சின்னப் பயலே! சின்னப் பயலே!! - கவிதை
தம்பிப் பயலே சின்னப் பயலே
நல்லா கேட்டுக்கோ!
அம்மா அப்பா சொல்லுற
பேச்சு கேட்டு நடந்துக்கோ!
அறிவு வளர வாழ்வு
உயர நல்லா படிச்சிக்கோ!
பெரியோர் அறிஞர் சான்றோர் அறிவுரை மதிச்சி நடந்துக்கோ!
அதிகாலை எழுந்து பாடங்கள் படித்து மனசுல பதிச்சிக்கோ!
அம்மாவுக்கு வீட்டு வேலைகள் உதவிகள் செய்து பழகிக்கோ!
இயலாதோர்க்கு உதவிகள் செய்து பண்பை வளத்துக்கோ!
பெரியோர் நமக்கு வழிகாட்டி ஆகவே அவர்வழி நடந்துக்கோ!
எளியோர் சுற்றம் நட்பு நாடு என்றும் விரும்பிக்கோ!
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
.
.
12 comments:
சிறப்பான அறிவுரை. பாராட்டுகள்.
அருமை நண்பரே பொருத்தமான வரிகள் ரசித்து படித்தேன்.
கருத்துரைத்தமைக்கு நன்றி சார்!
ரசித்தமைக்கு நன்றி ஜி!
ஆஹா.... சின்னப்பயலுகளுக்கு ஏற்ற
அருமையான அறிவுரைகள்.
நீண்ட நாட்களுக்கு அப்புறம் நல்லதொரு தொடக்கம்... பாராட்டுகள்.. விடாமல் எழுதுங்கள்
அருமை...
அருமை...
கருத்துரை தந்ததற்கு நன்றி சார்!
ஊக்கம் தரும் உற்சாக வாழ்த்தைகள்!
தொடர்வோம், இறை நாட்டம்!
நன்றி சார்!
நல் வார்த்தைகளில் அழகான எளிமையான கவிதை ஆம் பாப்பாவிற்கு எனும் போது எளிமைதானே சிறந்தது! தொடர்ந்து எழுதுங்கள்
துளசிதரன்
கீதா
எளிமையான, அழகான கருத்தோவியம்!
நண்பர் இருவருக்கும் நன்றிகள்!
Post a Comment