...பல்சுவை பக்கம்!
.
Monday, August 31, 2009
நல்வரவு!
அன்பானவர்களே!
அனைவர்கள்மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!
எனது விருப்பம் இன்று நிறைவேறுகிறது. எனது இந்த புதிய வலைப்பூவிற்கு உங்கள் அனைவரையும் மிக மகிழ்வோடு வரவேற்கிறேன்.'நிஜாம் பக்கம்' என்கிற எனது புதிய வலைப்பூவில் பல்சுவை அம்சங்களும் உள்ளடங்கியதாய், அதாவது நான் கேட்டதையும் படித்ததையும் கண்டதையும் - அதாவது கண்ட எதையும் சுவாரஸ்யமாய் உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று விரும்புகிறேன். ஏற்கெனவே நான் எழுதியவைகளுடன் பல புதிய அம்சங்களும் இதில் இடம்பெறும், நீங்கள் இரசிக்கும் வண்ணம்.
முதன்முதலாய் இணையதளத்தில் எனக்கு வாய்ப்புகள் அளித்து உற்சாகமூட்டிய சகோதரர் திரு.தமிழ்நேசன் அவர்களுக்கும் வலைப்பூவினைத் துவங்க என்னை ஊக்கமூட்டி, வழிமுறைகளும் காட்டித் தந்த எழுத்தாளர் திருமதி.சுமஜ்லா அவர்களுக்கும் முதற்கண் எனது நன்றிகள் உரித்தாகுக!
அன்பர்கள் படித்து, இதன் நிறை, குறை, கருத்துக்கள் ஆகியனவற்றை 'கமெண்ட்ஸ்' ஆகத் தந்து ஆதரவுக் கரம் கொடுங்கள் என்று நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.
உங்கள் அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
முதல் பின்னூட்டம்.....
சந்தோஷம் நண்பரே!
எதற்கா?
இது காறும் என் பிழையை சுட்டி காட்டி வந்தீர்கள், இனி, எனக்கும் அந்த வாய்ப்பு கிடைத்துள்ளதே! :)
மெயிலில், வலைப்பூ பெயரை தர வில்லை....
வலைப்பூ அல்லது வலைதளம் வைத்திருப்பவரை இடுகையில் தரும் போது, அவர் பெயரை சுட்டினால், அத்தளம் திறக்கும் படி செய்வது மரபு...அதன் மூலம் பிறர், அவர்கள் யார் என்று தெரிந்து கொள்ளலாம்!
அதை செய்ய, அவர் பெயரை க்ளிக் & டிராக் செய்து ஹை லைட் செய்து, உலக உருண்டை போன்ற ஐகானை (போஸ்ட் விண்டோவில் இருப்பது) க்ளிக் செய்து, திறக்கும் பாப் அப் விண்டோவின், அவர்களுடைய வலை தள முகவரி தர வேண்டும்.
புதிய தளம் வளர்ந்து, ஒரு நல்ல எழுத்தாளராய் முத்திரை பதிக்க என் வாழ்த்துக்கள்.
ஆமாம் முதல் பின்னூட்டம்... மகிழ்ச்சி!
ஆஹா... மாட்டிக் கொண்டேனா? பிழை வந்தால், விடாதீர்கள்.
குறை, நிறை எதுவானாலும் சுட்டிக் காட்டுங்கள். வரவேற்கிறேன்.
மேலும் தேவையான டிப்ஸ்-ஸும் தந்ததற்கும் வாழ்த்து
தந்ததற்கும் மிக்க நன்றி!
நிஜாம் பாய் ! ரொம்ப சந்தோசம் உங்களை இங்கு பார்ப்பதற்கு . நான் ஒரு Blog ரசிகன். உங்கள் படைப்புகள் அத்தனையும் நிச்சயம் படிப்பேன். - முஜிப் , துபாய் .
நண்பர் முஜிப்!
என் வலைப்பூவிற்குத்
தங்களின் வருகையும் தங்களின்
பின்னூட்டமும் கண்டு எனக்கு
மிகுந்த மகிழ்ச்சி!
எனது தொடர்ந்த மகிழ்ச்சிக்குத்
தங்களின் தொடர்ந்த பின்னூட்டமும்
தேவை.
அன்பின் அ.முஹம்மது நிஜாமுத்தீன்
2009 ஆகஸ்ட் இறுதி நாளன்று முதல் பதிவு - 4 மாதங்களீல் 51 பதிவுகள் - 2010 ல் ஆண்டீற்கு 26 பதிவுகல் தான் - பிறகு 2011 2012ல் ஆண்டிற்கு 15 பதிவுகள் தான் - ஏன் எழுதுவது குறைந்து விட்டது ??? தொடர்ந்து எழுதுக - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Post a Comment