...பல்சுவை பக்கம்!

.

Thursday, November 8, 2012

செல்போன் சிந்தனை!!! #106

செல்போன் சிந்தனை!!!

இரவு சுமார் 9 மணி இருக்கும். சிதம்பரத்திலிருந்து
மயிலாடுதுறைக்கு பஸ்ஸில் புறப்பட்டேன். பஸ்
புறப்பட்டு 5 நிமிடங்கள்கூட ஆகவில்லை.
செங்கழுநீர் பிள்ளையார் கோயில் தெருவிலிருந்து
(எஸ்.ப்பீ. கோயில் தெரு) சீர்காழி ரோடில் பஸ்
திரும்பியது.

எனதருகில் அமர்ந்திருந்தவரின் (சுமார் 40 வயதிருக்கலாம்)
செல்போன் இனிய ரிங்டோன் தந்தது. எடுத்து டிஸ்பிளேயில்
அழைப்பவர் பெயர் பார்த்தவர் இடது கையால் செல்லை
காதில் வைத்து, வலது கையை வாயின்மேல் வைத்து
பொத்திக் கொண்டு பயபக்தியுடன் பேச ஆரம்பித்தார்.

"இதோ வந்திட்டிருக்கேன்மா... இன்னும் 15 நிமிஷத்திலே
வந்திருவேன்மா... ஆமாம்மா... இல்லம்மா...
வைத்தீஸ்வரன்கோவில் வந்திட்டேன்மா... 15 நிமிஷத்திலே
வந்திடுவேன்மா... நீ சாப்பிட்டுட்டு தூங்குமா... நான்
வந்திடுறேன், வச்சிறவா?" என்று பேசிவிட்டு செல்லில்
அழைப்பை துண்டித்துவிட்டு என்னைப் பார்த்தார்.

அந்தப் பார்வையில் 'வெற்றிகரமாக மனைவியிடம்
பேசிவிட்ட பெருமிதமா? அல்லது சிதம்பரத்தையே பஸ்
விட்டு முழுமையாக விலகாத நிலையில்,
வைத்தீஸ்வரன்கோவில் வந்துவிட்டதாய் சொன்னோமே
அதை எப்படி சமாளிப்பது என்ற குழப்பத்தினால் தோன்றிய
கலவரமா? அல்லது இரண்டும் கலந்த கலவையா?'
எது என்றே   புரிந்து கொள்ள இயலாத உணர்வைக் கண்டேன்.

ஏன் இப்படி உண்மையை மறைத்து கோக்குமாக்காக
உளறவேண்டும் என்கிற கேள்வி நீண்ட நேரம் என்னைக்
குடைந்து கொண்டிருந்தது.

-அ. முஹம்மது நிஜாமுத்தீன்.   

. படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

26 comments:

r.v.saravanan said...

இது போல் நானும் பயணங்களில் பேச கேட்டிருக்கிறேன் நிசாமுதீன்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

இதெல்லாம் உங்களை யாரு கேக்க சொன்னது.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@r.v.saravanan

கேட்டிருக்கீங்க... ஆனா, நீங்களும் குழம்பியிருக்கீங்களா?

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@r.v.saravanan

கேட்டிருக்கீங்க... ஆனா, நீங்களும் குழம்பியிருக்கீங்களா?

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@T.N.MURALIDHARAN,

யாரும் கேட்க வேணாம்னும் சொல்லலையே?

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@T.N.MURALIDHARAN,

யாரும் கேட்க வேணாம்னும் சொல்லலையே?

திண்டுக்கல் தனபாலன் said...

அவருக்கு என்ன நிலைமையோ...? அவர் மனதில் உள்ள உண்மையை யார் அறிவார்..?

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ திண்டுக்கல் தனபாலன்,

அது தெரியாததால்தான் எனக்கு இந்த குழப்பமே ஏற்பட்டது.

Easy (EZ) Editorial Calendar said...

அடுத்தவங்களோட பிரச்சனையில் தலையிடகூடாது.........

