இளங்கோவன் சார் எங்களின் வகுப்பாசிரியர். 9-ஆம்,
10-ஆம் வகுப்புகள் படிக்கும்போது, புத்தகத்தைப்
பார்க்காமலேயே உலக விஷயங்கள் கலந்து சுவையாக
பாடம் நடத்துவார்.
அப்போது ஒரு நாள் இன்பச் சுற்றுலா சென்றிருந்தோம்.
தஞ்சாவூர் பெரிய கோவில் சென்றுவிட்டு, சிவகங்கை
பூங்கா சென்றோம்.
மதிய நேரம். வெயிலில் நடந்து, அலைந்து, களைத்துப்
போய், பசி வயிற்றை உள்ளேயும் வெளியேயும்
கிள்ளியது.
உடனே இனிய நிழல் தரும் மரத்தின்கீழ் அமர்ந்து,
கை கழுவிவிட்டு, லஞ்ச் பாக்ஸைத் திறந்து,
கொண்டு சென்றிருந்த உணவை சாப்பிட ஆரம்பித்தோம்.
எனக்கு பசி மிகுதியாய் இருந்தபடியாலும் சிறிய
பாக்ஸில் குறைவான உணவே இருந்தபடியாலும்
நான் முதலில் சாப்பிட்டு விட்டேன்.
ஆசிரியராய் பணியாற்றிய எங்கள் அண்ணன், இளங்கோவன்
சாருக்கு நண்பர். சாருக்கு என்மீது, தனிப் பிரியம் உண்டு.
நான் சாப்பிட்டுவிட்டதைப் பார்த்த இளங்கோவன் சார்,
என்னிடம், தன்னுடைய மூன்றடுக்கு லஞ்ச் கேரியர்
பாக்ஸில் இருந்த உணவை நீட்டி, "சாப்பாடு வேணுமா
நிஜாம்?" என்று கேட்டார்.
உடனே நான், "பத்தலை சார்" என்றேன்.
"பத்தலைன்னா இந்த சாப்பாடு வேணுங்க்கிறதை
எடுத்துக்கோ" என்றார் சார்.
மீண்டும் உடனே "பத்தலை சார்" என்றேன் நான்.
"அப்படின்னா சாப்பாடு எடுத்துக்கோயேன்" என்றார் சார்.
'சாப்பாடு வேணாம்' என்பதைத்தான் நான் "பத்தலை'
என்று உளறியிருக்கிறேன். சுதாரித்துக் கொண்டேன்.
"இல்லை சார், வயித்திலே இடம் பத்தலை; அதனால்
சாப்பாடு வேணாம்னேன்" என்றேன்.
"ஓ அப்படியா! உளறினாலும் சமாளிச்சிட்டியே, பரவாயில்லை"
என்று சொல்லி சார் சிரிக்கவும் பையன்கள் எல்லோரும்
சிரிக்கவும் அந்த இடமே கலகலப்பானது.
-அ .முஹம்மது நிஜாமுத்தீன்.
.
23 comments:
நல்ல நகைச்சுவை உணர்வு உங்கள் ஆசிரியருக்கு
நல்லா சமாளிச்சிடிங்க....
பள்ளிக்கால நினைவுகள் மறக்காது. இனிய பகிர்வுக்கு நன்றி
NKS.ஹாஜா மைதீன்,
சொல்வதுபோல் எங்கள் ஆசிரியர் நகைச்சுவை உணர்வு நிரம்பியவரே!
நன்றி!
'என் ராஜபாட்டை' ராஜா,
ஆமாம் சமாளிச்சிட்டேன். அதோட எல்லோரும் சிரிச்சி, ஆஹா மகிழ்ச்சி.
ராஜா,
பொருத்தமாக லிங்க் கொடுத்துள்ளீர்கள்.
Starjan (ஸ்டார்ஜன்),
ரசித்ததற்கு நன்றி!
அருமையான பகிர்வு நன்றி!
s suresh,
வருகைக்கு நன்றி!
உங்கள் நகைச்சுவை நகைச்சுவை பதிவான ஏழாம் நாளில் வலைச்சரத்தில் பகிர்ந்து கொள்கிறேன். மிக்க நன்றி!
வாங்க உஷா அன்பரசு அவர்களே!
தங்கள் விருப்பம் எனக்கு மகிழச்சியே!
நன்றி!
வாங்க உஷா அன்பரசு அவர்களே!
தங்கள் விருப்பம் எனக்கு மகிழச்சியே!
நன்றி!
வாங்க உஷா அன்பரசு அவர்களே!
தங்கள் விருப்பம் எனக்கு மகிழச்சியே!
நன்றி!
சமயோகிதம்...
பத்தலை??.... எங்க ஊரில் காணாதுன்னு சொல்வோம். கல்லூரியில் ஒருமுறை என் தோழியிடம் 'உன் கையில் மருதாணி நல்லா பத்தலை"ன்னு சொன்னேன். 'என்னது...பத்தலையா... அதென்ன தீயா?..மருதாணி நல்லா பிடிக்கலைன்னு சொல்லு' என்றாள். இப்பதிவைப் படித்ததும் இந்த சம்பவம் நினைவிற்கு வந்தது. :)
சே.குமார்,
நறுக்கென்று சொன்ன கருத்து நன்று.
enrenrum16,
என் கல்விச்சாலை சம்பவம் உங்கள் கல்லூரி நிகழ்வை நினைவூட்டியதா?!
நன்றி!
இனிய மலரும் நினைவுகள்.. வாழ்த்துகள்..
டைமிங் கா சொன்னது நன்று
பள்ளி கால மலரும் நினைவுகள் சிரிக்க வைத்தது
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
@ இராஜராஜேஸ்வரி
வாழ்த்(தும் கருத்)திற்கு நன்றி!
@ r.v.saravanan
கருத்திற்கு நன்றி.
super
Post a Comment