...பல்சுவை பக்கம்!

.

Tuesday, April 13, 2010

ரயில் வரும் நேரமாச்சு!


ரயில் வரும் நேரமாச்சு!


பயணம் செய்வதற்கு எனக்கு மிகவும் படித்த வாகனம்
எதுவென்றால், அது ரயில்தான். இதை புகைவண்டி,
தொடர்வண்டி என்று தமிழில் குறிப்பிடுகிறார்கள்.

நான் 1990-களின் ஆரம்பத்தில் சிதம்பரத்தில் உள்ள
தி புரபஷனல் கூரியர் நிறுவனத்தில் சுமார் ஆறு மாத
காலம் பணியாற்றினேன். அது கூரியர் சர்வீஸ்களின்
ஆரம்பக் காலம்.

அப்போதெல்லாம் வெளிநாட்டிலிருந்தும்,
வெளிமாநிலத்திலிருந்தும், தமிழ்நாட்டின்
எந்த ஊரிலிருந்தும் வரும் கடிதம் மற்றும்
டாக்குமெண்ட்கள் போன்றவை சென்னைக்குச்
சென்று, பிறகுதான் மற்ற ஊர்களுக்கு செல்லும்.


அதாவது, மயிலாடுதுறையிலிருந்து ஒரு சகோதரர்
இரவு சுமார் 8 மணியளவில் ரயிலில் புறப்பட்டு
திருச்சிக்குச் நள்ளிரவு 12 மணியளவில் சென்றடைவார்.

சிலமணி நேரம் காத்திருந்ததும் அதிகாலையில்
சென்னையிலிருந்து வரும் ரயிலில் வந்தவரிடமிருந்து
கூரியர்களைப் பெற்றுக் கொண்டு, அதிகாலை 6 மணி
அளவில் புறப்படும் சோழன் எக்ஸ்பிரஸில் புறப்பட்டு
சுமார் 10 மணி அல்லது 10.15 மணிக்கு மயிலாடுதுறை
ஜங்ஷனில் இறங்கும்போது சிதம்பரத்திற்கு வந்துள்ள
கடித பார்சலை என்னிடம் கொடுத்து, அவரிடம் உள்ள
நோட்டில் கையெழுத்து வாங்கிக் கொள்ளும் அவர்
மயிலாடுதுறை கூரியர் அலுவலகத்திற்குச் சென்று
விடுவார்.


இடையிலிருக்கும் தஞ்சாவூர், கும்பகோணம் போன்ற
மற்ற ஊர்களுக்குரிய பார்சல்களை, அந்தந்த ஊர்
ஊழியர்களே திருச்சிக்குச் சென்று வாங்கி வந்து
விடுவார்கள்.

இப்படியாக மயிலாடுதுறை ஜங்ஷனில் கூரியர்
பார்சலைப் பெற்றுக் கொண்ட நான் அதே சோழன்
எக்ஸ்பிரஸ் ரயிலில் காலை சுமார் 11.15 அளவில்
சிதம்பரம் சென்று, அலுவலகத்தில் பதிவு (?) போட்டு,
உரியவர்களுக்கு அந்த கூரியர்களைக் கொண்டு
சேர்ப்பேன்.

மீண்டும் அலுவலகத்திலிருந்து பார்சலுடன்
புறப்பட்டு, சுமார் 7 மணிக்கு சிதம்பரத்திலிருந்து
நெல்லை எக்ஸ்பிரஸ்ஸில் புறப்பட்டு 8 மணிக்கு
மயிலாடுதுறை ஜங்ஷனில் இறங்கும்போது,
அங்கிருந்து புறப்படும் மயிலாடுதுறை அலுவலக
சகோதரரிடம் என்னிடமிருக்கும் பார்சலைக் கொடுத்து
என்னிடமிருக்கும் நோட்டில் கையெழுத்துப்
பெற்றுக் கொள்வேன். அந்தப் பார்சல் இவ்வாறாக,
திருச்சி வழியாக சென்னை சென்றடையும்.


