...பல்சுவை பக்கம்!
.
Thursday, February 16, 2012
(வி)வேகம் தேவை!
(வி)வேகம் தேவை!
=====================
எங்கள் உறவினர் பெண்மணி ஒருவருக்கு
காய்ச்சல். 104 டிகிரியிலிருந்து எந்த மருந்து சாப்பிட்டும்
காய்ச்சல் குறையவேயில்லை . பக்கத்து நகர
மருத்துவமனையில் காட்டி, மாவட்டத்
தலைநக(ர் கடலூ)ரில் உள்ள மருத்துவமனையில்
உள் நோயாளியாகத் தங்கி சிகிச்சையை ஒரு வாரம்
தொடர்ந்தும் காய்ச்சல் மட்டும் குறையவேயில்லை.
பற்பல சிகிச்சைகள், மருத்துவங்கள், செலவினங்களுக்குப்
பிறகும் முன்னேற்றமில்லாததால் பெண்மணியின்
சகோதரர் உறுதியாய் ஒரு முடிவெடுத்தார்.
அதன்படி சென்னை போரூரில் உள்ள நவீன
வசதிகளுடைய தனியார் மருத்துவமனையில்
சேர்த்து, அதிதீவிர கண்காணிப்புப் பிரிவு
மற்றும் தீவிர கண்காணிப்புப் பிரிவுகளில்
அனுமதித்து மருத்துவம் பார்க்கப்பட்டது.
அதனால் காய்ச்சல் படிப்படியாய் குறைந்தது.
தொடர்ந்து திட உணவுகள் கொடுக்கப்பட்டு,
நலம் பெற்று வீடு திரும்பினார் அவர்.
தற்போது மருந்துகள் உட்கொண்டு
வருகின்றார்.
போரூர் மருத்துவமனையில் கண்டறியப்பட்ட
நோய்க் காரணி என்ன? எலி கடித்து அலட்சியமாய்
விட்டதால், ரத்தத்தில் விஷம் கலந்து,
நுரையீரல் வரை சென்று விட்டது என்பதே
காரணம்.
ஆகவே, இலட்சக் கணக்கில் பணம் செலவு
செய்வதைத் தவிர்க்கவும் நோய் தீவிரமாகி
உடல்நலக் குறைவு ஏற்பட்டு வேதனையுறுவதைத்
தடுக்கவும், எலி கடித்ததாய் சந்தேகம்
வந்தால் தாமதிக்காமல் விரைந்து சென்று,
நோய் எதிர்ப்பு மருந்தினை எடுத்துக்
கொள்ளுங்கள்.
அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
.
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
'வரும் முன் காப்போம்' என்ற கருத்தினை உண்மைச் சம்பவத்தோடு எடுத்துக் கூறி, எச்சரிக்கை செய்தீர்கள்.
நன்றி.
எடுத்துகாட்டுடன் நல்ல தகவல் ......
"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"
அருமை தகவல் நன்றி நிசாமுதீன்
@ E.K.SANTHANAM
வருகைக்கு, கருத்துக்கு நன்றி.
@ Kannan
வருகைக்கு கருத்துக்கு நன்றி.
@ r.v.saravanan
வருகைக்கு, கருத்துக்கு நன்றி.
மக்களுக்கு மிகவும் தேவையான கருத்து. நன்றி வாழ்த்துக்கள்
பயன்னுள்ள தகவல் நன்றி
எலிக்காய்ச்சலா? எலி கடித்தது அவருக்குத் தெரியாதா (தூக்கத்தில் கடித்ததா?)
நல்லவேளை சகோதரராவது சுதாரித்தாரே.
@ mohamed
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
@ அபி
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
@ ஹுஸைனம்மா
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
எச்சரிக்கைப் பதிவு...
தந்தமைக்கு நன்றிங்க...
தேவையான பதிவு ...
@ கலையன்பன்
வருகைக்கு கருத்துக்கு நன்றி.
@ wesmob
வருகைக்கு கருத்துக்கு நன்றி.
விழிப்புடன் இருக்க பகிர்ந்து கொண்ட செய்திக்கு என் நன்றிகள் சார் ..
தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்.பார்வை இட்டு மேலான கருத்தினைக்கூறுங்கள்.
பயனுள்ள தகவல். வாழ்த்துக்கள் நண்பா!
Post a Comment