...பல்சுவை பக்கம்!

.

Friday, June 8, 2012

தினத்தந்திக்கு ஒரு கடிதம்! #102

தினத்தந்திக்கு ஒரு கடிதம்!

வழமை போலவே இந்த ஆண்டும் எஸ்.எஸ்.எல்.சி.
பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களில்
முதல் இடம், இரண்டாம் இடம் பெற்றவர்களுக்கும்
தமிழ் பாடத்தில் முதலிடம் பெற்றவர்களுக்கும்
தினத்தந்தி சார்பாக பரிசுகள் கொடுத்துள்ளீர்கள்.
பாராட்டக்கூடிய செய்தி.

இதன்படி முதலிடம்:
தஞ்சாவூர் ஸ்ரீநாத். (497 மதிப்பெண்கள்)

இரண்டாமிடம் பெற்றுள்ளவர்கள் 6 மாணவர்கள்
(496 மதிப்பெண்கள்):
1.நாகர்கோவில் எஸ்.ஜென்கின்ஸ் காட்பிரே,
2.பாளையங்கோட்டை இ.எம்.நந்தினி,
3.திருநெல்வேலி கே.என்.மகாலட்சுமி,
4.திண்டல் சுவாதி சென்னியப்பன்,
5.கரூர் டி.கவின்,
6.புழுதிவாக்கம் என்.அகிலா.

இதில் விநோதமான ஒரு விதிமுறை கடைப்பிடிக்கப்
படுகிறது. முதல் பரிசு (ரூ. 10,000) பெற்றவர்
மாணவனாக இருப்பின் இரண்டாம் பரிசு
(
ரூ. 5,000) மாணவிகளுக்கு வழங்கப்படுகின்றது.

அதனால், மாணவன்கள் ஜென்கின்ஸ் காட்பிரே
மற்றும் கவின் இருவர் தவிர்த்து, மாணவிகளான
மற்ற நால்வருக்கு மட்டும் பரிசு வழங்கப்படும்
என்று அறிவித்துள்ளீர்கள்.

ஒரே அளவு மதிப்பெண்களும் ஒரே ரேங்க்கும்
பெற்றவர்களில் 4 பேர்களுக்கு பரிசு உண்டு;
2 பேர்களுக்கு பரிசு கிடையாது என்பது
என்ன மாதிரியான சட்ட திட்ட விதிமுறை
என்பதுதான் எனக்குப் புரியவில்லை!
இதில் மாண'வி' என்பதனால் பரிசு என்றும்
மாண'வன்' என்பதனால் பரிசு கிடையாது
என்பதும் என்ன அளவுகோல்? இதன்
காரணமாக அந்த இரு மாணவர்களும்
'மன சலிப்பி'ற்கு உள்ளாவார்கள் என்பது
நிச்சயம்.

ஓர் உதாரணத்திற்கு இவ்வாறு எடுத்துக் கொள்வோம்.
முதல் ரேங்க் 497 ஒரு மாணவன் எடுக்கின்றான்.
இரண்டாம் ரேங்க் 496 வேறொரு மாணவன்
எடுக்கின்றான். மூன்றாம் ரேங்க் 495 ஒரு
மாணவி எடுக்கின்றாள். இப்போது முதல்
ரேங்க் எடுத்த மாணவனுக்கும் மூன்றாம்
ரேங்க் எடுத்த மாணவிக்கும் பரிசு கொடுத்துவிட்டு
இரண்டாம் ரேங்க் எடுத்தவனுக்கு பரிசில்லை
என்பது வேடிக்கையாக உள்ளது. இது
'ஒரு போட்டியில் கலந்து இரண்டாமிடம் பெற்ற
ஒருவருக்கு பரிசு கிடையாது; முதல் இடம்,
மூன்றாம் இடம் பெற்றவர்களுக்குத்தான் பரிசு'
என்பதைப் போல் உள்ளது.

எனவே, இதில் இரண்டாம் இடம் பெற்ற இரு
மாணவன்களுக்கும் பரிசுத் தொகை அளித்திட
ஆவன செய்து, விதிமுறைத் திருத்தம்
கொண்டு வருவீர்கள் என்று நம்புகிறேன்.

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
.படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

32 comments:

raja said...

your point is correct

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

raja ...

ஒப்புதலுக்கு நன்றி!!!

கேரளாக்காரன் said...

Right

rajamelaiyur said...

மிகவும் சரியாக சொன்னிர்கள் .. தினத்தந்தி விஷிக்குமா ?

rajamelaiyur said...

இன்று

பாட்ஷா ரீ-மேக்கில் விஜய் மற்றும் அஜித்.

Seeni said...

mmm..
nalla yoasanai!


nadakkumaa...?

r.v.saravanan said...

