...பல்சுவை பக்கம்!

.
Showing posts with label கே.அப்துல் ஹக்கீம். Show all posts
Showing posts with label கே.அப்துல் ஹக்கீம். Show all posts

Thursday, June 18, 2020

எங்கள் தந்தை! #146


எங்கள் தந்தை!

என்னையும் என் சகோதரிகளையும் அருகிலிருந்து வளர்த்தவர் எங்கள் அம்மா!

ஆனால், தூர தேசத்தில் இருந்துகொண்டு, எங்களுக்காக உழைத்து, கண்ணும் கருத்துமாய்
ஆர்வமூட்டி கடிதம் மூலம் எங்களை உற்சாகம் தந்து ஆளாக்கியவர்
எங்கள் தந்தை அமரர் *கே.அப்துல் ஹக்கீம்* அவர்கள்!

என்னுடைய மூன்று வயது கால கட்டத்தில் எனது புகைப்படத்தை எடுத்து அனுப்ப எங்கள் அன்னையிடம் கேட்டார்கள்.

ஸ்டுடியோவில் படம் எடுப்பதற்கு வாகாக நான் ஓர் இடத்திலும் உட்காரவோ நிற்கவோ இல்லை(யாம்)!
ஃபோட்டோகிராபர் தன்னிடமிருந்த பேனாவை சற்று தொலைவில் வைத்துவிட்டு, அதை நான் எடுத்துவரும்போது, ஃபோட்டோ எடுத்தார்.

அந்த படத்தைப் பார்த்துவிட்டு, "எதிர்காலத்தில்  எழுத்தாளனாய் வருவான்" என்றார்கள் எங்கள் தந்தை அவர்கள்.



அவ்வாறு அவர்களின் வாக்குப்படியே
பத்திரிகைகளிலும் வலைப்பூவிலும் நான் எழுதிக்கொண்டு இருக்கிறேன்!

அப்படி சொன்ன எங்கள் தந்தையை நினைத்து,
விய(ந்து பார்)க்கிறேன்!
.
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!
Related Posts Plugin for WordPress, Blogger...