...பல்சுவை பக்கம்!

.

Sunday, July 31, 2011

பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா மற்றும் நான்!

பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா மற்றும் நான்!

பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா மற்றும் நான்!

'உங்கள் ஜூனியர்' மாத இதழ் சார்பாக 'வாசகர் சந்திப்பு'.
எனக்கும் அழைப்பு வந்தது. 26.02.1989 அன்று திருச்சி

அஜந்தா ஹோட்டலில் நடந்த அந்தச் சந்திப்புக்கு

என் நண்பரோடு நான் சென்றிருந்தேன்.


என் அபிமான எழுத்தாளர்கள் பட்டுக்கோட்டை பிரபாகர்,

சுபா இவர்களோடு வாசகர் சந்திப்பும் கலந்துரையாடலும்

கேள்வி-பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றன.


பட்டுக்கோட்டை பிரபாகரிட்ம் நான் ஒரு கேள்வி
கேட்டேன். "நரேன் - வைஜயந்தி துப்பறியும்
ஒரு
நாவலை நீங்களும், பரத் - சுசீலா
துப்பறியும் ஒரு
நாவலை சுபாவும் எழுதினால்
வித்தியாசமாயிருக்குமே?"

அதற்கு, "பரத் - சுசீலாவை உருவாக்கியவன் நான்.

நான் அவர்களின் பெற்றோர்; அவர்கள் என்
குழந்தைகள்.
சுரேஷும் பாலகிருஷ்ணனும்
நரேன் - வைஜயந்தியின்
தாய், தகப்பன்.
சொந்த தாய்+தகப்பன் இருக்கும்போது
குழந்தைகளை யாராவது மாற்றிக்கொள்வார்களா?

தத்து கொடுப்பார்களா?" என்று பதில் கேள்வி
கேட்டார்.

இந்தப் பதிலை அனைவரும் வெகுவாக இரசித்தோம்.

குறிப்பு: 'கல்கி' 17.07.2011 இதழின்
'ஆஹா ஆல்பம்'
பகுதியில் இது வெளிவந்தது.


நன்றி: கல்கி வார இதழ்.
. படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Thursday, July 21, 2011

நாரே தக்பீர் அல்லாஹு அக்பர் (பாடல்)

நாரே தக்பீர் அல்லாஹு அக்பர் (பாடல்)


சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் ஒலிநாடாவில்
கேட்டது இந்தப் பாடல்.

தொகையறா:
நானிலத்து முஸ்லிம்களின் தாரக மந்திரம்
நாளெல்லாம் நாவெல்லாம் சங்கை சொல்லும்
தீன் இனத்து தங்கங்களே ஒன்று கூடி
கனிவாய் சொல்வீரே...
நாரே தக்பீர் அல்லாஹு அக்பர்...

பல்லவி:
நாரே தக்பீர் அல்லாஹு அக்பர் என்றே முழங்குவோம்
நல்ல சீரணி கொண்ட கோமான் தாஹா நபிவழி தாங்குவோம்
நாமம் முழங்குவோம் இறைவன் நாமம் முழங்குவோம்
நாரே தக்பீர் அல்லாஹு அக்பர்...

ரணம் 1:
உள்ளமும் உணர்வும் இணைந்து
மேலோன் நல்லோன் புகழில் மிளிர்ந்து...
நல்லோன் புகழில் மிளிர்ந்து...
மெய் சொல்லால் நிதமும் அல்லாஹ் ஒருவனின்
மேன்மையை நீ முழங்கு...
மேன்மையை நீ முழங்கு
துன்பமும் துயரமும் மறந்து
தூய இன்ப நிலையிலே உவந்து...
இன்ப நிலையிலே உவந்து...
அன்பாய் ஈர்க்கும் அறிவின் உயிரோட்டம்
மனக் கண்ணில் தோன்றவே
நிதம் சொல்வாய் இந்த அகிலம் ஆளும் இறையோன் நாமமே
ஒன்றாய் கூடியே எந்நாளும் ஒன்றாய் கூடியே
நாரே தக்பீர்... அல்லாஹு அக்பர்...

