...பல்சுவை பக்கம்!

.

Monday, December 26, 2011

சில சிந்தனைகள் (பகுதி 9)

சில சிந்தனைகள் (பகுதி 9)

1. தைரியக்குறைவுதான் பயம்; தைரியத்துடன் எதிர்கொண்டால் பயத்திலிருந்து வெளியேறலாம்.

2. மிகைப்படுத்தப்பட்ட நிறைகளே புகழ்ச்சி. மிகைப்படுத்தப்பட்ட குறைகளே இகழ்ச்சி.

3. குதூகலத்தோடிருக்கும் கிழவரும் வாலிபரே! குதூகலமில்லா வாலிபரும் கிழவரே!

4. ஒரு ஜாண் வயிறு இல்லாட்டா, இந்த உலகத்தில் ஏது கலாட்டா? -பாடல்.

5. கத்தி ஒருவனைத்தான் அறுக்கும்; கடன் பரம்பரையையே அறுக்கும்.

6. பெருமை சேர்க்கும் விஷயங்கள் எளிதில் கிடைப்பதில்லை. எளிதில் கிடைக்கும் விஷயங்கள் பெருமை சேர்ப்பதில்லை.

7. பணக்காரர்கள் அனைவரும் சந்தோஷமாய் இருப்பதில்லை. ஆனால், சந்தோஷமாய் இருப்பவர்கள் அனைவரும் பணக்காரர்களே!

8. இந்தியர்கள் வாழ்வதற்காக உழைக்கிறார்கள். ஜப்பானியர்கள் உழைப்பதற்காகவே வாழ்கிறார்கள் -வைரமுத்து, விகடனில்.

9. எல்லா சுகமும் ஒரு சோகத்தில் முடிகிறது. எல்லா சோகமும் ஒரு சுகமாய் கனிகிறது -வைரமுத்து, விகடனில்.

10.மரணம் என்பது துக்கமில்லை. வாழ்வின் நிறைவு; உடல் அடையும் பூரணம் -வைரமுத்து, விகடனில்.

11.தண்ணில நெருப்பைப் போட்டா சாம்பல். நெருப்பு மேல தண்ணிய வைச்சா சமையல் -மாலன், புதிய தலைமுறையில்.

12.பொய் சொல்வதும் மற்றவர் மனம் புண்பட பேசுவதும் பெற்றோரைப் புறக்கணிப்பதும் க்ரைம்தான் -ராஜேஷ்குமார் (கல்கி)

13.சுத்தமாயிரு உனக்கு பெருமை சுத்தமாய் வைத்திரு உன் நாட்டுக்கு பெருமை. லஞ்சம் வாங்காதே உனக்கு பெருமை லஞ்சம் வழங்காதே உன் நாட்டுக்கு பெருமை!

14.குவளையில்தான் சோறு இல்லையே; அதில் நிரம்பும் மழையை இரசி -ஜப்பானிய ஹைக்கூ.

15.தேனைக் கொள்ளையடித்துச் செல்லும் வண்டு, தன்னையறியாமல் மகரந்தச் சேர்க்கைச் செய்துவிட்டுப் போகிறதே! -வைரமுத்து, விகடனில்.

படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!


Saturday, December 24, 2011

சொன்னது சரிதானா?

சொன்னது சரிதானா?

கேள்வி: "தமிழக அரசிடமிருந்து எம்.எல்.ஏ. தொகுதி
மேம்பாட்டு நிதி வரவில்லை. அதனால் தொகுதிக்கு
பணிகள் செய்ய முடியாததால் என்னால் எனது
தொகுதிக்கு செல்ல முடியவில்லை" என்று
எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த் கூறியது சரியா?

பதில்: ஒரு எம்.எல்.ஏ., அவரது தொகுதி மக்களின்
பிரதிநிதியாவார். தொகுதியின் வளர்ச்சித்
திட்டங்களுக்கு அரசு வழங்கும் நிதியை அந்தத்
திட்டங்களுக்கு மட்டும் பயன்படச் செய்யுமாறு
பனி மேற்கொள்வது எம் எல் ஏ வின் கடமையாகும்.
தொகுதி நிதியை கேட்டுப் பெற வேண்டியது
உறுப்பினரின் கடமை. எந்தவொரு உள்நோக்கத்தோடும்
செயல்பட்டு நிதியை வழங்க காலம் தாழ்த்துவது
அரசுக்கு அழகல்ல. அரசிடம் விஜயகாந்த் உரிமையுடன்
கேட்டுப் பெற்று, தொகுதி மக்களின் பயன்பாட்டுக்கு
வழங்குவார் என்று நம்புகிறேன்.

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

இதையும் படித்துப் பாருங்கள்:
தலைமைச் செயலக திருமண மண்டபம்!
.படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!
Related Posts Plugin for WordPress, Blogger...