...பல்சுவை பக்கம்!

.

Sunday, December 1, 2019

தொல்லைப்பேசி -சிறுகதை #139


'தமிழக எழுத்தாளர் குழுமம்' நடத்திய 'படத்திற்கேற்ற கதை போட்டி'-க்காக எழுதப்பட்ட கதை இது!

தொல்லைபேசி!
- ஒரு பக்கக் கதை!
- அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

  பவானி கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் பார்த்து பேச ஆரம்பித்தாள்.

  "அந்தக் காலத்தில வெளியூரில் இருப்பவர்களுக்கு செய்தியை சொல்ல, தபால்தான் இருந்தது. அதற்குப் பின்னால, மொபைல் ஃபோன் அந்த இடத்தை பிடித்தது. இப்ப அந்த ஃபோன், நம்ம வாழ்க்கையிலே, நம்மளுடைய அதிகபட்ச நேரத்தையே
பிடிச்சிக்கிட்டது துரதிர்ஷ்டவசமானது.
 
  "நீண்ட நேரம் ஃபோனிலேயே நாம இருக்கிறதாலே நம்முடைய உழைக்கும் திறன் குறைஞ்சிட்டே வருது. இரவு நேரத்திலும் ஃபோன் பயன்பாட்டினால், தூக்கத்தை தூண்டுற சுரப்பிகள் உற்பத்தி குறையுது.

   "அதனால, பல உடல் நலக் கேடுகள், ஃபோனுக்கு அடிமையாகிற பரிதாபம்லாம் ஏற்படுது.

   "உங்க வீடுகள்ல, சிறு குழந்தைகளுக்கு அழுதால், ஃபோன் கொடுக்காமல், கிளுகிளுப்பை கொடுத்து பழக்கப்படுத்துங்க! ஃபோனை, தூரமா வச்சிட்டு, அவங்களோட தாயம், பல்லாங்கழி, ஆடுபுலி ஆட்டம், பரமபதம்னு நீங்களும் சேர்ந்து விளையாடுங்க! சிறுவர்களுக்கு, கபடி, கிட்டிப் புல், கிரிக்கெட், ஆபியம், கோலி குண்டு, கேரம், சதுரங்கம்னு விளையாட ஊக்கப்படுத்துங்க! ஃபோனில் விளையாடாதீங்க! அரட்டை அடிக்காதீங்க! தேவையானதை பேசுங்க!

   "வாட்ஸ்ஆப்ல இருந்தா, அதையே திரும்ப திரும்ப பார்க்காம, 1 மணி நேரத்துக்கு இல்லனா அரை மணி நேரத்துக்கு ஒரு முறை போய் பார்த்தீங்கனா, எல்லா மெசேஜ்-ஐயும் படிச்சிடலாம்; உடனே அழிச்சிடலாம்!
டேட்டா இலவசமா கிடைக்குதுனு, அதுக்கு பதிலா நம்ம நேரத்தை அதுல செலவழிச்சிடாமல், உபயோகமா பயன்படுத்திக்குங்க! நன்றி!!" என்று பேச்சை முடித்தாள் பவானி.

   மறுநாள், சனிக்கிழமை பவானி அவளுடைய சிறிய பெட்டிக் கடையைத் திறந்து வியாபாரம் செய்யும்போது வந்தான் சிறுவன் தாமரைச்செல்வன்.

   "அக்கா, எங்க அம்மா சென்னாங்க, ஃபோனில் விளையாடாமல், தெருவில விளையாட சொன்னீங்களாம்! அதனால, இந்த நம்பருக்கு நெட் பேக் போட வேண்னாம்; டாக் டைம் மட்டும் டாப்-அப் பண்ணிவிடுங்க!"
என்றான் அவன்.

   அதைக் கேட்ட பவானிக்கு, 'வருமானம்' குறைந்தது; அவளின் 'பெருமனம்' நிறைந்தது!
- அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

9 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

இக்கால குழந்தைகளுக்கு ஏற்ப சூப்பரான கருத்து. வாழ்த்துகள். பாராட்டுகள்.

Yarlpavanan said...

சிறந்த வழிகாட்டல்

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு சிறுகதை. பாராட்டுகள்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...
This comment has been removed by the author.
அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@Yarlpavanan...

கருத்தளித்தமைக்கு நன்றி சார்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@வெங்கட் நாகராஜ்...

தங்கள்
கருத்திற்கும் பாராட்டிற்கும் நன்றி சார்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@வை.கோபாலகிருஷ்ணன்...



தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சார்!

Ravichandran M said...

இன்றைய இளைஞர் களுக்கு மட்டுமல்லாது அனைவருக்குமான செய்தி! அருமை! அருமை!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@Ravichandran M...

கருத்து தந்தமைக்கு நன்றி!!!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...