கணேஷுக்கு கால்கட்டு!
சிறுகதை(?) மாதிரி.
- அ. முஹம்மது நிஜாமுத்தீன்.
நண்பர் பாலகணேஷ் ஓர் ஓவியத்தைக் கொடுத்து அதற்கு சிறுகதை கேட்டார். (பாவம் அவர்!)
(நன்றி: ஓவியர் தமிழ்.)
கணேஷ் கத்தினான்: "தப்பு உங்கமேலேதான்!"
பாலா கத்தினாள்: "தப்பு உங்கமேலேதான்!"
"ஏங்க, நான் பாட்டுக்கு நேரா போய்க்கிட்டிருக்கேன்!
நீங்க சாமான்கள எடுத்திட்டு வந்து என்மேல இடிச்சிட்டு இப்படி கத்துறீங்களே?" என்றான் கணேஷ்.
"நான்தான் சாமான்லாம் வச்சிருந்தேன். நீங்க பார்த்து வரமாட்டீங்களா?" திருப்பிக் கேட்டாள் பாலா.
"நான் நேரா வந்தேன். நீங்கதான் குறுக்கே வந்திட்டீங்க! சரி, நகருங்க நான் ஆஃபிஸ் போகணும்" அவசரப்பட்டான் கணேஷ்.
"அதெல்லாம் முடியாது. நீங்க தட்டிவிட்டுட்டீங்க;
நீங்கதான் என் கார்ல எடுத்துவைக்கணும்"
தடுத்தாள் பாலா.
"ஐய்யய்யே! நான் கம்பெனில அசிஸ்டன்ட் மேனேஜர். ரெண்டு தெரு தள்ளி ஒரு கஸ்டமரப் பார்க்க, நடந்துபோய்ட்டு வறேன். எங்க எம்.டி.வேற திடீர்னு ஆஃபிஸ்-க்கு வந்துட்டதா மேனேஜர் ஃபோன் பண்றாரு.
நீ வேற இப்படி படுத்தறியேமா!!!?" கடுப்படித்தான் கணேஷ்.
ஆனால் பாலா விடவில்லை. சாமான்கள் அனைத்தையும் காரில் வைத்தபின்புதான் அவனை விட்டாள்.
கணேஷ் பதட்டப்பட்டான்.
"லேட் ஆயிடுச்சி; நடந்து போனால் இன்னும் லேட் ஆகிடும். கார்லயே என்னை ட்ராப் பண்ணிட்டுப் போ!" என்று அவளை மடக்கினான் கணேஷ்.
"சார், கார் உள்ளே இடமில்லை. கேரியர்ல உட்கார்ந்துக்கிறீங்களா?" ஏளனமாகக் கேட்டாள் பாலா.
"ஓகே" என்றான் கணேஷ்.
அவன் கார் மேலே ஏறியதும் விழுந்துவிடாமல் இருப்பதற்காக அவனை கேரியருடன் சேர்த்து கட்டிவிட்டாள் பாலா.
அப்படி இருவரும் ஹாயாக காரில் போகும்போதுதான் பாலாவின் தோழி கலா, அதை தனது ஃபோனில் படம் எடுத்து, பாலாவிடம் கேட்காமலே ஃபேஸ்புக்கில் பதிவிட்டுவிட்டாள்.
அதைப்பார்த்த கலாவின் நண்பன் கண்ணன் அதில் தனது நண்பன் கணேஷை டேக் பண்ணிவிட்டான்.
உடனே இந்த செய்தி இணையம் முழுவதும் வைரல் ஆகிவிட்டது.
ட்டீ.வி. மற்ற மீடியாக்களும் கதை, கதையாய் இதை தமிழகம் எங்கும் கொண்டு சேர்த்தன.
பாலாவின் பெற்றோர் அவளிடம், "யாருடி அவன்? அவனுக்கும் உனக்கும் என்ன தொடர்பு?" என்று குறுக்கு விசாரணை ஆரம்பித்துவிட்டார்கள்.
கணேஷின் பெற்றோரும் கணேஷிடம் கேள்விமேல் கேள்வி கேட்டு திணறடித்தார்கள்.
இதைத் தொடர்த்து கணேஷின் நண்பர்களும் பாலாவின் தோழிகளும் இரு வீட்டாரிடமும் பேசி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தனர்.
திருமணமும் சு(ல)பமாய் முடிந்தது.
கணேஷின் நண்பர்களும் பாலாவின் தோழிகளும் 'இதுபோல நமக்கு ஒரு துணை கிடைக்குமா!?' என்று தேட ஆரம்பித்து விட்டார்கள்.
(முற்றியது.)
.
படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!
4 comments:
நல்ல கற்பனை.
படத்துக்கான கதை... பாராட்டுகள்.
ஹா ஹா ஹா ஹா ஹா...
கணேஷ் பாலா (கதை எழுதச் சொல்லிக் கொடுத்தவர்) அவருக்கே அல்வாவா!! கணேஷ், பாலா என்று கதா பாத்திரங்கள் வைத்து...பாலா கணேஷை காரில் மட்டும் கட்டாமல் வாழ்க்கையிலும் கட்டிப் போட்டுவிட்டீங்க!! ரசித்தோம்..
சரி முடிவு என்னாச்சு? பரிவை சே குமாரும் அவர் தளத்தில் இதற்கான கதையைப் போட்டிருந்தார்...
துளசிதரன், கீதா
பாராட்டுகள் வாழ்த்துகள்! நண்பரே/சகோ
Super
Post a Comment