...பல்சுவை பக்கம்!

.

Friday, August 31, 2012

எங்க ஊரு தேவதை! (4-ஆம் ஆண்டு துவக்கம்)


எங்க ஊரு தேவதை! (4-ஆம் ஆண்டு துவக்கம்)

இது நிஜாம் பக்கம் 4-ஆம் ஆண்டின் துவக்கத்தில் முதல் பதிவு
என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

"எங்க ஊரு தேவதை - கதை!"

எங்க ஊருல ஒரு தேவதை இருந்துச்சு. (பேரு தேவையில்லை.)
அது கொஞ்சம் வித்தையாசமான தேவதை. அது எங்க
ஊருடைய எல்லையில ஒரு தென்னை மரத்தில
இருந்துச்சு. (ஆமாங்க... தென்னை மரம்தான்...)

அது அந்த வழியாகப் போகிறவங்க, வருகிறவங்ககிட்ட
ஏதாவது வம்பு பண்ணும். ஆனாலும் நல்ல தேவதை.
ஒரு நாள் அந்த வழியாக ஒரு வர்ணம் தீட்டுகிறவர்
போனார்.

அப்ப அந்த தேவதை அவரைக் கூப்பிட்டது. "எங்கே
போறீங்க?"ன்னு கேட்டுச்சு.

"கண்ணம்மா வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கப்
போறேன்"னாரு அந்த பெயிண்டரு.

"இந்தப் பையில 100 தங்கக் காசு இருக்கு. நீ வெச்சிக்க"
அப்படின்னு சொல்லி ஒரு பைய பெயிண்டருக்கிட்ட
கொடுத்திச்சி அந்த தேவதை.

ஜாலியா வாங்கிகிட்டாரு அந்த பெயிண்டரு.
அப்ப அந்த தேவதை, அந்த பெயிண்டருக்கிட்ட
"அந்தப் பையிலருந்து எனக்கும் பங்கு
கொடு"ன்னுச்சு.

அந்தப் பெயிண்டருக்கு கொடுக்க மனசே வரலை.
இருந்தாலும் கேட்டுடுச்சேன்னு 3 தங்கக் காசை மட்டும்
எடுத்து தரையில் வீசிட்டுப் போனாரு அவரு.

ஊருக்குள்ளே போனதும் கண்ணம்மா வீட்டுல
பெயிண்ட் அடிக்க ஆரம்பிக்குமுன்னே அந்தப்
பையை வீட்டு உச்சியில கண் பார்வை படுறாப்பல
மாட்டி வச்சிட்டு வேலை செஞ்சாரு பெயிண்டரு.

பெயிண்டரு அந்தப் பையைப் பார்த்துக்கிட்டே வேலை
செய்யுறாரேன்னு டவுட்டு வந்திடுச்சி அந்த
வீட்டுக்காரம்மா கண்ணம்மாவுக்கு.
பெயிண்டருக்கிட்ட கேட்டேபுட்டாங்க.

"அதுல புளியம் விதை வாங்கி வச்சிருக்கேன்"னு
பொய் சொல்லிட்டாரு, பெயிண்டரு.

அப்புறம் அவரு சிறு நீர் கழிக்கப் போகும்போது
கண்ணம்மா அந்தப் பையைத் திறந்து பார்த்தாங்க.
உள்ளே அம்புட்டும் தங்கக் காசு!

உடனே அந்தப் பையிலருந்த தங்கக் காசையெல்லாம்
எடுத்து வச்சிக்கிட்டு, அதுல, புளியம் விதையைக்
கொட்டி வெச்சிட்டாங்க.

வேலையை முடிச்சிட்டு, பையை எடுத்துப் பார்க்கிறாரு
பெயிண்டரு. உள்ளே புளியம் விதைதான் இருக்கு.
வீட்டுக்காரம்மாகிட்ட கேட்டா "நீ புளியம் விதைன்னுதானே
சொன்னே?" அப்படின்னு சண்டைக்கு வருது அந்தம்மா.

பாவம், பெயிண்டரு திரும்ப அந்த தேவதை இருக்கிற
மரத்தடிக்கு வந்திட்டாரு. தேவதையைக் கூப்பிட்டு
புகார் கொடுத்தாரு, வீட்டுக்கார கண்ணம்மா பேருல.

அதுக்கு அந்த தேவதை, "அந்த தங்கக்காசுலாம்
கண்ணம்மாக்குத்தான் நான் வெச்சிருந்தேன்.
நீ வரவும் உன்மூலமா அவங்ககிட்ட
சேர்ப்பிச்சிட்டேன். நீ கவலைப் படாதே"ன்னுச்சாம்.

