மறக்க முடியுமா?
- அ. முஹம்மது நிஜாமுத்தீன்,

இறைவனுக்கு நன்றி!
நல்வாய்ப்பாய் இஸ்லாமியர்கள்
தப்பித்தோம்!!!
நாதுராம் கோட்சே
கேடுகெட்ட நீ
மாட்டிக் கொண்டாய்!
கொல்வது எப்படி?
சொல்லித் தந்தாய்!
மார்பில் குத்துவது எப்படி?
அல்ல, அல்ல,
நெஞ்சில் சுடுவது எப்படி?
சொல்லித் தந்தாய்!
கும்பிடுவதுபோல் நம்பவைத்து
கொல்வது எப்படி?
நயவஞ்சகம் என்பது என்ன?
சொல்லித் தந்தாய்!
ஒரு தேசத்தின் ஜீவனாய்
இருந்தவரை எப்படி கொன்றாய்?
சொல்லித் தந்தாய்!
'பாவம் ஓரிடம்;
பழி ஓரிடம்'
என்பார்கள்.
அதை எளிதாய்
புரிய வைத்தாய்!
அதை, ஆர்.எஸ்.எஸ்.காரனாய்
நீ கொலை செய்து,
இஸ்லாமியர்மேல்
பழி போடுவது எப்படி?
சொல்லித் தந்தாய்!
"மாபாதகன்" என்பதன்
பொருள் என்ன?
சொல்லித் தந்தாய்!
இவற்றிற்கெல்லாம் ஒரு
சரித்திர சான்று
நீ சுட்டுக் கொன்ற
எங்கள் காந்தித் தாத்தா!
தேசத்தின் பிதா!
கேடுகெட்ட நீ
மாட்டிக் கொண்டாய்!
நல்வாய்ப்பாய் இஸ்லாமியர்கள்
தப்பித்தோம்!!!
மறக்க முடியுமா?
.
3 comments:
அதனால்தான் ,அவரோட சிலையை வைக்க விசுவாசிகள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் :)
அருமை சகோ அருமை!!!! மிக மிக ரசித்தோம்...
அருமை. பாராட்டுகள்.
Post a Comment