...பல்சுவை பக்கம்!

.

Friday, January 1, 2016

நகைச்சுவை; இரசித்தவை (20) #127

நகைச்சுவை; இரசித்தவை (20) #127

புன்னகைப் புத்தாண்டு 2016.!
ஹா... ஹா.. ஹாஸ்யம்! (1)
"டெல்லி தேர்தல் முடிவை விட்டுத்தள்ளுங்க தலைவரே... ஒரு நல்ல செய்தி இருக்கு!"

"சொல்லுய்யா..."

"தாய்லாந்துல எலெக்சன் அறிவிச்சிருக்காங்களாம்!"
-சுரா. மாணிக்கம்
===============================================================

ஹா.. ஹா.. ஹா..ஸ்யம்! (2)
" 'ஆட்சியைப் பிடிப்பதுதான் என் கனவு'னு தலைவர் சொல்றாரே, பிடிச்சுடுவாரா?"

"அதான்... அவரே சொல்லிட்டாரே, கனவுன்னு!"
- எஸ். கோபாலன்.
===============================================================

ஹா.. ஹா.. ஹாஸ்யம்! (3)
"வாக்களித்தவர்களுக்கு தலைவர் இப்போது நன்றி சொல்வார்!"

"அந்த நாலு பேருக்கு நன்றி... வணக்கம்!"
-அ. ரியாஸ்
===============================================================

ஹா.. ஹா.. ஹாஸ்யம்! (4)
"தேர்தல் கமிஷன் வர வர ஃபைனான்ஸ் கம்பெனி மாதிரி ஆயிடுச்சு!"

"ஏன் தலைவரே புலம்பறீங்க?"

"டெபாசிட்டைத் திருப்பித் தர மாட்டேங்கிறாங்களே!"
- பி. ஆர். பாண்டி
===============================================================

ஹா.. ஹா.. ஹாஸ்யம்! (5)
"ஆட்சி அமைக்க கவர்னர்கிட்ட இருந்து இன்னும் அழைப்பு வரமாட்டேங்குதேய்யா?"

"தலைவரே... நாம ஜெயிச்சது இடைத்தேர்தல்ல!"
-மகா
===============================================================

ஹா.. ஹா.. ஹாஸ்யம்! (6)
"எங்க தலைவர் வெளிப்படையானவர் என்பதை இப்போதாவது நம்பறியா?"

"அதுக்காக 'பழச்சாறு அருந்தும்வரை உண்ணாவிரதம்'னா போர்டு வெப்பீங்க?"
-அதிரை புகாரி
========================================================================

ஹா.. ஹா.. ஹாஸ்யம்! (7)
"தலைவரே... நாம டெல்லியில தோத்தது நல்லதாப் போச்சு!"

"ஏன்?"

"செம குளிராம்... மைனஸ் 2.4 டிகிரி செல்சியஸாம்!"
-அ. ரியாஸ்
==============================================================

ஹா.. ஹா.. ஹாஸ்யம்! (8)
தலைவர் (மேடையில்) : "கடைசியாக ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்!"

மேடையில் அமர்ந்திருப்பவர்: "கடைசி ஆளையும் அனுப்பிட்டுத்தான் முடிப்பார் போல!"
-அ. ரியாஸ்
==============================================================

ஹா.. ஹா.. ஹாஸ்யம் (9)
இன்ஸ்பெக்டர்: "செல்போன் திருடனைக் கைது பண்ணியாச்சா?"

கான்ஸ்டபிள்: "நாட் ரீச்சபிள் சார்!"
-அ. ரியாஸ்
==============================================================

ஹா.. ஹா.. ஹாஸ்யம் (10)
"என்னப்பா... எப்பவும் பூட்டை உடைச்சு வீடு புகுந்து திருடுவே... இப்ப சைபர் கிரைம்ல பூந்துட்டே?"

" 'டிஜிட்டல் இந்தியா'னு நாடு வேகமாப்போகுது... நாமளும் அப்டேட் ஆகணும்ல சார்!"
- கிணத்துக்கடவு ரவி
==============================================================

ஹா.. ஹா.. ஹாஸ்யம் (11)
"தலைவர் ஏன் உம்முன்னு இருக்கார்?"

"அவரோட வாழ்க்கை வரலாறை '10 செகண்ட் கதை'யா எழுதிட்டாங்களாம்!"
-வி. சகிதா முருகன்
==============================================================

ஹா.. ஹா.. ஹாஸ்யம் (12)
"தலைவர் என்ன சொன்னார்னு ஜட்ஜ் கோபமா எழுந்துபோறார்?"

" 'கண்டிஷன் பெயில் கொடுங்க... இல்லைனா 
ஏர் கண்டிஷன் ஜெயில் கொடுங்க'னு
சொல்லியிருக்கார் மனுஷன்!"
-கிணத்துக்கடவு ரவி
==============================================================

ஹா.. ஹா.. ஹாஸ்யம் (13)
"நம்ம தம்பி நடிச்ச புதுப்படத்தை எப்படியாவது ஓட்டிரணும்யா!"

"ட்விட்டர் ஆளுங்ககிட்ட சொல்லிருவோம் தலைவரே, ஓட்டு ஓட்டுன்னு ஒட்டிருவாங்க!"
-பர்வீன் யூனுஸ்
==============================================================

ஹா... ஹா... ஹாஸ்யம் (14)
"தலைவரே, உங்களை வாட்ஸ்அப்ல வெளுத்து வாங்குறாங்கபோல?"

"லாக் அப்லயும் அதைத்தானேய்யா செஞ்சாங்க!"
~பர்வீன் யூனுஸ்
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!
Related Posts Plugin for WordPress, Blogger...