சரக்கு வேன் போன்ற வாகன வசதிகள் அதிகம்
பயன்படுத்தப்பட ஆரம்பிக்காத காலக் கட்டம் அது.
அப்போதெல்லாம், பெரிய பார்சல்கள் கூரியரில்
எப்போதாவதுதான் அனுப்பப்பட்ட காலம்.

இதன் காரணமாக ஞாயிற்றுக் கிழமை தவிர்த்து
மற்ற ஆறு தினங்கள் தினசரி நான் காலையில்
ஒரு மணி நேரமும் மாலையில் ஒரு மணி நேரமும்
ரயில் பயணங்களில்தான் இருப்பேன்.

அந்த நேரங்களில் வார இதழ்கள் வாசிப்பது,
வாசகர் கடிதம் எழுதுவது, பேனா நண்பர்களுக்குக்
கடிதம் எழுதுவது, ரயிலின் ஜன்னல் ஊடே பசுமையான
வயல், மரம், செடிகள் கண்டு களிப்புறுவது,
சக பயணிகளோடு உரையாடுவது, பயணிகளின்
சிறு குழந்தைகளோடு உரையாடி மகிழ்வது,
ரயில் வியாபாரிகளிடம் மாங்காய்,
வெள்ளரிப்பிஞ்சு, தர்பூசணி வாங்கிச்
சாப்பிடுவது, சூடான சுண்டல் என்று கூவி
விற்பதை வாங்கும்போது கையைச் சுடுவதாய்
ஆஆ என்று சொல்லி வாங்கி ஜில்லென்று
வாயில் போட்டு சாப்பிடுவது,
அந்த வியாபாரிகள் ஒரு பெட்டியிலிருந்து
மற்றொரு பெட்டிக்கு கையில் கூடையோடு
தாவி செல்லும் ஆபத்தான செயலை
அனாயாசமாகச் செய்வதை ஆச்சரியமாகப்
பார்ப்பது, இருபுற கம்பங்களில்
எண்களை பார்த்துக் கொண்டே வருவது,
முதல் நாள் ஒரு பெரிய ஆல மரத்தைக்
குறிப்பு வைத்துக் கொண்டு மறுநாள் அந்த இடம்
வரும்போது சரியாகக் கண்டு கொள்வது,
புத்தகத்தில் ஜோக் படித்துவிட்டு எதிராளிகள்
பயந்து விடக்கூடாதென்று படார் என்று சிரிக்காமல்
மொக்கையாய் சிரிப்பது என்றெல்லாம்
அந்த ரயில் பயணங்கள் தந்த மகிழ்வினை
என்றென்றும் மறக்க முடியாது.

மற்றும் அந்தப் பணியில்தான் கூரியரின் உரிமையாளர்
அன்பு அண்ணன் மௌலவி கணியூர் இஸ்மாயில் நாஜி
நீடூரி அவர்களிடமிருந்து பல அறிவுச் செறிவான பொது
அறிவு விஷயங்களைக் கற்றுக் கொண்டேன் என்பதனை
இங்கு குறிப்பிட விழைகிறேன்.

சமீப காலமாக (அதாவது கடந்த நான்காண்டுகளுக்கு
மேலாக) மயிலாடுதுறை மற்றும் விழுப்புரம் ஆகிய
ஊர்களுக்கிடையே மீட்டர் கேஜ் இருப்புப் பாதையை
அகற்றிவிட்டு, அகல ரயில் பாதை அமைக்கும் பணி
நடைபெற்று வந்தது. சுமார் ஆறு மாத காலத்தில்
அமைக்கப்பட்டுள்ள இருப்புப் பாதையில் பலமுறைகள்
சோதனை ஓட்டங்கள் பல கட்டங்களில் செய்யப்பட்டன.

இருப்பினும் டிக்கெட் கவுண்ட்டர்கள், பிளாட்ஃபார்ம்,
பயணியர் தங்குமிடம், நீர் வசதி, கழிவறைகள் போன்ற
அனைத்துப் பணிகளும் நிறைவடைந்தபின்னும்,
"ஓடும்... ஓடும்..." என்று பலமுறை சொல்லியும்
சொல்லப்பட்ட மாதங்கள்தான் ஓடினவேயன்றி
ரயில் போக்குவரத்து ஆரம்பித்தபாடில்லை.
சிறு வியாபாரிகள், நடுத்தர வர்க்கத்தினர், தினசரி
வேலைக்குச் செல்லும் பணியாளர்கள் மற்றும்
நோயாளிகளுக்கு ஏற்றது ரயில் பயணமே!