சரணம் 2:
ஆதம் முதல் வந்த நபிமா ரெல்லாம்
வல்ல ஏகோனை நினைந்தே மொழிந்தார்களே
வானோரும் தினம் தினம் துதி பாடினார்...
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... அ... ஆ...
வானோரும் தினம் தினம் துதி பாடினார்...
அன்பு தீனோரே தக்பீரை கனிந்தே சொல்வீர்
அன்பு தீனோரே தக்பீரை நிலை நாட்டுவீர்
நாரே தக்பீர் அல்லாஹு அக்பர் என்றே முழங்குவோம்
நல்ல சீரணி கொண்ட கோமான் தாஹா நபிவழி தாங்குவோம்
நாமம் முழங்குவோம் இறைவன் நாமம் முழங்குவோம்
நாரே தக்பீர்... அல்லாஹு அக்பர்...

பாடல் எழுதிய பாடலாசிரியர் பெயர் தெரியவில்லை.
பாடியவர் நெல்லை உஸ்மான். (தகவல் தந்த
பாடகர் தேரிழந்தூர் தாஜுதீன் அண்ணன் அவர்களுக்கு நன்றி!)
இந்தப் பாடல் நீங்கள் கேட்டதுண்டா? பாடலாசிரியர் பெயர்
உங்களுக்குத்தெரியுமா?
.படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Saturday, July 9, 2011

தலைமைச் செயலக திருமண மண்டபம்!

தலைமைச் செயலக திருமண மண்டபம்!
கேள்வி: கடந்த தி.மு.க. ஆட்சியில்விஜயகாந்தின்


திருமண மண்டபத்தை இடித்தார்கள். அதற்கு


ஆளும் அ.தி.மு.க ஆட்சி என்ன பரிகாரம் செய்யலாம்?

பதில்: தி.மு.க. ஆட்சியில் கட்டி முடித்துச்


செயல்படாமல் கிடப்பில் கிடக்கும் தமிழக தலைமை


செயலகக் கட்டடத்தை விஜயகாந்திடம் கொடுத்து,


திருமண மண்டபமாக நடத்தச் சொல்லலாம்.

ஆனா ஒண்ணு பாஸ், இந்த ஐடியாவை நான்தான்


முதலில்சொல்கிறேன். "சமச்சீர் கல்விபற்றி நான்


அப்பவே சொன்னேன்" என்று ராமதாஸ்


சொல்வதுபோல யாரும் பங்குக்கு வரக்கூடாது, ஆமா!குறிப்பு: ஆனந்த விகடன் 29.06.2011 இதழில் 'நானே கேள்வி; நானே பதில்' பகுதியில் வெளிவந்தது.நன்றி: ஆனந்த விகடன்..படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Sunday, July 3, 2011

மயிலாடுதுறையை தலைமையாகக் கொண்டு புதிய மாவட்டம்!

மயிலாடுதுறையை  தலைமையாகக் கொண்டு புதிய மாவட்டம்!
சமீபத்தில் மயிலாடுதுறையின் தனிச் சுற்றிதழ் (ஜூன் 15 - 30) 
'சோழன் டைம்ஸ்' இதழில் மயிலாடுதுறை எம்.எல்.ஏ . 
திரு. அருட்செல்வன் அவர்களின் பேட்டியை படித்தேன்.
அதில் மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கம், 
மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையம் உட்பட
பல கருத்துக்கள் தெரிவித்திருந்தார். வாசகர்களின் 
கருத்துக்களையும் பத்திரிகை ஆசிரியர் கேட்டிருந்தார்.
அந்த இதழில் பத்திரிகையின் ஆசிரியர், அச்சிடுபவர் 
மற்றும் வெளியிடுபவர் ஆகியோர்களின் பெயரோ,
பத்திரிகை முகவரியோ இடம்பெறவில்லை. 
தொலைபேசி எண்கள் மட்டும் தரப்பட்டுள்ளன . 