நல்ல யோசனை தான் நிசாமுதீன் சார்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

மௌனகுரு...
Right-ஆ...?
Thanks!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ராஜபாட்டை ராஜா...
கவனிக்கலாம்.
நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

seeni...
நடக்கலாம்.
நன்றி.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

r.v.saravanan...
கருத்துக்கு நன்றி!

Anonymous said...

உண்மைதான்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

wesmob ...

கருத்திற்கு நன்றி!

கல்விக்கோயில் said...

நல்ல கருத்து. உரியவர்கள் சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

கவி செங்குட்டுவன்...

கருத்திற்கு நன்றி ஐயா...
தொடர்ந்து வாருங்கள்.

enrenrum16 said...

இது என்ன புதுமையான விதிமுறையாக உள்ளது? மாணவிகளுக்கு நன்கு படிக்க வேண்டும் என்ற உத்வேகத்தைக் கொடுக்கும் அதே நேரம் மாணவன்களுக்கு தேவையில்லாத தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் இந்நிலையை மாற்றினால் நலம். உங்களின் இந்த நல்ல யோசனையை தினத்தந்திக்கு வாசகர் கடிதமாக எழுதி அனுபினால் விரைவில் பலன் இருக்கும்! நன்றி.

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

சரியான கருத்து

Erode M.STALIN said...

கண்டிப்பாக ஏற்றுகொள்ள முடியாத .... மாணவர்களுக்கு மனவுளைச்சலை ஏற்ற்படுத்த கூடிய ஒன்று

ஹுஸைனம்மா said...

இது என்ன தலையச் சுத்தி மூக்கத் தொடுற மாதிரி பைத்தியக்காரத்தனம்??

Unknown said...

நியாயமான கேள்வி மட்டுமல்ல, உடன் சரி செய்யவேண்டிய ஒன்றாகும் தந்தி நிர்வாகம் கவனிக்குமா?

சா இராமாநுசம்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

enrenrum16...

//உங்களின் இந்த நல்ல யோசனையை தினத்தந்திக்கு வாசகர் கடிதமாக எழுதி அனுபினால் விரைவில் பலன் இருக்கும்! நன்றி. //

தங்கள் கருத்திற்கு நன்றி அன்பரே!

இந்தக் கடிதம் 'தினத்தந்தி'க்கும் அனுப்பப் பட்டுள்ளது.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

Guru pala mathesu ...

தங்கள் கருத்திற்கு நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

Erode M.STALIN ...

தங்கள் கருத்திற்கு நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ஹுஸைனம்மா said...

// இது என்ன தலையச் சுத்தி மூக்கத் தொடுற மாதிரி பைத்தியக்காரத்தனம்??//

இதை தினத்தந்தி சரி செய்யும் என்று நம்புகிறேன்.
தங்கள் கருத்திற்கு நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

புலவர் சா இராமாநுசம் said...

// நியாயமான கேள்வி மட்டுமல்ல, உடன் சரி செய்யவேண்டிய ஒன்றாகும் தந்தி நிர்வாகம் கவனிக்குமா?

சா இராமாநுசம்//

இதை தினத்தந்தி கவனிக்கும் என நம்புகிறேன்.
தங்கள் கருத்திற்கு நன்றி ஐயா!

keezhai.a.kathirvel said...

ivvalavu deep aaga naan intha vizhayathai kvanikkavullai nantri

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//keezhai.a.kathirvel said...

ivvalavu deep aaga naan intha vizhayathai kvanikkavullai nantri //

பிரபல ஜோக் எழுத்தாளர் கீழை அ. கதிர்வேல் அண்ணன் முதல் வருகை. நல்வரவு.
கருத்திற்கு மிக்க நன்றி. தொடர்ந்து வருகை புரிந்து, தங்கள் கருத்துகள்,
ஆலோசனைகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

ரஹீம் கஸ்ஸாலி said...

வாழ்த்துக்கள் பாய்.....இந்த வாரம் விகடன் வலையோசையில் இடம் பிடித்தமைக்கு

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ரஹீம் கஸாலி...
மகிழ்ச்சியும் நன்றியும்
விரைவான தகவல் தந்ததற்கு.

ஸ்ரீராம். said...

இது என்ன புது மாதிரி இருக்கு? ஆனாலும் என்ன செய்ய முடியும்? அவங்க பேப்பர்.....அவங்க காசு... அவங்க இஷ்டம்!

தினத்தந்தியிலிருந்து பதில் ஏதும் கிடைத்ததோ....?

kalaignarpress said...

மிக்க மகிழ்ச்சி வாழ்த்துகள்

Anonymous said...

"மாணவன்களுக்கு".....மாணவர்களுக்கும்



By.....Maakkaan

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...