தற்போது 100 ரூபாயில் சென்றிடக்கூடிய
மயிலாடுதுறை - சென்னை பயணத்திற்கு
ஆம்னி சொகுசு ஏசி வராத பேருந்துகளில்
400 ரூபாய் கொடுத்துச் செல்ல வேண்டியுள்ளது.
அரசு பேருந்தில் செல்லலாமே... அரசு
பேருந்துகளின் தரம் சொல்லவோ, எழுதவோ,
கேட்கவோ, படிக்கவோ தேவையில்லை.

கடந்த மாதம் 25-ஆம் தேதி ஆய்வுப்பணி மேற்கொண்ட
தென்னக ரயில்வே பொது மேலாளர் தீபக் கிஷன்
அவர்கள் "வருகிற ஏப்ரல் 15 அன்று ரயில் சேவை
தொடங்கப்படும்" என்று பத்திரிகை, தொலைக்காட்சிகளிடம்
தெரிவித்துள்ளார். நம்பலாமா?

சோதனை ஓட்டம் சேவையாக எப்போ மாறும்?
வேதனை வாட்டம் மக்களிடம் எப்போ தீரும்?

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.





வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

39 comments:

மாயவரத்தான் said...

Numbureengalaa?!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//மாயவரத்தான்.... said...
Numbureengalaa?!//

கேள்வி கேட்ட மாயவரத்தான்!
நாம் சாதாரண பொதுமக்களில் ஒருவர்தானே?
நம்புவோம்!?

சைவகொத்துப்பரோட்டா said...

ம்ம்ம்.....ரயில் பயணம்
மிக சுகமானது, உங்கள்
பகுதியில் மீண்டும் விரைவில்
கிடைக்க வாழ்த்துக்கள்.

நாடோடி said...

அனுப‌வ‌ க‌ட்டுரை ந‌ல்லா இருக்கு சார்.... விரைவில் ர‌யில் ப‌ய‌ண‌ம் கிடைக்க‌ என‌து வாழ்த்துக்க‌ள்..

இராகவன் நைஜிரியா said...

ஏப்ரல் 15 என்று சொன்னார்களே எந்த வருஷம் என்று சொன்னார்களா?

இராகவன் நைஜிரியா said...

// தற்போது 100 ரூபாயில் சென்றிடக்கூடிய
மயிலாடுதுறை - சென்னை பயணத்திற்கு
ஆம்னி சொகுசு ஏசி வராத பேருந்துகளில்
400 ரூபாய் கொடுத்துச் செல்ல வேண்டியுள்ளது. //

திட்டம் தாமதம் ஆனதற்கு காரணம் இதுவும் ஒன்று.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஒரு வித்யாசமான ரயில் பயனம் இது!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//சைவகொத்துப்பரோட்டா said...
ம்ம்ம்.....ரயில் பயணம்
மிக சுகமானது, உங்கள்
பகுதியில் மீண்டும் விரைவில்
கிடைக்க வாழ்த்துக்கள்.//

தங்கள் பாராட்டு + வாழ்த்துக்களுக்காக
உங்களுக்கு நன்றி, சைவகொத்துபரோட்டா!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நாடோடி said...
அனுப‌வ‌ க‌ட்டுரை ந‌ல்லா இருக்கு சார்.... விரைவில் ர‌யில் ப‌ய‌ண‌ம் கிடைக்க‌ என‌து வாழ்த்துக்க‌ள்..

