...பல்சுவை பக்கம்!

.

Friday, May 29, 2020

சின்னப் பயலே! சின்னப் பயலே!! #141சின்னப் பயலே! சின்னப் பயலே!! - கவிதை


தம்பிப் பயலே சின்னப் பயலே
நல்லா கேட்டுக்கோ!

அம்மா அப்பா சொல்லுற
பேச்சு கேட்டு நடந்துக்கோ!

அறிவு வளர வாழ்வு
உயர நல்லா படிச்சிக்கோ!

பெரியோர் அறிஞர் சான்றோர் அறிவுரை மதிச்சி நடந்துக்கோ!

அதிகாலை எழுந்து பாடங்கள் படித்து மனசுல பதிச்சிக்கோ!

அம்மாவுக்கு வீட்டு வேலைகள் உதவிகள் செய்து பழகிக்கோ!

இயலாதோர்க்கு உதவிகள் செய்து பண்பை வளத்துக்கோ!

பெரியோர் நமக்கு வழிகாட்டி ஆகவே அவர்வழி நடந்துக்கோ!

எளியோர் சுற்றம் நட்பு நாடு என்றும் விரும்பிக்கோ!

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
.

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!
Related Posts Plugin for WordPress, Blogger...