...பல்சுவை பக்கம்!

.
Showing posts with label எச்சரிக்கை. Show all posts
Showing posts with label எச்சரிக்கை. Show all posts

Thursday, February 16, 2012

(வி)வேகம் தேவை!


(வி)வேகம் தேவை!
=====================


எங்கள் உறவினர் பெண்மணி ஒருவருக்கு
காய்ச்சல். 104 டிகிரியிலிருந்து எந்த மருந்து சாப்பிட்டும்
காய்ச்சல் குறையவேயில்லை . பக்கத்து நகர
மருத்துவமனையில் காட்டி, மாவட்டத்
தலைநக(ர் கடலூ)ரில் உள்ள மருத்துவமனையில்
உள் நோயாளியாகத் தங்கி சிகிச்சையை ஒரு வாரம்
தொடர்ந்தும் காய்ச்சல் மட்டும் குறையவேயில்லை.

பற்பல சிகிச்சைகள், மருத்துவங்கள், செலவினங்களுக்குப்
பிறகும் முன்னேற்றமில்லாததால் பெண்மணியின்
சகோதரர் உறுதியாய் ஒரு முடிவெடுத்தார்.

அதன்படி சென்னை போரூரில் உள்ள நவீன
வசதிகளுடைய தனியார் மருத்துவமனையில்
சேர்த்து, அதிதீவிர கண்காணிப்புப் பிரிவு
மற்றும் தீவிர கண்காணிப்புப் பிரிவுகளில்
அனுமதித்து மருத்துவம் பார்க்கப்பட்டது.
அதனால் காய்ச்சல் படிப்படியாய் குறைந்தது.

தொடர்ந்து திட உணவுகள் கொடுக்கப்பட்டு,
நலம் பெற்று வீடு திரும்பினார் அவர்.
தற்போது மருந்துகள் உட்கொண்டு
வருகின்றார்.

போரூர் மருத்துவமனையில் கண்டறியப்பட்ட
நோய்க் காரணி என்ன? எலி கடித்து அலட்சியமாய்
விட்டதால், ரத்தத்தில் விஷம் கலந்து,
நுரையீரல் வரை சென்று விட்டது என்பதே
காரணம்.

ஆகவே, இலட்சக் கணக்கில் பணம் செலவு
செய்வதைத் தவிர்க்கவும் நோய் தீவிரமாகி
உடல்நலக் குறைவு ஏற்பட்டு வேதனையுறுவதைத்
தடுக்கவும், எலி கடித்ததாய் சந்தேகம்
வந்தால் தாமதிக்காமல் விரைந்து சென்று,
நோய் எதிர்ப்பு மருந்தினை எடுத்துக்
கொள்ளுங்கள்.

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

.படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Friday, October 16, 2009

தீபாவளியும் பாதுகாப்பும்!




தீபாவளியும் பாதுகாப்பும்!

பட்டாசுக்கள் கொளுத்தும்போது காயம்
ஏற்பட்டு அதனால் தீபாவளியின் மகிழ்ச்சியை
இழக்கச் செய்யலாமா?

தீபாவளி அன்று பட்டாசு கொளுத்தும்போது
கடை பிடித்திட வேண்டிய சில பாதுகாப்பு
முறைகள் பற்றி 'நம்ம ஊரு செய்தி'
நவம்பர் 2002 இதழில் சில குறிப்புக்கள்
படித்தேன். இந்தி ஆசிரியர் திரு.ஆர்.
சுவாமிநாதன் தொகுத்தவை. அவை:

*பட்டாசுக்களை ஒரே இடத்தில் அதிகமாக
குவித்து வைக்கக்கூடாது.

*குழந்தைகள் எடுக்கும் வகையில்
பட்டாசுக்களை வைக்ககூடாது.

*உற்பத்தியாளர் பெயர் அச்சிடப்படாத
பட்டாசுக்கள் உள்ள பெட்டியை
வாங்கக்கூடாது.

*பட்டாசுக்கள் வெடிக்கும்போது தொளதொள
மற்றும் எளிதில் தீப்பற்றும் உடைகள்
அணியக்கூடாது.

*சரவெடியை நெருக்கமான தெருக்களிலோ,
மாடி குடியிருப்புக்களின் மத்தியிலோ
வெடிக்கக்கூடாது.

*கைக்குழந்தைகள், கர்ப்பிணிகள்,
முதியவர்கள், நோயாளிகளுக்கு இடையூறு
செய்யாமல் பட்டாசுக்கள் வெடிக்க
வேண்டும்.

*கொளுத்திய பட்டாசுக்களை ஒருவரை
நோக்கிக் காட்டுவதோ, தெருவில்
எறிவதோ கூடாது.

*தீக்குச்சிகள் மூலம் வெடிகள்
கொளுத்தக் கூடாது.

*பட்டாசு கொளுத்தும்போது கவனத்தை
வேறு விஷயங்களில் செலுத்தாதீர்கள்.
தீக்காயம் ஏற்பட்டால் குளிர்ந்த நீரையோ
அல்லது ஐஸ் கட்டிகளையோ வைத்து
முதல் உதவி செய்யவேண்டும்.

இந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை
கவனத்தில் கொண்டு சிறப்புடன் தீபாவளி
கொண்டாடுங்கள். குழந்தைகள் பட்டாசு
கொளுத்தும்போது பெரியவர்கள்
மேற்பார்வை செய்துகொள்ளுங்கள்.
தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Friday, September 18, 2009

திருடர்கள் ஜாக்கிரதை!

திருடர்கள் ஜாக்கிரதை!


தமிழ் வலைப்பூக்களில் தொழில்நுட்பம்
சார்ந்த பதிவுகளை மிக எளிய முறையில்
தரக்கூடியவர் எழுத்தாளர் சுமஜ்லா அவர்கள்.

இவ்வாறே பல விந்தைகளை தனது
வலைப்பூவில் தரும் மற்றொமொருவர்
ஸ்ரீ.கிருஷ்ணா அவர்கள்.

தொழில்நுட்பப் பதிவுகளை தெரியாதவர்களும்
இவற்றின்மூலம் அவற்றை அறிந்து கொள்ளலாம்.

ஆனால், சமீபத்தில் ஸ்ரீ.கிருஷ்ணா ஒரு
மேட்டர் பதிந்திருந்தார். அது, வேறொருவரால்
திருடப் பட்டது. அதில் வரிக்கு வரி
அப்படியே காப்பி செய்து பேஸ்ட்
செய்யப்பட்டதுதான் மிகக் கொடுமை.

சிலர் தெரிந்தே இவ்விதம் திருவதால்
அந்தப் பதிவை முதலில் வெளியிட்ட
பதிவரின் திறமை மறைக்கப்படுகிறது.
இதுகுறித்தும் ஸ்ரீ.கிருஷ்ணா ஒரு பதிவு
தந்திருக்கிறார்.

இனி இவ்வாறு திருட்டுச் செயல்
தொடர்ந்தால் அவர்களுக்கு
விருது வழங்கப்படும் என்றும்
அதை எங்கள் வலைப்பூவில்
வெளியிடுவோம் என்று எச்சரிப்பதோடு
பதிவுத் திருடர்(கள்) அதையும்
திருடுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்
என்றும் இதன்மூலம் அறிவிக்கிறோம்.

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
Related Posts Plugin for WordPress, Blogger...