கட்டுரையைப் பாராட்டி வாழ்த்துச்
சொன்ன நாடோடி, நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//இராகவன் நைஜிரியா said...
ஏப்ரல் 15 என்று சொன்னார்களே எந்த வருஷம் என்று சொன்னார்களா?//

[இராகவன் நைஜிரியா said...
// தற்போது 100 ரூபாயில் சென்றிடக்கூடிய
மயிலாடுதுறை - சென்னை பயணத்திற்கு
ஆம்னி சொகுசு ஏசி வராத பேருந்துகளில்
400 ரூபாய் கொடுத்துச் செல்ல வேண்டியுள்ளது. //

திட்டம் தாமதம் ஆனதற்கு காரணம் இதுவும் ஒன்று.]

அட அமாம், எந்த வருஷம்னு சொல்லவேயில்லைங்க.
அதேதான், மிகச் சரியான காரணத்தை சரியாகச்
சொன்னீர்கள்.
கருத்துக்களுக்கு நன்றி சார்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...
ஒரு வித்யாசமான ரயில் பயனம் இது!//


ரயில் பயணத்தைப் பாராட்டியமைக்கு
நன்றி ஆரண்யநிவாஸ் ஆர்.ராமமூர்த்தி சார்!

'பரிவை' சே.குமார் said...

அனுப‌வ‌ க‌ட்டுரை ந‌ல்லா இருக்கு

சீமான்கனி said...

ஐ...நானும் உங்களை போல ஒரு ரயில் ரசிகன் தான்...என் அத்தா(அப்பா)வெளிநாட்டில் வேளையில் இருக்கும்போது விடுமுறைக்கு வந்தது என்னையும் அழைத்து போவதாய் சொல்லுவார் ''எப்படி போறது??'' என்று கேட்டு 'விமானம் முலம்'' என்றதும் ரயில் போகாதா என்று கேட்டதுண்டு ..
அவ்ளோ பிடிக்கும் ...

...உங்கள் வாட்டம் மாறி ஓட்டம் தொடர வாழ்த்துகள்..

அருமையா பகிர்ந்தமைக்கு நன்றி...

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//சே.குமார் said...
அனுப‌வ‌ க‌ட்டுரை ந‌ல்லா இருக்கு//

தொடர்ந்த தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

seemangani said...
ஐ...நானும் உங்களை போல ஒரு ரயில் ரசிகன் தான்...என் அத்தா(அப்பா)வெளிநாட்டில் வேளையில் இருக்கும்போது விடுமுறைக்கு வந்தது என்னையும் அழைத்து போவதாய் சொல்லுவார் ''எப்படி போறது??'' என்று கேட்டு 'விமானம் முலம்'' என்றதும் ரயில் போகாதா என்று கேட்டதுண்டு ..
அவ்ளோ பிடிக்கும் ...
...உங்கள் வாட்டம் மாறி ஓட்டம் தொடர வாழ்த்துகள்..
அருமையா பகிர்ந்தமைக்கு நன்றி...

தங்கள் அனுபவத்தையும் கூறி, பாராட்டியமைக்கு நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//www.bogy.in said...
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்//

வாழ்த்துக்களுக்கு நன்றி www.bogy.in!
தங்கள் குழுவினருக்கும் மற்றும் அனைவருக்கும்
எனது வாழ்த்துக்களையும் மகிழ்வோடு தெரிவித்து
கொள்கிறேன்.

ஸாதிகா said...

எங்கள் பகுதியிலும் அகல ரயில் பாதைப்பணிக்காக ஒரு வருடத்திற்கும் மேலாக அந்த தடத்தில் ரயில் போக்கு வரத்தே இல்லாமல் அவஸ்த்தைப்பட்டோம்.பொறுத்து இருந்து இப்பொழுது அகலரயில் பாதையுடன் ஏகபட்ட ரயில்களும் விட்டு இருப்பது பொழ்து மக்களுக்கு மகிழ்ச்சியும்,வசதியும் கிடைத்து இருக்கிறது.உங்கள் பகுதிக்கும் நீங்கள் விரும்பு வசதி கிடைக்கும் விரைவில்

வால்பையன் said...

பாலோயர் ஆயிட்டேன், இனி எந்த பதிவும் மிஸ்ஸாகாது!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//வால்பையன் said...
பாலோயர் ஆயிட்டேன், இனி எந்த பதிவும் மிஸ்ஸாகாது!//

வருக வால்பையன். நன்றி!

