-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
மிகுந்த கூட்டமாக இருந்த பேருந்தில் மூன்று வயது மதிக்கத்தக்க குழந்தையுடன் ஏறினார் ஒரு தாய். என்னருகே வந்து நின்று கொண்டவரிடமிருந்து அந்த குழந்தையை, உட்கார்ந்திருந்த நான் வாங்கிக் கொண்டேன்.
புன்னகை முகத்துடன் இருந்த குழந்தையின் உடலில் காது, கழுத்து, கை, கால் எங்கும் பொன்னகைகள் அலங்கரித்தன.
அந்த தாயிடம், "என்னம்மா, குழந்தையின் உடம்பு முழுதும் கவரிங் நகைகளா?" என்று சத்தமாக நான் கேட்டேன்.
"என்னது, கவரிங் நகைகளா? எல்லாம் பவுன் நகைகள்!" என்று உடனடியாக பதில் சொன்னார் அந்த தாய்.
இப்பொழுது பேருந்தில் இருந்தவர்கள் அனைவரின் பார்வைகளும் அந்த குழந்தையின் மேல் தான்.
'அப்பாடா, இனி பிக்பாக்கெட் திருடன் எவனும் குழந்தையை நெருங்க மாட்டான். நகை கீழே விழுந்து விட்டாலும் கூட நமக்கு எந்த கவலையும் இல்லை; ஏனென்றால் பஸ்ஸில் எல்லோருடைய பார்வையும் குழந்தையின் மேலேதான்' என நிம்மதியாக பயணத்தை தொடர்ந்தேன்.
*
திருவண்ணாமலையில் 26/12/2021 அன்று நடந்த 'தமிழக எழுத்தாளர்கள்' குழுவின் 7-ஆவது சந்திப்பில் வெளியிடப்பட்ட, குழு உறுப்பினர்களின் படைப்புகளின் தொகுப்பு நூலான 'அருணையில் பூத்த மலர்கள்' நூலில் இடம்பெற்ற எனது படைப்பு.
++++++++++++++++++++++++++++++
12 comments:
அருமை நண்பரே வாழ்த்துகள்.
@KILLERGEE Devalottai...
வாழ்த்தியமைக்கு நன்றி நண்பரே!
கதை நன்று. வாழ்த்துகள்.
@வெங்கட் நாகராஜ்...
வாழ்த்துக்களுக்கு நன்றி நன்பரே!
வாழ்த்துகள்
அருமை...
@கரந்தை ஜெயக்குமார்...
தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி சார்!
@திண்டுக்கல் தனபாலன்...
தங்களின் பாராட்டுக்கு நன்றி சார்!
கதை நன்று. வாழ்த்துகளும்
துளசிதரன்
கீதா
@துளசிதரன்...
@கீதா...
பாராட்டி, வாழ்த்தியமைக்கு இருவருக்கும் நன்றி!
தங்கம் போன்றே அளவான - சிறப்பான பதிவு, வாழ்த்துக்கள்.
கோ.
@koilpillai...
தங்களின் முதல் வருகை என நினைக்கிறேன். நல்வரவு நண்பரே!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
Post a Comment