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Indian said...

Tis is how mobile technology has changed us. We have become blatant liars in the open!. I overheard a man on a bus- it was in Pallavaram, he was telling the person on the other end he is crossing LIC and will reach High court in 10 min!!

'பரிவை' சே.குமார் said...

இது நிறைய பயணங்களில் பார்த்ததுதான்...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ மலர்,

கருத்திற்கு நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ Indian,

மொபைல் தொழில்நுட்பம் நம்மை மாற்றிவிட்டது, உண்மைதான்.
தங்கள் அனுபவத்தை பதிவு செய்தீர்கள்.
நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ சே.குமார்,

நிறைய அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும் போல?!

SUMAZLA/சுமஜ்லா said...

எங்க வீட்டில் வேலை நடந்து கொண்டிருந்த போது எலக்ட்ரீசியன் தனக்கு வந்த போன்காலில், இப்போ பவானியில் தாங்க.... இந்த ரோட்டில் தாங்க இருக்கிறேன் என்றார். ஆனால் இருந்தது 10 கி.மி. தொலைவில் பி.பெ.அக்ரஹாரத்தில் (எங்க வீட்டில்). நாம் ஒரு அவசரம் என்று கால் பண்ணினாலும் இப்படித்தான் பதில் சொல்வார் என்று புரிந்து கொண்டேன். இப்படிப்பட்டவர்களை நம்பக் கூடாது என்று முடிவெடுத்தேன்.

சேக்கனா M. நிஜாம் said...

:)

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@சுமஜ்லா

அது அவர்களின் வேலைக்கு ஒரு தகுதி, திறமை என்று நினைத்துக் கொண்டார்களோ?

கருத்திற்கு நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@சுமஜ்லா

அது அவர்களின் வேலைக்கு ஒரு தகுதி, திறமை என்று நினைத்துக் கொண்டார்களோ?

கருத்திற்கு நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...


சேக்கனா M. நிஜாம்

வருகைக்கு நன்றி!
தொடர்ந்து வாருங்கள்!

Unknown said...

:-)

mohamedali jinnah said...

நிகழ்வை அழகாக தந்துள்ளீர்கள். அது எப்படி உங்களால் ' செங்கழுநீர் பிள்ளையார் கோயில் தெருவிலிருந்து(எஸ்.ப்பீ. கோயில் தெரு) சீர்காழி ரோடில்' எப்படி இதன் நினைவு உங்கள் மனதில் பதிந்தது .!
தொடர்ந்து வாருங்கள்! என்று எழுதுவீர்கள் ஆனால் வந்தால் அதே கட்டுரை .இந்த மாதம் கட்டுரை எழுத நேரமில்லை காரணம் வீட்டு வேலை அதிகம். உங்களை தினம் நேரில் பார்க்க முடியும் ஆனால் தினம் கட்டுரையில் பார்க்க முடியாது ! பேஸ் புக்கில் இடை இடையே பார்க்க முடியும் . வாழ்த்துகள் புதுமை விரும்பி நிஜாம் அண்ணனுக்கு

mohamedali jinnah said...

'Your comment will be visible after approval.' Please approve.

சேக்கனா M. நிஜாம் said...

// சேக்கனா M. நிஜாம்

வருகைக்கு நன்றி!
தொடர்ந்து வாருங்கள்!//

இறைவன் நாடினால் !

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ mohamedali jinnah,
சில காலம் நான் சிதம்பரத்தில் பணியாற்றியதால் தெரு பெயர் நினைவிலிருக்கின்றது.

//நிஜாம் அண்ணா//
-இது ஏன், ஏன், ஏன்?

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//mohamedali jinnah said...

'Your comment will be visible after approval.' Please approve.//

Haa... Haa...
Approved!!!!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@சேக்கனா M. நிஜாம் said

எனது புதிய பதிவு:
http://www.nizampakkam.blogspot.in/2012/12/k.html

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...