ஜெய்லானி said...

வர்ர்ர்ரூம்....ஆனா வராது... இப்படிதான் ஏமாத்திகிட்டே போகுது. நடுவில அவசர அவசரமா எத்தனை சோதனை ஓட்டம் ????

Jaleela Kamal said...

ரயில் பயணம் எனக்கும் ரொம்ப பிடிக்கும், ரொமப் நல்ல இருக்கும். ஆனால் இப்போதைக்கு வாய்ப்பில்லை.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//ஸாதிகா said...
எங்கள் பகுதியிலும் அகல ரயில் பாதைப்பணிக்காக ஒரு வருடத்திற்கும் மேலாக அந்த தடத்தில் ரயில் போக்கு வரத்தே இல்லாமல் அவஸ்த்தைப்பட்டோம்.பொறுத்து இருந்து இப்பொழுது அகலரயில் பாதையுடன் ஏகபட்ட ரயில்களும் விட்டு இருப்பது பொழ்து மக்களுக்கு மகிழ்ச்சியும்,வசதியும் கிடைத்து இருக்கிறது.உங்கள் பகுதிக்கும் நீங்கள் விரும்பு வசதி கிடைக்கும் விரைவில்//

தங்கள் பகுதியைப் போலவே எங்கள் பகுதிக்கும் விரைவில் ரயில் வசதி
வரும் என்று கூறிய தங்கள் வாக்கு பலிக்கட்டும் சகோதரி, நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//ஜெய்லானி said...
வர்ர்ர்ரூம்....ஆனா வராது... இப்படிதான் ஏமாத்திகிட்டே போகுது. நடுவில அவசர அவசரமா எத்தனை சோதனை ஓட்டம் ????//

நமது இருவரின் ஊர்களும் ஒரே தடத்தில்தானே உள்ளன.
விரைவில் வரும் ரயில் சேவை. நன்றி, ஜெய்லானி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//Jaleela said...
ரயில் பயணம் எனக்கும் ரொம்ப பிடிக்கும், ரொமப் நல்ல இருக்கும். ஆனால் இப்போதைக்கு வாய்ப்பில்லை.//

இப்போதைக்கு வாய்ப்பில்லை என்றால், தாய் நாட்டிற்குச்
செல்லும்போது அவசியம் பயணித்து வாருங்கள்.
கருத்திற்கு நன்றி சகோதரி!

r.v.saravanan said...

எனது ஊர் தஞ்சாவூர் என்பதால் நானும் ரயில் சேவை எப்போது தொடங்கும் என்று காத்திருக்கிறேன்
எனது வலை தளத்திற்கு வந்ததற்கு நன்றி

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//r.v.saravanan kudandhai said...
எனது ஊர் தஞ்சாவூர் என்பதால் நானும் ரயில் சேவை எப்போது தொடங்கும் என்று காத்திருக்கிறேன்
எனது வலை தளத்திற்கு வந்ததற்கு நன்றி//

கருத்திற்கு நன்றி r.v.saravanan kudandhai,
தொடர்ந்து இணைந்திருங்கள்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

மகிழ்ச்சியான செய்தி: ரயில் வந்துடுச்சி!

ஆமாம், நேற்று (23/04/20101) முதல்
விழுப்புரம் - மயிலாடுதுறை மார்க்கத்தில்,
பாசஞ்சர் ரயில்கள் சேவை ஆரம்பமாகிவிட்டது.

சென்னை - மயிலாடுதுறை மார்க்கத்தில்
மற்ற விரைவு ரயில்கள் சேவையும் விரைவில்
தொடங்கப்படுமாம். சதர்ன் ரயில்வேக்கு நன்றி!

r.v.saravanan said...

thanks to southern railway

அன்புடன் மலிக்கா said...

சோதனை ஓட்டம் சேவையாக எப்போ மாறும்?
வேதனை வாட்டம் மக்களிடம் எப்போ தீரும்.

நம்புவோமாக!

