பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா மற்றும் நான்!

'உங்கள் ஜூனியர்' மாத இதழ் சார்பாக 'வாசகர் சந்திப்பு'.
எனக்கும் அழைப்பு வந்தது. 26.02.1989 அன்று திருச்சி
அஜந்தா ஹோட்டலில் நடந்த அந்தச் சந்திப்புக்கு
என் நண்பரோடு நான் சென்றிருந்தேன்.
என் அபிமான எழுத்தாளர்கள் பட்டுக்கோட்டை பிரபாகர்,
சுபா இவர்களோடு வாசகர் சந்திப்பும் கலந்துரையாடலும்
கேள்வி-பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றன.
பட்டுக்கோட்டை பிரபாகரிட்ம் நான் ஒரு கேள்வி
கேட்டேன். "நரேன் - வைஜயந்தி துப்பறியும் ஒரு
நாவலை நீங்களும், பரத் - சுசீலா துப்பறியும் ஒரு
நாவலை சுபாவும் எழுதினால் வித்தியாசமாயிருக்குமே?"
அதற்கு, "பரத் - சுசீலாவை உருவாக்கியவன் நான்.
நான் அவர்களின் பெற்றோர்; அவர்கள் என் குழந்தைகள்.
சுரேஷும் பாலகிருஷ்ணனும் நரேன் - வைஜயந்தியின்
தாய், தகப்பன். சொந்த தாய்+தகப்பன் இருக்கும்போது
குழந்தைகளை யாராவது மாற்றிக்கொள்வார்களா?
தத்து கொடுப்பார்களா?" என்று பதில் கேள்வி கேட்டார்.
இந்தப் பதிலை அனைவரும் வெகுவாக இரசித்தோம்.
குறிப்பு: 'கல்கி' 17.07.2011 இதழின் 'ஆஹா ஆல்பம்'
பகுதியில் இது வெளிவந்தது.
நன்றி: கல்கி வார இதழ்.
.