் ஒரு பக்கக் கதையாக பிரசுரம் ஆகிட வாய்ப்புள்ள கதை.

நீங்களும் இந்த நூலை வாங்கி படிக்க வேண்டும் அல்லவா? ஆகவே இதன் சிறப்புகளை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

நூல் பெயர்: தாய்ப்பால் உறவு
ஆசிரியர்: மயிலாடுதுறை க.ராஜசேகரன்
பதிப்பு: 
சந்தியா பதிப்பகம்
தொலைபேசி:
044-2489-6979
பக்கங்கள்: 162
விலை: ரூபாய் 160

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

nidurnizam.mn@gmail.com




. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Saturday, January 7, 2023

திருப்பூர் சாரதி ஜோக்ஸ்! (6) #178

திருப்பூர் சாரதி ஜோக்ஸ்! (6) #178













நன்றி:
ஆனந்த விகடன்,
காமதேனு,
குமுதம்,
கதிர்'ஸ்
ஆகிய இதழ்கள் மற்றும் 
நண்பர் திரு. திருப்பூர் சாரதி!

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!
Related Posts Plugin for WordPress, Blogger...