"அப்படின்னா எனக்கு எதாவது தங்கக்காசு
அன்பளிப்பு கொடு"ன்னு அழுதுகிட்டே கேட்டாரு
பெயிண்டரு.

"அதோ, நீ காலையில தூக்கி வீசிட்டுப் போனியே
அதே 3 தங்கக் காசு அங்கேயேதான் கிடக்கு.
அதை எடுத்துட்டுப் போ"ன்னு சொல்லிட்டு
தன் தென்னை மர வீட்டுக்குபோயிடுச்சி அந்த
தேவதை.

"அடடா, முதல்லியே 20, 30 காசையாவது
தேவைதைகிட்ட போடாம போய்ட்டேனே!"
அப்படின்னு வருத்தப் பட்டுக்கிட்டே தேவதை
காட்டிய 3 தங்கக் காசை மட்டும்
எடுத்துக்கிட்டு தன் வீட்டுக்குப் போய்
சேர்ந்தாரு அந்த பெயிண்டரு.


பின் குறிப்பு 1: இந்தக் கதையின் நீதி என்ன?

பின் குறிப்பு 2: வேணும்ங்கிறவங்க "எங்க ஊரு தேவதை"ங்கிற
தலைப்பை 'ஓர் ஊரில் ஒரு தேவதை' அப்படின்னு
மாத்திப் படிச்சிக்கலாம். 'எங்க ஊருல' என்பதை
'ஓர் ஊருல' எனவும் மாத்திக்கவும்.

பின் குறிப்பு 3: 'எங்க ஊரு தேவதை'ங்கிற தலைப்புல
குடந்தையூர் ஆர்.வி.சரவணன் தன்னுடைய
படைப்பை வழங்குமாறு அழைக்கிறேன்.


.படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

21 comments:

r.v.saravanan said...

நான்காம் ஆண்டு துவக்கத்திற்கு வாழ்த்துக்கள் நிசாமுதீன்

இதில் நீதி என்னவென்றால் போதும் என்ற மனம் வேண்டும் அடுத்தவருக்கு உதவுவதும் அடுத்தவருக்கு கோடை அளிப்பதும் நிறைய செய்ய வேண்டும்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சரவணன்!
தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல கருத்துள்ள கதை. நிஜாம் பக்கம், நான்காம் ஆண்டில் எல்லாம் சிறப்படைய என் மனமார்ந்த வாழ்த்துகள்

திண்டுக்கல் தனபாலன் said...

4ஆம் ஆண்டு துவக்கத்திற்கு வாழ்த்துக்கள் சார்...

போதும் என்கிற மனமே பொன் செய்யும் மருந்து...

திருப்தி - எல்லாவற்றிலும் வேண்டும்...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@STARJAN

வாழ்த்திற்கும் கருத்திற்கும் நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@திண்டுக்கல் தனபாலன்

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி!

”தளிர் சுரேஷ்” said...

நல்லதொரு நீதிக்கதை! நன்றி!

இன்று என் தளத்தில் சுயநலமிக்க பூதம்! பாப்பாமலர்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post.html

jeva nathan said...

http://www.youtube.com/watch?v=3wqQvzZpOQs
ingkeyum parung

mymuji said...

சூப்பரா இருக்கு ... அந்த போட்டோ

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ s suresh

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ jeva nathan

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ mymuji

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
கதை பற்றிய தங்கள் கருத்து என்னங்க?

அபி said...

வாழ்த்துக்கள் நிசாமுதீன்

Easy (EZ) Editorial Calendar said...

அருமையான பகிர்வு......

நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

CS. Mohan Kumar said...

கதை நன்று நான்காவது ஆண்டுக்கு வாழ்த்துக்கள்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ அபி
வாழ்த்திற்கு நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ பிரியா
கருத்திற்கு நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ மோகன்குமார்
வருகைக்கு
கருத்திற்கு
வாழ்த்திற்கு
நன்றி!
தொடர்ந்து வாங்க!

ஸ்வர்ணரேக்கா said...

நல்ல கதை..

இராஜராஜேஸ்வரி said...

எங்க ஊரு தேவதை! --நீதி சொன்ன தேவதைக்கு பாராட்டுக்கள்..

(4-ஆம் ஆண்டு துவக்கம்) --வாழ்த்துகள்...

http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_21.html

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ ஸ்வர்ணரேக்கா

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...