அன்பிற்கினிய இரத்தத்தின் இரத்தமான உடன்பிறப்புக்களே!
உங்களின் ஆசியோடும் ஆதரவோடும் உங்கள் 'நிஜாம் பக்கம்'
இனிய மூன்றாம் ஆண்டில் நுழைந்துள்ளது. அனைத்து அன்பு
உள்ளங்களுக்கும் நன்றி!
வாங்க இனி சிரிக்கலாம்...
நகைச்சுவை; இரசித்தவை
பிச்சைக்காரர்: "அம்மா தாயே... பிச்சை போடுங்க,
நான் வாய் பேச முடியாத ஊமை."
வீட்டுக்காரம்மா: " பக்கத்து வீட்டுல போய் கேளுப்பா...
எனக்கு காது கேட்காது."
=================================================
"கோர்ட்டுல என்ன டமால்னு சத்தம்?"
"சாட்சி பல்ட்டி அடிச்சிட்டாராம்"
=================================================
ஒருத்தி: "இந்த ஊர்ல போலி டாக்டர் இருக்காரா?"
மற்றவள்: "ஏன் கேட்குறே?"
முதலாமவள்: "என் மாமியாருக்கு உடம்பு சரியில்லை,
அவங்களுக்கு காட்டத்தான்"
================================================
"யாரோ எழுதிக் கொடுத்ததை தலைவர் மேடையில்
படிக்கிறார்னு எதிர்கட்சி குற்றம் சொல்லிச்சே,
தலைவர் என்ன பதில் சொன்னார்?"
"எனக்கு எழுதப் படிக்கத் தெரியாதுன்னு சமாளிச்சிட்டாரு"
================================================
"அந்த பெயிண்டர் ரொம்ப தொழில் பக்தி கொண்டவர்!"
"எப்படி?"
"அவர் பிள்ளைகளுக்கு வெள்ளையப்பன், கருப்புசாமி,
நீலவேணி, பச்சையம்மாள்னு பேர் வச்சிருக்காரு"
================================================
"அவர் 'நான் சத்தியத்துக்கு கட்டுப்பட்டவர்'னு சொல்றாரே?"
"அவர் மனைவி பெயர் சத்தியம்"
================================================
"போன தீபாவளிக்கு வாங்கின ஸ்வீட் நல்லா இருந்தது அதே
மாதிரியே கொடுங்க"
"அதே ஸ்வீட்டே இருக்கு, இந்தாங்க"
==================================================
"ராத்திரியில் சுடுகாட்டுக்குப் போகனும்கறையே , ஏன்டா?"
"டாக்டர்தான் ஆவி பிடிக்க சொன்னார்"
==================================================
"என் மனைவி மாசத்தில பாதி நாளு ஹீரோயின்; பாதி நாளு
வில்லி"
"எப்படி?"
"பணம் இருக்கும் நாள்வரை ஹீரோயின். பணப் பற்றாக்குறை
சமயத்தில வில்லி"
===================================================
"தலைவருக்கு டாக்டர் பட்டம் கிடைச்ச பிறகு, தொண்டர்கள்
ஏன் சந்திக்க பயப்படுறாங்க?"
"தலைவர் கன்சல்டிங் ஃபீஸ் கேட்குறாராம்"
===================================================
.