...பல்சுவை பக்கம்!

.
Showing posts with label நண்பன். Show all posts
Showing posts with label நண்பன். Show all posts

Tuesday, January 10, 2012

ஆட்டுக் கறியும் மாட்டுப் பாலும் (அ) வாழ்க நீ எம்மான்!

ஆட்டுக் கறியும் மாட்டுப் பாலும் (அ) வாழ்க நீ எம்மான்!

விகடன் வலையோசையில் வந்த இந்தப் பதிவை இங்கே கிளிக் செய்து படிக்கலாம்.
நண்பர் என்னிடம் சொன்னார்: " எப்பொழுதும் என் சட்டைப்
பையில் காந்தி படம் இருக்கும். மறந்திட்டு வெளியில்
வந்திட்டாலும் திரும்ப போய் எடுத்திட்டுத்தான் வருவேன்"

நான் கேட்டேன்: "இப்பவும் பாக்கெட்ல இருக்கா?
காட்ட முடியுமா?"

நண்பர் சொன்னார் : "காட்டுவேன்; ஆனால் கையில
தர மாட்டேன்"

நான் சொன்னேன்: "காட்டுங்க"

நண்பர் எடுத்துக் காட்டினார், ஐநூறு ரூபாய் தாளை.
அதில் இருந்த காந்தி என்னைப் பார்த்து சிரித்தார்.
******************************************************

நண்பர் நிலக் கடலை அடிக்கடி சாப்பிடுவார்.
"காந்திஜிக்கு நிலக்கடலைப் பிடிக்கும்" என்பார்.
ஐந்து ரூபாய்க்கு அல்லது பத்து ரூபாய்க்கு
நிலக்கடலைப் பொட்டலம் சாப்பிட வாங்கினால்
முதலில் பெரிதாக, நல்ல நிலக்கடலை மூன்று,
நான்கினை தனியாக எடுத்து வைத்துக் கொள்வார்.
காரணம் கேட்டேன்.

நண்பர் சொன்னார் : "சாப்பிட்டு முடிக்கும்போது
கடைசி கடலை துவர்ப்பு உள்ள வீணாப் போன
கடலைதான் வாயில வருது. அதனால சாப்பிட்டு
முடித்ததும் இந்த நல்ல கடலையை, கடைசியாய்
சாப்பிடுவேன்"
***************************************************

காந்தி படம் பார்த்துவிட்டு வந்து சொன்னார்:
"காந்தி படம் எவ்வளவு அருமை தெரியுமா?
ரிச்சர்ட் அட்டன்பரோ சூப்பரா டைரக்ட்
பண்ணிருக்காரு. பெண் கிங்க்ஸ்லி
தத்ரூபமா நடிச்சிருக்காரு." என்று சொன்னார்.
'நான் மகான் அல்ல' படமும் பார்த்தார். (பழசு)
நான் மகான் அல்ல (புதுசு), மகான் கணக்கு
இவைகள் பார்த்தாரா என்று கேட்கவில்லை நான்.
*****************************************************

"நிலக்கடலையும் ஆட்டுப் பாலும் காந்திக்குப்
பிடிக்கும்" என்றார்.

"ஆட்டுப் பால் நீங்க குடிப்பீங்களா?" என்று நான்
கேட்டேன்.

"ஆட்டுப் பால் என்பதை நான் இரண்டாகப்
பிரித்து கொள்வேன்" என்றார்.

"எப்படி?" நான் கேட்டேன்.

