ஜிகினா 4: உதயமும் அஸ்தமனமும்!
நக்கீரன் பதிப்பகத்திலிருந்து "உதயம்" என்கிற மாத நாவல் இதழ் வெளிவருவது தாங்கள் யாவரும் அறிந்ததே!
அந்த 'உதயம்' இதழின் ஆரம்பக் காலங்களில், 'வாசகர் கடிதம்' பகுதியில் ஒரு வாசகர், கடிதம் எழுதியிருந்தார். அதில், "உதயம் இதழில் சமையல் குறிப்புகள் பகுதி ஆரம்பிக்கலாமே?" என்று கேட்டிருந்தார்.
அந்த கடிதத்தின் கீழேயே, "இந்த கம்ப்யூட்டர் காலத்தில் சமையல் குறிப்பு வேண்டும் என்று கேட்கிறீர்களே? -ஆ-ர்." என்று ஆசிரியரும் பதில் கொடுத்திருந்தார்.
அதைப் பார்த்த நான், "கம்ப்யூட்டர் காலத்தில் சமையல் குறிப்பா என்று கேட்கும் நீங்கள் 'ஜாதகம் சாதகமா?' என்ற பகுதியை வெளியிடலாமா?" என்று பதில் கேள்வி ஒன்று கேட்டு, வாசகர் கடிதம் எழுதி அனுப்பினேன். அந்தக் கடிதம் அடுத்த மாத 'உதயம்' இதழிலேயே பிரசுரமானது. அந்தக் கடிதம் கீழே:
ஆனால், எனது அந்தக் கேள்விக் கடிதத்திற்கு ஆசிரியர் பதில் எதுவும் தரவில்லை. ஆனாலும் அடுத்த மாதமே உதயம் இதழில் பதில் இருந்தது.
என்னவென்றால், அந்த 'ஜாதகம் சாதகமா?' பகுதியே நிறுத்தப் பட்டு விட்டது. ஆமாம்... அந்தப் பகுதி அதன்பின் வரவேயில்லை.
அடுத்த ஜிகினாவில்...
தினமணியின் கதைக்கதிர் இதழில் பரிசு பெற்ற எனது விமரிசனக் கடிதம் பிரசுரமானது. அப்புறம் என்ன ஆனது?
இதையும் படிக்கலாம்:
ஜிகினா 1: விவ(கா)ரமான வியாபாரிகள்!
