
(வி)வேகம் தேவை!
=====================
எங்கள் உறவினர் பெண்மணி ஒருவருக்கு
காய்ச்சல். 104 டிகிரியிலிருந்து எந்த மருந்து சாப்பிட்டும்
காய்ச்சல் குறையவேயில்லை . பக்கத்து நகர
மருத்துவமனையில் காட்டி, மாவட்டத்
தலைநக(ர் கடலூ)ரில் உள்ள மருத்துவமனையில்
உள் நோயாளியாகத் தங்கி சிகிச்சையை ஒரு வாரம்
தொடர்ந்தும் காய்ச்சல் மட்டும் குறையவேயில்லை.
பற்பல சிகிச்சைகள், மருத்துவங்கள், செலவினங்களுக்குப்
பிறகும் முன்னேற்றமில்லாததால் பெண்மணியின்
சகோதரர் உறுதியாய் ஒரு முடிவெடுத்தார்.
அதன்படி சென்னை போரூரில் உள்ள நவீன
வசதிகளுடைய தனியார் மருத்துவமனையில்
சேர்த்து, அதிதீவிர கண்காணிப்புப் பிரிவு
மற்றும் தீவிர கண்காணிப்புப் பிரிவுகளில்
அனுமதித்து மருத்துவம் பார்க்கப்பட்டது.
அதனால் காய்ச்சல் படிப்படியாய் குறைந்தது.
தொடர்ந்து திட உணவுகள் கொடுக்கப்பட்டு,
நலம் பெற்று வீடு திரும்பினார் அவர்.
தற்போது மருந்துகள் உட்கொண்டு
வருகின்றார்.
போரூர் மருத்துவமனையில் கண்டறியப்பட்ட
நோய்க் காரணி என்ன? எலி கடித்து அலட்சியமாய்
விட்டதால், ரத்தத்தில் விஷம் கலந்து,
நுரையீரல் வரை சென்று விட்டது என்பதே
காரணம்.
ஆகவே, இலட்சக் கணக்கில் பணம் செலவு
செய்வதைத் தவிர்க்கவும் நோய் தீவிரமாகி
உடல்நலக் குறைவு ஏற்பட்டு வேதனையுறுவதைத்
தடுக்கவும், எலி கடித்ததாய் சந்தேகம்
வந்தால் தாமதிக்காமல் விரைந்து சென்று,
நோய் எதிர்ப்பு மருந்தினை எடுத்துக்
கொள்ளுங்கள்.
அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
.