...பல்சுவை பக்கம்!

.
Showing posts with label ஜிகிர்தண்டா. Show all posts
Showing posts with label ஜிகிர்தண்டா. Show all posts

Tuesday, November 16, 2010

75. ஜில்ஜில் ஜிகிர்தண்டா!

ஜில்ஜில் ஜிகிர்தண்டா!

இந்த இடுகையில் இரு இனிப்பான சங்கதிகள்!


இனிப்பு 1 :

இதை 75 -ஆவது இடுகையாய் இடுகிறேன். ஆதரவுகரம் நீட்டிவரும் அனைவருக்கும் எனது மனங்கனிந்த நன்றிகள். உங்கள் ஊக்கம், உற்சாகம் இவையே காரணங்கள்!

இனிப்பு 2 :



இன்சுவை குளிர்பானம் 'ஜிகிர்தண்டா'. இதன் செய்முறை இங்கே பதிவிடுகிறேன்.
 
இந்தக் குறிப்பை வெளியிட்ட குங்குமம் (11.01.2010)
இதழுக்கும் வழங்கிய திருமதி ரேவதி சண்முகம்
அவர்களுக்கும் நன்றிகள்.


மதுரையின் புகழ்பெற்ற 'ஜிகிர்தண்டா'வை நமது வீடுகளில்
தயா‌ர் செய்ய முடியும்? அதில் என்ன ஸ்பெஷல்?

பதில் சொல்கிறார் சமையல் கலை நிபுணர் ரேவதி சண்முகம்:

நிறைய பொறுமையும் ஆர்வமும் இருந்தால்
ஜிகிர்தண்டாவை வீட்டிலேயே செய்யலாம். அதே
ஒரிஜினல் சுவையுடன் வேண்டுமானால், பாசந்தியும்
குல்ஃபியும் கடல்பாசியும் முக்கியம்.



பாசந்திக்கு:

ஒரு லிட்டர் ஃபுல் க்ரீம் பாலைக் காய்ச்சவும். குறைந்த தணலில் கொதிக்கவிட்டு, மேலே படிகிற ஆடையைத் தனியே ஒரு கிண்ணத்தில் சேகர்க்கவும். பால் நன்கு இறுகியதும், அதில் அரை ஆழாக்கு சர்க்கரை சேர்க்கவும். பால் மீண்டும் நீர்த்துக் கொள்ளும்.

மறுபடி அது கெட்டியாகிற வரை காய்ச்சி, இறுகி வரும்போது, சேகரித்து வைத்துள்ள ஆடையைச் சேர்த்து, ஆற வைக்கவும். சீவிய பாதாம் தூவி, பாசந்தியாக இதை அப்படியேவும் பரிமாறலாம்.

குல் ஃபி ஐஸ்கிரீமுக்கு:

ஒரு லிட்டர் பாலைக் காய்ச்சவும். கெட்டியானதும், முக்கால் ஆழாக்கு சர்க்கரை சேர்த்து மீண்டும் காய்ச்சவும். குழம்பு பதத்திற்கு வரும்போது இறக்கி, ஓரங்கள் நீக்கி, மிக்சியில் உதிர்த்த பிரெட் தூவிக் கலக்கவும். அதன்மேல் ஏலக்காய் தூள், பாதாம் சேர்த்து நன்கு அடித்துக் கலக்கி, ஆற வைக்கவும். குல்ஃபி மோல்டு அல்லது சின்ன கிண்ணத்தில் ஊற்றி, செட் ஆகிற வரை வரை ஃப்ரீசரில் வைக்கவும்.

*25 கிராம் கடல் பாசியை 10 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு வெந்நீரில் அதைக் கொட்டினால் கரைந்து விடும். அதை ஒரு தட்டில் ஊற்றி ஆற வைத்தால் செட் ஆ‌கி விடும். பிறகு அதை சிறிய துண்டுகளாக வெட்டி தனியே வைக்கவும்.

உயரமான ஒரு டம்ளரில் முதலில் பாசந்தி விடவும்.
அதன் மேல் பொடியாக நறுக்கிய கடல் பாசி போடவும்.
அதன் மேல் குல்ஃபி ஐஸ் கிரீம் போடவும்.
அதன் மேல் நன்னாரி சிரப் சிறிது ஊற்றவும்.

இதே மாதிரி இரண்டு லேயர்கள் ஒவ்வொன்றையும்
சேர்க்கவும்.  கடைசியாக பொடியாக நறுக்கி வறுத்த
பாதாம், முந்திரி சேர்த்து அப்படியே சுவைக்கலாம்.


ரொம்பவும் குளிர்ச்சியான பானம் ஜிகிர்தண்டா. காரணம்
அதில் சேர்க்கிற கடல் பாசி. வயிற்றுப் புண்களை ஆற்றும்
குணமும் அதற்கு உண்டு. வெயில் காலத்தில் சாப்பிட ஏற்றது.
 
படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!
Related Posts Plugin for WordPress, Blogger...