ஜிகினா 5: கதைக்கதிரின் கதை!
தினமணி வெளீயீடாக, "கதைக்கதிர்" என்கிற புதின (Novel) மாத இதழ் வெளிவந்தது. அவ்வப்போது படித்து நானும் சில விமர்சனங்கள், கேள்விகள் எழுதி அனுப்பி பிரசுரமும் ஆகின.
ஒரு தடவை ஸ்ரீவேணுகோபாலன் எழுதிய "இவர்கள்" என்கிற நவீனம் படித்துவிட்டு, விமர்சனம் எழுதி அனுப்பியிருந்தேன். அடுத்த மாத கதைக்கதிரில், அயன்புரம் த.சத்தியநாராயணன் எழுதிய விமர்சனம் முதல் பரிசு பெற்றதென்றும் பரசலூர் ஆர்.நாகராஜன் எழுதிய விமர்சனம் இரண்டாம் பரிசு பெற்றதேன்றும் நான் எழுதியிருந்த விமர்சனம் மூன்றாம் பரிசு பெற்றதென்றும் குறிப்புடன் எனது விமர்சனம் பிரசுரிக்கப்பட்டிருந்தது. பரிசுத் தொகை விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்றும் குறிப்பிடப் பட்டிருந்தது.
அந்த விமர்சனம் இதோ: [படத்தின்மேல் கிளிக் செய்து பெரிதாக்கிப் படியுங்கள்]
இதழ் வெளிவந்து சுமார் 20 தினங்கள் சென்றபின் எம்.ஓ. மூலமாக பரிசுத்தொகை எனக்கு வந்து சேர்ந்தது.
அந்த மாத ஆரம்பத்திலேயே அந்த மாதம் வெளிவந்த கதைக்கு நான் விமர்சனம் அனுப்பியிருந்தேன். பரிசுப் பணம் வந்ததும் நன்றி தெரிவித்து கதைக்கதிர் முகவரிக்கு ஒரு கடிதமும் அனுப்பினேன்.
அடுத்த மாதம் 1-ஆம் தேதியிலிருந்து கதைக்கதிர் வெளிவருகிறதா என ஆவலுடன் எதிர்பார்த்தேன்.
ஆனால் பரிதாபம்... அதன் பிறகு அந்தக் கதைக்கதிர் மாத இதழ் வெளிவரவேயில்லை.
கதைக்கதிரில் வெளிவந்த மணிவண்ணன் பதில்கள் பகுதியிலிருந்து என் கேள்விகள்:
கேள்வி 1:
கேள்வி 2:
கேள்வி 3:
ஒரு விமர்சனக் கடிதம்:
மணிவண்ணன் என்கிற பெயரில் பதில்கள் தந்தவர் திரு. நா. பார்த்தசாரதி அவர்கள்!
அடுத்த ஜிகினாவில்...
அடுத்த ஜிகினாவில்...
"சங்கேத பாஷையில் "குமுதம் அரசு பதில்கள்!"
இதையும் படிக்கலாம்:
ஜிகினா 4: உதயமும் அஸ்தமனமும்!.
11 comments:
உங்களுக்கு பரிசு கிடைக்காமல் போனது வருத்தமில்லை ஆனால் "கதைக்கதிர்" இதழ் வந்தது தெரியாமல் போனதுதான் வருத்தம். மிகப் பெரிய வருத்தம் கலைக்கதிர் ,மஞ்சரி போன்ற உயர்வான இதழ்கள் காணாமல் போய்விட்டதில்தான்.
தாங்கள் நேரில் அமைதி எழுத்தில் 'ஹாஸ்யம்'
@mohamedali jinnah,
அந்த மாதம் 20ஆம் தேதியே பரிசுப் பணம் வந்துவிட்டது.
ஆனால், அடுத்த மாதம் கதைக்கதிர் இதழ்தான் வரவேயில்லை.
மேலும், கலைக்கதிர், மஞ்சரி இதழ்கள் இப்பவும் வருவதாகத்தான் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
கருத்தளித்தமைக்கு நன்றி!
அருமையான நினைவுப்பகிர்வு! நன்றி!
@ s suresh,
வருகை புரிந்து, கருத்தளித்தமைக்கு நன்றி!
@ s suresh,
வருகை புரிந்து, கருத்தளித்தமைக்கு நன்றி!
மூன்றாம் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்
பரிசு தொகை எவ்வளவு என்று குறிப்பிடவில்லையே
vaazhthukkal nizam niraiya ezuthungal
keezhai.a.kathirvel
தாங்கள் விமர்சனம் எழுதி பரிசு வாங்கியுள்ளது கேட்க மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. என் அன்பான இனிய பாராட்டுக்கள். நல்வாழ்த்துகள்.
>>>>>
தரம் வாய்ந்த பத்திரிகைகள் நாளடைவில் தொடர்ந்து வெளியிட முடியாதபடியாவது மிகவும் துரதிஷ்டம் தான்.
>>>>>
தங்களின் கேள்விகளும் அதற்கான பதில்களும், கடைசியில் உள்ள விமர்சனக்கடிதமும் மிகச்சிறப்பாகவே உள்ளன.
மீண்டும் பாராட்டுக்கள்.
>>>>>
விமர்சனத்திற்காக பரிசு, அதுவும் மிகப்பிரபலமான தீபம் நா. பார்த்தசாரதி அவர்களிடமிருந்து பெற்றது, கேட்க மிகவும் சந்தோஷமாகவே உள்ளது.
மேலும் மேலும் தங்களின் விமர்சனங்கள் தொடரட்டும். நான் என் வலைத்தளத்தினில் தற்சமயம் அறிவித்துள்ள போட்டி தங்களின் விமர்சன ஆர்வத்திற்கு நல்ல தீனி போடுவதாக அமையக்கூடும் என நம்புகிறேன்.
என் தளத்தில் அறிவித்துள்ள போட்டியில் முதல் இரண்டு கதைகள் தவிர அனைத்துக்கும் இதுவரை விமர்சனம் அனுப்பி வருகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.
மொத்தம் 40 மைனஸ் 2 = 38 வாய்ப்புகள் தங்களுக்கு உள்ளன. மேலும் சிறப்பாக 40 வரிகள் அல்லது 200 வார்த்தைகளுக்குக் குறையாமல் விமர்சனம் எழுதி அனுப்பிக்கொண்டே இருங்கள். நிச்சயமாகத் தங்களால் பரிசு பெறும் வாய்ப்பினை அடைய முடியும். அதற்கு என் அட்வான்ஸ் வாழ்த்துகள்.
அன்புடன் VGK
gopu1949.blogspot.in
Post a Comment