நகைச்சுவை; இரசித்தவை (20) #127
புன்னகைப் புத்தாண்டு 2016.!

ஹா... ஹா.. ஹாஸ்யம்! (1)
.
புன்னகைப் புத்தாண்டு 2016.!

ஹா... ஹா.. ஹாஸ்யம்! (1)
"டெல்லி தேர்தல் முடிவை விட்டுத்தள்ளுங்க தலைவரே... ஒரு நல்ல செய்தி இருக்கு!"
"சொல்லுய்யா..."
"தாய்லாந்துல எலெக்சன் அறிவிச்சிருக்காங்களாம்!"
-சுரா. மாணிக்கம்
===============================================================
ஹா.. ஹா.. ஹா..ஸ்யம்! (2)
" 'ஆட்சியைப் பிடிப்பதுதான் என் கனவு'னு தலைவர் சொல்றாரே, பிடிச்சுடுவாரா?"
"அதான்... அவரே சொல்லிட்டாரே, கனவுன்னு!"
- எஸ். கோபாலன்.
===============================================================
ஹா.. ஹா.. ஹாஸ்யம்! (3)
"வாக்களித்தவர்களுக்கு தலைவர் இப்போது நன்றி சொல்வார்!"
"அந்த நாலு பேருக்கு நன்றி... வணக்கம்!"
-அ. ரியாஸ்
===============================================================
ஹா.. ஹா.. ஹாஸ்யம்! (4)
"தேர்தல் கமிஷன் வர வர ஃபைனான்ஸ் கம்பெனி மாதிரி ஆயிடுச்சு!"
"ஏன் தலைவரே புலம்பறீங்க?"
"டெபாசிட்டைத் திருப்பித் தர மாட்டேங்கிறாங்களே!"
- பி. ஆர். பாண்டி
===============================================================
ஹா.. ஹா.. ஹாஸ்யம்! (5)
"ஆட்சி அமைக்க கவர்னர்கிட்ட இருந்து இன்னும் அழைப்பு வரமாட்டேங்குதேய்யா?"
"தலைவரே... நாம ஜெயிச்சது இடைத்தேர்தல்ல!"
-மகா
===============================================================
ஹா.. ஹா.. ஹாஸ்யம்! (6)
"எங்க தலைவர் வெளிப்படையானவர் என்பதை இப்போதாவது நம்பறியா?"
"அதுக்காக 'பழச்சாறு அருந்தும்வரை உண்ணாவிரதம்'னா போர்டு வெப்பீங்க?"
-அதிரை புகாரி
.