அன்புள்ள ரஜினிகாந்த்!
#அன்புள்ள_ரஜினிகாந்த்
(அட, நீங்க நடிச்ச படத்துப் பெயர்.!)
உங்களுக்கு ஒரு மடல்.
"ரஜினி வந்தார்; நடித்தார்; போனார்னு இருக்கக்கூடாது. என்ன (என்னை) வாழ வச்ச தமிழ்நாட்டு மக்களுக்கு ஏதாச்சும் (நல்லவை) செய்யணும்" அப்டினு அடிக்கடி சொல்லிட்டிருக்கீங்க!
நீங்க நூறாண்டு வாழணும்னு வாழ்த்தறேன்! (இப்ப எதுக்கு வாழ்த்து?)
இப்ப உங்க வயசு எத்தனை ஆண்டுகள்? 70-ஆ?
மக்களுக்கு என்ன செய்யப்போறீங்க? எப்ப(டி) செய்யப்போறீங்க?
'கட்சி ஆரம்பிக்கறதை மனசால நினைக்கறதையே விட்றுங்க'-னு டாக்டர் சொன்னபடி கட்சி ஆரம்பிக்காம விட்டீங்களே, அதுவா? ம்... அதுவும் நல்லதுதான்!
#கட்சியெல்லாம்_இப்ப_நமக்கெதுக்கு?
வேற, வேற, வேற என்ன செய்யப்போறீங்க?
உங்க உலக நாயகன்கூட, 'சக்கர நாற்காலியில் அமர்ந்து அரசியல் செய்து மக்களை சோதிக்க மாட்டேன்'னுருக்கார். மய்யத் தலைவருக்கு பிடிக்காத அச்செயலை நீங்களும் செய்யப்போவதில்லை. #காலத்தின்_கையில்_அது இருக்கு!
அகரம் பவுண்டேசன்?
வேணாம், அது சூர்யா ஆரம்பிச்சுட்டாரு! 'தகரம் பவுண்டேசன்'? பேரு நல்லால்ல!!! 'சிகரம் பவுண்டேசன்' அப்டினு ஆரம்பிச்சு வசதியற்ற மாணவர்களுக்கு கட்டணமில்லாக் கல்வி தரப்போறீங்களா?
'ஆஸ்ரம் பள்ளி'னு உங்க( மனைவி)கிட்டே இருக்கு! நீங்க 'தர்ம ஆஸ்ரம் பள்ளி'னு ஆரம்பிக்கலாம்!
விவசாயிகளுக்கு நல் உதவிகள் செய்யலாம். ஏற்கெனவே கார்த்தி செஞ்சிட்டிருக்கார். சீமானுக்கு சின்னம் விவசாயியாம். அதுக்காக நீங்க விவசாயிகளை கைவிட்றாதீங்க!
கிராமங்களில் புதிதாக
மருத்துவ வசதி செய்து தரலாம். ஜோதிகாவும் அப்படிதான் சொல்றாங்க!
அரசு உதவிகள் சென்று சேராத கிராமங்களுக்கு சாலை வசதி, குடிநீர் வசதி, குடியிருப்பு வசதிகள் செய்து தரலாம்.
நீட்டை தடைசெய்யும்வரை
நீட் இலவச பயிற்சி மையங்கள் நடத்தலாம்.
காவிரி நீர் கிடைக்க குரல் கொடுக்கலாம்; முயற்சிகள் எடுக்கலாம்.
(போராட்டம் செய்து சுடுகாடாக ஆக்கமாட்டீங்க, தெரியும்!)
நதிகள் இணைப்பிற்கான முயற்சிகள் ஆரம்பிக்கலாம்! ஏற்கெனவே 'மிஸ்ட் கால்' கேட்டு வாங்கி சில நதிகளை சில பேர் இணைச்சிட்டாங்க! நீங்க மீதியிருக்கிற நதிகளை பார்த்துக்குங்க!
கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு முன்பே ஒரு கோடி (-எவ்வளவுப்பு? ஒரு கோடிப்பு!-)
குடுத்திருக்கீங்க! அதை யார்ட்ட குடுத்தீங்க? பத்திரமா வச்சிக்கச் சொல்லுங்க!
புயல், வெள்ள நிவாரண நிதி என தனியாக நிதி ஆதாரத்துடன் அறக்கட்டளை துவங்கலாம்!
முக்கியமானது: நீங்க நடிச்ச படம் பார்க்க வருகிற ரசிகர்களுக்கு சலுகையாக டிக்கெட் கட்டணம் 50 ரூபாய் மட்டும்தான் அப்டினு
உரக்க ஒரு தடவை சொல்லுங்க!
நீங்க ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரி!
எவ்வளவோ திட்டமிருக்கு!
#என்னவோ_திட்டமிருக்கு!
உங்க காலத்திற்குப் பின்னே மக்களுக்கு எதுவும் செய்வீங்க, அதெல்லாம் இருக்கட்டும்!
இருக்கும் காலத்தில் எதையாவது செய்ங்க!
என்ன செய்யப்போறீங்க, அதையாவது சொல்லுங்க!
தமிழக மக்களின் வேண்டுகோள்!
***
13 comments:
வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல இப்படியா ஒரு முதியவரை கஷ்டப்படுத்துவீங்க ?
ச்சே நீங்க ரொம்ப மோசம்...
@KILLERGEE Devakottai...
என்னை, 'மோசம்' என்று பாராட்டிய தங்களுக்கு என் நன்றிகள்!
சரியான தாக்குதல்...
@திண்டுக்கல் தனபாலன்...
சொல்லிக்கொண்டே இருந்தால்?
'செய்யுங்கள்' என்றுதான் கேட்கிறோம்!
கருத்திற்கு நன்றி!
சரியாச் சொல்லி இருக்கீங்க! பெற்றதில் கொஞ்சமாவது கொடுக்கலாம்!
@வெங்கட் நாகராஜ்...
'கொடுக்கிறேன்'னுதான் சொல்றாருங்க! 'சீக்கிரம்' (வந்து) கொடுங்கன்னுதான் தமிழக மக்கள் கேட்கிறோம்!!!
அருமை. தாங்களுக்கு மிக்க நன்றி. சரியான பதிவு. போன வருடமே எழுதியுள்ளீர்கள்.
@ Anonymous...
வருகைக்கு, கருத்துக்கு நன்றி!
(யார்னு தெரியல!)
மிகவும் அருமை
மிகவும் அருமை
சிறப்பு
அருமையான கட்டுரை வாழ்த்துக்கள்
அருமை, அருமையாக கருத்துகள் தந்த பேச்சியப்பன் அவர்களே, நன்றி! @Kavinpechi
Post a Comment