எங்கள் தந்தை!
என்னையும் என் சகோதரிகளையும் அருகிலிருந்து வளர்த்தவர் எங்கள் அம்மா!
ஆனால், தூர தேசத்தில் இருந்துகொண்டு, எங்களுக்காக உழைத்து, கண்ணும் கருத்துமாய்
ஆர்வமூட்டி கடிதம் மூலம் எங்களை உற்சாகம் தந்து ஆளாக்கியவர்
எங்கள் தந்தை அமரர் *கே.அப்துல் ஹக்கீம்* அவர்கள்!
என்னுடைய மூன்று வயது கால கட்டத்தில் எனது புகைப்படத்தை எடுத்து அனுப்ப எங்கள் அன்னையிடம் கேட்டார்கள்.
ஸ்டுடியோவில் படம் எடுப்பதற்கு வாகாக நான் ஓர் இடத்திலும் உட்காரவோ நிற்கவோ இல்லை(யாம்)!
ஃபோட்டோகிராபர் தன்னிடமிருந்த பேனாவை சற்று தொலைவில் வைத்துவிட்டு, அதை நான் எடுத்துவரும்போது, ஃபோட்டோ எடுத்தார்.
அந்த படத்தைப் பார்த்துவிட்டு, "எதிர்காலத்தில் எழுத்தாளனாய் வருவான்" என்றார்கள் எங்கள் தந்தை அவர்கள்.
அவ்வாறு அவர்களின் வாக்குப்படியே
பத்திரிகைகளிலும் வலைப்பூவிலும் நான் எழுதிக்கொண்டு இருக்கிறேன்!
அப்படி சொன்ன எங்கள் தந்தையை நினைத்து,
விய(ந்து பார்)க்கிறேன்!
.
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
.
14 comments:
வணக்கம்
இவர்கள் நேரில் பேசும் தெய்வங்கள்
@கவிஞர்.த.ரூபன்,
வாருங்கள் கவிஞரே!
நன்றி!
இஸ்லாம் மார்க்கம் கூறும் கருத்து 'இறைவன் ஒருவனே; இணை எவரும் இலர்'!!!
இறைவனுக்கு அடுத்ததாக, பெற்றோரைக் குறிப்பிடலாம்; உயர் மதிப்புக்கு உரியவர்கள்!!!
சிலரது வாக்கு பலித்து விடும் நண்பரே...
வாங்க KILLERGEE...
தங்கள் கருத்தில் உண்மை உண்டு!
கருத்திட்டமைக்கு நன்றி!
அருமை...
வாழ்த்துகள்...
உங்கள் தந்தையின் வாக்கு பலித்திருக்கிறது.
தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி.
தங்கள் தந்தையைப் பற்றி எழுதுவதே மகன்களுக்கு கிடைத்த பாகயம். இறைவனைப் பற்றி எழுத பக்தர்களுக்குக் கிடைத்த பாக்யம் போல் இது.
ஆஹா உங்கள் தந்தையின் வார்த்தை பலித்திருக்கிறது. அவர்து வாழ்த்தும் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது.
வாழ்த்துகள்.
துளசிதரன்
கீதா
@திண்டுக்கல் தனபாலன்,
வாழ்த்தியமைக்கு நன்றி சார்!
@வெங்கட் நாகராஜ்,
தங்கள் கருத்து சரியே!
தொடர்வோம்!
நன்றி சார்!
@ஜீவி,
சார், நானும் ஒரு பாக்கியவான்! அனைத்துப் புகழும் ஆண்டவனுக்கே!
கருத்திற்கு நன்றி சார்!
@துளசிதரன்,
@கீதா...
ஆம்!
எங்கள் தந்தையின் வார்த்தையும் பலித்தது!
வாழ்த்தும் கிடைத்தது!
இருவருக்கும் நன்றிகள்
'தந்தை சொல் மிக்க மந்திரமில்லை' என்ற வாக்கு பலித்துவிட்டது.பாராட்டுகளும் வாழ்த்துகளும்!
@வே.நடனசபாபதி,
சார்!
வருகைக்கும்
பாராட்டுக்கும்
வாழ்த்திற்கும்
நன்றி சார்!
Post a Comment