இனி பேட்டியின் சில பகுதிகள்:-

மயிலாடுதுறை மாவட்டம் என்பதுபற்றி 
எம்.எல்.ஏ.அவர்களின் கருத்து:

" மயிலாடுதுறைய தலைமையிடமாகக் கொண்டு 
புதிய மாவட்டம் சாத்தியமா? சாத்தியமில்லையா 
என்பது வேறு விஷயம். ஆனால், அது காலத்தின்
கட்டாயம். இரண்டே இரண்டு சட்டமன்ற தொகுதிகள் 
கொண்ட அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் 
நடைமுறையிலிருக்கும்போது இதுவும் சாத்தியமே!

" இத்தொகுதிக்குட்பட்ட ஒருவர் தனது மாவட்டத்
தலைநகருக்குச் செல்ல  வேண்டுமாயின் இன்னொரு 
மாவட்டத்தைக் கடந்தோ அல்லது மற்றொரு
மாநிலத்தைக் கடந்தோ செல்ல வேண்டி
இருக்கின்றது. புவியியல் ரீதியாக இது முரண்பட்ட
பிரிவினை. அருகாமை மாவட்டத் தலைநகருக்குச் 
செல்வதைவிட என் சொந்த மாவட்டத் 
தலைநகருக்குச் செல்வதென்பது கூடுதல் 
நேரமும், செலவினமும் கொண்டதாக இருப்பது
விநோதமானது. மக்களின் உணர்வுகளுக்கு
இந்த புதிய அரசு மதிப்பளிக்கும் என நம்புகிறேன்." 

புதிய பேருந்து நிலையம் பற்றி எம்.எல்.ஏ. அவர்களின் கருத்து:

" எனது முன்னுரிமைத் திட்டங்கள் என்பது புதிய 
பேருந்து நிலையமும் அரசு மருத்துவமனையின்   
மேம்பாடும்தான். நகருக்கு ஒருங்கிணைந்த 
பேருந்து நிலையம் என்பது உடனடித் தேவை.
நகரின் போக்குவரத்து நெருக்கடி உள்ளிட்ட 
பல பிரச்னைகளுக்கும் அதுதான் தீர்வு. 

"கடந்த கால மக்கள் பிரதிநிதிகள் இவ்வளவு முக்கிய 
பிரச்னையில்  கவனக்குறைவாக இருந்துள்ளார்கள்.                      

"எனது முன்னோர்கள் புதிய பேருந்து நிலைய 
விவகாரத்தில் தங்களால் முடிந்த முன்னேற்றத்திற்கு 
வித்திட்டுள்ளார்கள். அதனை முழுமை பெற செய்ய 
நான் முயற்சிக்கிறேன். இதற்கான முழுப்பெருமையும் 
அந்த முன்னோடிகளை சேர்ந்தாலும் பரவாயில்லை.
புதிய பேருந்து நிலையம் மக்களுக்குக் கிடைத்தால்
போதும்."

இவ்வாறு எம்.எல்.ஏ. அருட்செல்வன் கூறியுள்ளார்.
அன்பர்கள் உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க 
வேண்டிய தொலைபேசி எண்கள்:

சோழன் டைம்ஸ் : 
94443 49974,
93606 28289,
04364 221603.

அன்பர்கள்  கருத்துக்களை இந்தப் பதிவிலும் 
கருத்துரையாக இடலாம். அவை எம்.எல்.ஏ.
அவர்களின்  பார்வைக்கு கொண்டு செல்லப்படும்.
(அனாமதேய கருத்துரைகளைத் தவிர்க்குமாறு
வேண்டுகிறேன்.)

(நன்றி : சோழன் டைம்ஸ்)    


  படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!
Related Posts Plugin for WordPress, Blogger...