"ஆடு என்பது தனி; பால் என்பது தனி. அதனால
பால் வந்து மாட்டுப் பால் குடிப்பேன். கறி வந்து
ஆட்டுக் கறி சாப்பிடுவேன்" என்றார்.
*****************************************************

வித்தியாசமான பழக்கம் நண்பரிடத்தில்.
ஒரு கிலோ நிலக்கடலை, ஒரு கிலோ பட்டாணி,
ஒரு கிலோ உப்புக் கடலை வாங்கி, ஒரு பெரிய
பெட் ஜாரில் ஒன்றாகக் கொட்டி, கலந்து
சாப்பிடுவார். நண்பர்கள் நாங்கள் அவர்
வீட்டிற்கு சென்றால் அந்த டப்பாவை எடுத்து
வந்து விடுவார். நாங்கள் மூன்று கடலையையும்
சேர்த்து சாப்பிடுவோம். சுவையாகவே இருக்கும்.

ஆனால் அவர் மட்டும் நிலக் கடலையை மட்டும்
தேர்ந்து எடுத்து சாப்பிடுவார். நாங்கள் காரணம்
கேட்டோம்.

"காந்திஜிக்குத் தான் முதல் மரியாதை" என்றார்.
***************************************************

கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி
கட்சிக்கு வாக்களித்தார். அதை எங்களிடம் சொன்னார்.

நாங்கள் காரணம் கேட்கும்போது, "அது (சோனியா)
காந்தியோட கட்சி" என்று சொல்லுவாரோ என்பதால்
நாங்கள் கேட்கவேயில்லை.
*******************************************************
(பி.கு.: ஜனவரி 30. நாதுராம் கோட்சேவினால்,
காந்திஜி படுகொலை செய்யப்பட்ட நினைவு நாள்.)
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

. படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Monday, September 7, 2009

கலாட்டா காலேஜி; கலாட்டா பாலாஜி!

நானும் நண்பன் பாலாஜியும் பஸ்ஸில்
காலேஜுக்குச் சென்று கொண்டிருந்தோம்.
காலேஜ், மயிலாடுதுறையிலிருந்து 22 கி.மீ.
தூரத்தில், பூம்புகாருக்கு 3 கி.மீ. முன்பாக
உள்ள மேலையூரில் அமைந்துள்ள
'பூம்புகார் பேரவைக் கல்லூரி'. சுருக்கமாக ப்பீ.ப்பீ.கே.
(இப்போது அதன் பெயர் 'இந்து சமய அறநிலை ஆட்சித்
துறையின் பூம்புகார் கல்லூரி')

அன்று திங்கள் காலை நேரம்.

பஸ்ஸில் நிறைவான கூட்டம். மாணவர்கள் அனைவரும்
அரட்டைப் பேச்சுடன் சென்று கொண்டிருக்கிறோம்.
எங்கள் இருவருக்கும் உட்கார இருக்கைகள் கிடைத்து விட்டன.

நான் பேசிக் கொண்டேயிருக்க, 'உம்' போட்டு, கேட்டு
வந்த பாலாஜி இடையிடையே கண் சொக்கி தூங்க ஆரம்பித்தான்.

நான் அவனிடம், "என்னப்பா தூங்கி விழறயே, ஏன்?" என்று
கேட்டேன்.

"சென்னை போய்விட்டு நேற்று நைட்தான் பஸ்ஸில ஊர் வந்தேன்"
என்றான் பாலாஜி.

"அட அப்படின்னா வீட்டிலயே தூங்கி ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதானே?"
என்று நான் கேட்டேன்.

"அதுக்குத்தானே காலேஜுக்கு வரேன்" என்று பட்டென்று பதில் சொன்னான் பாலாஜி.

'தூங்கினாலும் காலேஜ் போகணும் என்று காலேஜ் வருகிறானே என்று
பாராட்டுவதா; காலேஜுக்கு வந்தும் தூங்கப் போறானே என்று
திட்டுவதா' என்று நான் திகைத்து விட்டேன்.

வேடிக்கையை வாடிக்கையாய் கொண்ட கலகல நண்பன் பாலாஜி
இப்போது நம்மிடையே இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக
நோய் தாக்கி அகால மரணமடைந்தா(ன்)ர்.

அவருக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்!

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
Related Posts Plugin for WordPress, Blogger...