புத்தக விமர்சனம்: 'தாய்ப்பால் உறவு!'#179
மயிலாடுதுறை க.ராஜசேகரன் அவர்கள் எழுதிய 'தாய்ப்பால் உறவு' சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் 15 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. அனைத்து சிறுகதைகளும் பத்திரிகைகளில் பிரசுரமானவை மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்றவை.
இதில் இடம் பெற்றுள்ள அனைத்து கதைகளுமே வேறு வேறு கதைக்களங்களில் பயணப்பட்டாலும் அடிப்படையாக 'விவசாயம்' என்ற ஒற்றைக் கோட்டில் செல்கின்றன.
ஒவ்வொரு கதையும் ஆரம்பம் முதல் அதன் இறுதிவரை அல்லது அதன் தீர்வு வரை செல்லும் வழியில் பயணப்படும் பாதை முழுவதும் காணப்படும் வர்ணனை நடை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தொய்வின்றி செல்வதால் விறுவிறுப்பை அதிகம் கூட்டுகிறது.
உதாரணமாக 'எல்லாமே இலவசம்' என்கிற கதையில் புத்தம் புதிதாக 'நேர வங்கி' என்ற ஓர் அழகிய கான்செப்ட் கையாளப்பட்டிருக்கிறது. இது பல வெளிநாடுகளில் நடைமுறைகளில் இருந்து வந்தாலும் இந்தியாவுக்கு இது புதிய விஷயம். இதை பலர் ஏற்றுக்கொள்வதில்லை அல்லது நிறைய பேர் வரவேற்கிறார்கள். ஆனால் அதே சமயத்தில் தன் வீட்டிலேயே இதற்கு எதிர்ப்பு இருக்கும்பொழுது தனது மனைவி சாவித்திரியையே அதை சுப்ரமணியன் உணர வைப்பதாக கதை முடிவது அழகிய ஒரு நிறைவைத் தருகிறது.
அதேபோல் குட்ட குட்ட குனியும் ஒரு விவசாயி அவன் முட்டு சந்தில் முட்டும் போது எப்படி உயிர் கொண்டு எழுவான், எப்படி தனி மனிதனாவான், எப்படி தனி ஒரு முதலாளியாக மாறுவான்,
தானே தன் பொருளுக்கு விலை வைப்பான் என்பதை 'வெவசாயி' கதை மூலமாக
அழகான ஐடியா உடன் முடிவை தந்த விதம் விதம்
பாராட்டிற்குரியது.
வெயிலில் வியர்வை வழிய கஷ்டப்பட்டு, பாடுபட்டு, பொருள்களை விற்கும் சிறு வியாபாரிகளிடம் அடாவடியாக அடிமாட்டு விலைக்கு பொருள்களை விலை கேட்கும் அடாவடி அமுதா போன்றவர்களுக்கு ஓர் அழகிய அறிவுரையாகவும் எந்த நேரத்திலும் திடீரென்று ஏற்படக்கூடிய எதிர்பாராத விபத்துகளை எப்படி சாதுரியமாக சமாளிப்பது என்ற கருத்தையும் இணைத்து அழகான கதையாக தந்திருந்தார் கதாசிரியர் தனது 'கத்தி' என்ற கதையின் மூலம்.
இந்த சிறுகதை 'தினமலர் வாரமலர்' இதழில் 2019 ஆம் ஆண்டில் வெளியான சிறுகதை என்பது சிறப்பு!
வங்கி ஊழியரின் தரக்குறைவான பேச்சினால் ஒருவர் எப்படி வாழ்க்கையின் உயர்ந்த நிலைக்கு செல்கிறார் என்கிற சம்பவத்தைக் கூறும், மூன்று பக்கக் கதையாக சாவி வார இதழில் வெளிவந்த 'அந்த வார்த்தைகளுக்கு நன்றி' என்கிற கதை இப்பொழுது வந்தால் ஒரு பக்கக் கதையாக பிரசுரம் ஆகிட வாய்ப்புள்ள கதை.
நீங்களும் இந்த நூலை வாங்கி படிக்க வேண்டும் அல்லவா? ஆகவே இதன் சிறப்புகளை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
நூல் பெயர்: தாய்ப்பால் உறவு
ஆசிரியர்: மயிலாடுதுறை க.ராஜசேகரன்
பதிப்பு:
சந்தியா பதிப்பகம்
தொலைபேசி:
044-2489-6979
பக்கங்கள்: 162
விலை: ரூபாய் 160
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
nidurnizam.mn@gmail.com
8 comments:
தங்களது விமர்சனம் சிறப்பாக இருக்கிறது நண்பரே.
ஆசிரியருக்கு வாழ்த்துகள் நூலை வாங்கிப் படிக்கிறேன் நன்றி.
விமர்சனம் அருமை.
ஆசிரியருக்கும் வாழ்த்துகள். நல்ல கதைக்கரு. அதுவும் நேரவங்கி இங்கு அத்தனை பிராபல்யம் ஆகாத போது அதை உட்படுத்திக் கதை...
கீதா
KILLERGEE Devakottai
வருகைக்கும் கருத்தளித்தமைக்கும் நன்றி!
@கீதா மேடம்
வந்து கருத்திட்டமைக்கு நன்றிமா!
விமர்சனம் அருமை...
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சார்!
அன்பு நண்பர் முகமது நிஜாமுத்தீன் அவர்களுக்கு வணக்கம்,
தங்கள் விமரிசமம் படித்தேன். அருமை.
நூல் வெளியீட்டு விழாவின்போது அதன் ஆசிரியரே எனக்கப் பரிசாக வழங்கியிருக்கிறார். அந்த நூலை. பத்திரமாக வைத்திருக்கிறேன். அமைதியாக உட்கார்ந்து ரசித்துப் படிக்க வேண்டும் என்பதே என் ஆசை.
தங்கள் விமரிசனம் படித்தபின் இன்னும் ரசித்துப் படிக்கமுடியும் என்றே தோன்றுகிறது. எழுத்தாளர்களின் கதைகளைப் படித்துவிட்டு உடனடியாக வாழ்த்தும் தங்களைப் போன்றோர்தான் எழுத்தாளர்களின் முதுகெலும்பே என்பதை நான் உணர்கிறேன்.
மிகச் சிறப்பான, அணிந்துரையொத்த திறனாய்வாகத்தான் இருக்கிறது தங்கள் விமரிசனம்.
வாழ்க வளமுடன்
ஜூனியர் தேஜ்
@Varadharajan...
சார், எனது விமர்சனத்தைப் படித்தபின், 'தாய்ப்பால் உறவு' நூலினை மிகவும் இரசித்துப் படிக்க முடியும் எனக் குறிப்பிட்டிருந்தீர்கள்!
எனது விமர்சனத்தையும் சிறப்பாக பாராட்டியுள்ளீர்கள்!
அழகிய கருத்துரை தந்தமைக்கு தங்களுக்கு மிக்க நன்றிகள்!
Post a Comment