எங்க ஊரிலும் இதே கதிதான்..

mohamedali jinnah said...

எல்லாமே நல்லா இருக்கு. இதுவும் நல்ல கட்டுரை நம்ம ஊரு நலமா !

அன்புடன் மலிக்கா said...

enna allaikkaanoom

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அன்புடன் மலிக்கா said...
enna allaikkaanoom

வேலைப்பளு சிறிது அதிகம்; அதனால்
புதிய இடுகைகளிட சற்று சுணக்கம்.
இன்ஷா அல்லாஹ், விரைவில்
வருகிறேன், புதிய இடுகைகளோடு,
கவிஞர் மலிக்கா!

Anisha Yunus said...

அருமையா எழுதியிருக்கீங்க. நானும் வல்லத்திலும், இராமநாதபுரத்திலும் படிக்கும்போது கோவையிலிருந்து ரயிலில்தான் பயணம் செய்வேன். என் அப்பாவின் சாய்ஸ் அது. எனக்கு அப்போது பஸ் பயணம் மிக பிடித்திருந்தது. காரணம், கூட படித்தவர்களில் பெரும்பாலோர் பக்கத்து ஊர்க்காரர்கள். அவர்கள் இறங்கியபின் தனித்தே என் பயணம் தொடரும். பிறகு ரயில் பயணமும் மிக பிடித்ததாகிவிட்டது. ரயிலில் பயணம் செய்யும்போது நீங்கள் சொன்ன எல்லாமே பிடிக்கும். விழியில்லாதவர்களின் பாடல்களும். ஹ்ம்ம்..அமெரிக்காவின் ரயில் பயணங்களில் கிடைக்காது அந்த சுவை. !!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//nidurali said...
எல்லாமே நல்லா இருக்கு. இதுவும் நல்ல கட்டுரை நம்ம ஊரு நலமா !//

தங்களைப் போன்ற சான்றோர்களின் பாராட்டுக்கள், என் போன்ற இளைஞர்களுக்கு
மிகுந்த உற்சாகமளிக்கின்றன. மிக்க நன்றி!

நமதூர்காரர்களனைவரும் இறையருளால் நலம்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//அன்னு said...
அருமையா எழுதியிருக்கீங்க. நானும் வல்லத்திலும், இராமநாதபுரத்திலும் படிக்கும்போது கோவையிலிருந்து ரயிலில்தான் பயணம் செய்வேன். என் அப்பாவின் சாய்ஸ் அது. எனக்கு அப்போது பஸ் பயணம் மிக பிடித்திருந்தது. காரணம், கூட படித்தவர்களில் பெரும்பாலோர் பக்கத்து ஊர்க்காரர்கள். அவர்கள் இறங்கியபின் தனித்தே என் பயணம் தொடரும். பிறகு ரயில் பயணமும் மிக பிடித்ததாகிவிட்டது. ரயிலில் பயணம் செய்யும்போது நீங்கள் சொன்ன எல்லாமே பிடிக்கும். விழியில்லாதவர்களின் பாடல்களும். ஹ்ம்ம்..அமெரிக்காவின் ரயில் பயணங்களில் கிடைக்காது அந்த சுவை. !! //

தங்கள் கருத்தை மிகச் சுவையாய் அளித்தீர்கள்.
நன்றி அன்னு!

Karthik Somalinga said...

நல்ல Nostalgic பதிவு! :)

//சூடான சுண்டல் என்று கூவி
விற்பதை வாங்கும்போது கையைச் சுடுவதாய்
ஆஆ என்று சொல்லி வாங்கி ஜில்லென்று
வாயில் போட்டு சாப்பிடுவது//

Nice :)

கோமதி அரசு said...

மயிலாடுதுறை - சென்னை பயணத்திற்கு ரயில் வண்டி வந்தபின் மக்களின் வேதனை மாறி மகிழ்ச்சி வந்து இருக்கும்.
ரயில் அனுபவங்கள் அருமை.

இராஜராஜேஸ்வரி said...

ரயில் பயணம் ரசிக்கவைத்தது ..

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..

http://blogintamil.blogspot.in/2013/02/5.html

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...